Jump to ratings and reviews
Rate this book

சித்தரஞ்சனி

Rate this book
சாதவாகனப் பேரரசின் சரித்திரத்தை அடிப்படையாக கொண்டது இந்த நூலில் உள்ள கதை. தாபோல் பிராந்தியத்தில் ஒரு பிசாசு உலவுவதாகச் செய்தி பரவியிருக்கும் நிலையில், சாதவாகனப் பேரரசின் அரசனான கௌதமிபுத்ரன் தபோலீஸ்வரனை தரிசிக்கச் செல்கிறான். அடுத்தடுத்து பல ஸ்வாரஸ்யமான திருப்பங்களுடன் கதை நீள்கிறது.

256 pages, Kindle Edition

First published January 1, 1980

2 people are currently reading
175 people want to read

About the author

Sandilyan

76 books390 followers
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
18 (25%)
4 stars
16 (22%)
3 stars
28 (40%)
2 stars
6 (8%)
1 star
2 (2%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Vinothkanna M.
58 reviews1 follower
January 23, 2021
சாதவாகனர் மற்றும் சாகர்களின் போர் பற்றிய கதை.. குறிப்பாக இந்த புத்தகத்தில் வரைந்த ஓவியர் பெரும் திறமையாக வரைந்துள்ளார்..
Profile Image for B. BALA CHANDER.
121 reviews4 followers
March 9, 2022
280 pages ::: in two sittings ,,,typical sandilyan novel. But no great twists ...second novel based on Maharashtra hero’s ,,,
Profile Image for Aargee.
163 reviews1 follower
April 8, 2024
As usual, awesome narration by சாண்டில்யன் ஐயா, but this time about Sathavahanas in Maharashtra
Profile Image for Aruna Arriane.
154 reviews16 followers
March 29, 2023
ராஜமாதா பாலஸ்ரீயின் ஆஞ்ஞையின்படி கௌதமிபுத்ரன் தன் சாதவாகன ராஜ்ஜியத்தை விஸ்தரிக்கும் முன்னர் தாபோல் பிராந்தியத்தில் தாபோலீஸ்வரனையும் சண்டிகாதேவியையும் தரிசிக்கச் செல்கிறான். அந்த ஊரிலோ ஒரு பூஜாரியைத் தவிர வேறு யாரும் காணோம். அதற்கு காரணம் அப்பகுதியில் உலவும் ஒரு பிசாசே காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், அது பைசாசத்தின் வேலை எல்லாம் இல்லை, ஒரு ஆசாமியின் சதி என்பதை அறிகிறான் கௌதமிபுத்ரன். பின்னர் அந்த சதியை, தன் புத்தி கூர்மையால் முறியடிக்கிறான். பிசாசாக உலவிய சித்தரஞ்சனியே தன் காதல் தேவதையாகிறாள்.

வில்லனான நாகபாணன் கௌதமிபுத்ரனை அடக்கமான ஒழுக்கமானவர்னு certificate தராரு. ஆனால் ஒருபக்கம் சித்தரஞ்சனியை ஏறக்குறைய molest பண்றது தெரியல. :D
Profile Image for Dineshsanth S.
192 reviews42 followers
July 22, 2016
மஹாஷத்ரபன் நாகபாணன் தாபோல் பிராந்தியத்தை தன்வசப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளை சதவாகன மன்னன் கௌதமிபுத்ர சத்கர்ணி எப்படி முறியடிக்கின்றான் என்பதை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல்.கதை தொய்வின்றி நகர்ந்து சென்றாலும் பரீட்சயமான கதைக்களமும் சுவாரசியமில்லாத திருப்பங்களும் பலவீனமான பாத்திரப் படைப்பும் (குறிப்பாக நாகபாணன்,சித்தரஞ்சனி பாத்திரங்கள்) நாவலுக்கு பெரிய மைனஸ் ஆக விளங்குகின்றன. இந்நாவலிலும் சாண்டில்யனின் போர் வர்ணனையை எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்.Just another ordinary historical fiction
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.