தமிழ்நாட்டின் இன்றைய முதல்வர் முக.ஸ்டாலின் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதற்கும் தவிர்க்க முடியாத இந்த நூற்றாண்டின் அரசியல் தலைவர். எப்போது அவர் முதல்வர்களின் முதல்வர் என்று வந்தாரோ அப்போதே அவர் இந்தியாவிலுள்ள சிறந்த அரசியல் தலைவர்களுள் ஒருவராகி விட்டார். தமிழகத்தில் அரசியல் தலைவருக்கான வெற்றிடம் இருக்கிறது என்ற சொல்லப் பட்ட நேரத்தில், மக்களின் ஒட்டு மொத்த ஆதரவை தேர்தலிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையின் போதும் பெற்று தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத ஆளுமையாகி விட்டார். கீழடி அகழாய்வின் போது எப்போது ,இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப் பட வேண்டுமென சொன்னாரோ அப்போதே அவர் உலகம் கவனிக்கும் ஒரு ஆளுமையாக வந்துவிட்டார்.