திருக்குர்ஆனைப் பொறுத்தவரையில் இறைவன், மனிதர்களுக்கு தன்னால் சொல்லப்படுகின்ற அறிவுரைகளை மனிதர்கள் இலகுவாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நிறைய உதாரணங்களை கூறுகின்றான். ஆனால் அது வெறும் இலக்கிய நயத்திற்காக மட்டுமில்லாமல் குர்ஆனில் பயன்படுத்தப்படுகின்ற உதாரணங்களின் கருத்துக்கள் நூறு சதவீதம் அறிவுக்குப் பொருத்தமானதாகவும், தர்க்கரீதியாக பொருந்திப் போவதாகவும் இருப்பதை நம்மால் உணர முடியும். திருக்குர்ஆன் கூறுகின்ற அரசியல், பொருளியல், அறிவியல், கருவியல், குற்றவியல் சட்டங்கள் இப்படி எந்த துறையை எடுத்துக் கொண்டு நாம் ஆய்வு செய்தாலும் அது நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தை தான் என்பது நிரூபணமாகும். அதே போன்று திருக்குர்ஆனில் கூறப்பட்ட