கோயம்புத்தூர்!நீலகிரி மலையிலிருந்து புறப்பட்டு வந்த குளிர்ந்த தென்றல்... நகரைத் தட்டித் தாலாட்டிக் கொண்டிருந்த... பொன் அந்தி மாலைப் பொழுது! நகரின் மத்தியில் அந்த மிகப்பெரிய பிரம்மாண்டமான பங்களா இருந்தது! பளிங்குக் கற்களாலும்... தேக்கு மரங்களாலும் பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டிருந்தது! அரண்மனையின் கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்த பங்களாவிற்குள் அந்த விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார் நுழைந்தது! போர்டிகோவிற்கு வந்து இளைப் பாறியது! கார் கதவைத் திறந்து கொண்டு அவன் இறங்கினான்!பாண்டிய நெடுஞ்செழியன்!இளம் தொழிலதிபர்!தந்தையின் தொழிலை இன்னும் பன்மடங்காக உயர்த்தி உச்சிக்குக் கொண்டு வந்து இருக்கிறான்! ஆறு வருடங்கள் நகரின் நெம்பர் &#