அன்று அமாவாசை போலும்... இருள் சூழ்ந்த வானம்... எங்கும் கும்மிருட்டாக இருந்தது. களத்து மேட்டில் மல்லாந்து படுத்திருந்த அவனது விழிகள் இருண்ட வானை வெறித்து இருந்தது. இருண்ட வானில் அவன் என்ன தேடுகின்றானோ! ஒருவேளை அவனுக்கான வெளிச்சத்தைத் தேடுகின்றானோ! அவன் மனதில் பல குழப்பங்கள்... அவன் பெற்றோரை இழந்த போது கூட இப்படித் தவித்தது இல்லை. யாருமற்ற அநாதையாய் நின்ற போது கூட இப்படி வாழ்க்கை வெறுத்துப் போனது இல்லை. ஆனால் இன்று ஏனிந்த தவிப்பு! தான் செல்ல போகும் பாதை சரியா? தவறா? என்று அவனால் எளிதில் தீர்மானிக்க முடியவில்லை.
மகாபாரதத்தில் அர்ஜூனன் தன்னுடைய தாத்தா பீஷ்மர், குரு துரோணாச்சாரியார் எல்லோரையும் எதிர்த்து போரிட முடியாது கலங்கி நின்ற போது அவர் கிருஷ்ண ப