யாருக்கு தெரியும் காதல் கேட்காமலே வரும் என்று?யாருக்கு தெரியும் காதலித்த இருவரும் பிரிவார்கள் என்று?யாருக்கு தெரியும் விருப்பம் இல்லாத இருவர் ஒற்றை கயிற்றினால் இணைவர் என்று?யாருக்கு தெரியும் அவர்களுக்குள் வரும் புரிதல் தான் அன்பு என்று?யாருக்கு தான் தெரியும் உண்மையான அன்பு எப்போது யார் மூலம் கிடைக்கும் என்று?ஆம் இதெல்லாம் கலந்தது தானே வாழ்க்கை? வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு இன்பமும் துன்பமும் யாரை அதிகம் விரும்புகிறோமோ அவர்களாலேயே தான் நிகழ்கிறது.பழமொழி முதுமொழி எல்லாம் தாண்டி சொல் ஒன்று உண்டு.. நாம் விரும்புபவரை விட நம்மை விரும்புபவரை திருமணம் செய்தால் வாழ்க்கை நலமாய் அமையும் என்று.