"வந்து… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, விக்ராந்தும் உங்களை மாதிரி இருந்து இருக்கலாம், இப்படி எல்லாம் லைஃப் கிரிக்ட்டிகல் ஆகி இருக்காதுன்னு யோசிச்சேன்." என தயக்க குரலில் மெதுவாக கூறியவள், உடனேயே
"எனக்கு அவன் மேல எந்த அபிப்ராயமும் இல்ல. அவனோட ஞாபகம் கூட இல்ல தான். ஆனா ஏன் இந்த தாட் வந்துச்சுன்னு தெரியல ஆரவ். சாரி. உங்களை கல்யாணம் பண்ணிட்டு நான் அவனோட கம்பேர் பண்றது தப்பு தான…" என்றவளின் மடியில் ஒரு சொட்டு கண்ணீர் வந்து விழுக, அதே நேரம் அவன் மடியிலும் கண்ணீர் துளி ஒன்று சிதறியது.
அவள் பேச தொடங்கியதுமே தேகம் இறுகிப் போனது அவனுக்கு. பின், தன்னை சமன் செய்தவன், அவளின் நாடியைப் பற்றி நிமிர்த்த, அவளோ கண்ணை மூடிக் கொண்டு,