அன்று ஞாயிற்றுக்கிழமை..! வழக்கம் போல பூங்காவில் விளையாடாமல், அன்று மதியமே அவளின் வீட்டிற்கு வந்தவன், அந்த குட்டியை அழைத்துக் கொண்டு ஜெ.சி ரோடில் உள்ள ஃபன் வோர்ல்ட்க்கு சென்றான் விகர்த்தனன். சுரபி அங்கெல்லாம் வேண்டாம் என்று மறுக்க, “லுக் சுரபி....இந்த வயதில்தான் குழந்தைகள் நிறைய இடங்களை சுற்றி பார்க்க வேண்டும்... நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டும். அவளின் சந்தோசத்தை நாலு சுவற்றுக்குள் போட்டு பூட்டி வைக்காதே... என் ப்ரின்சஸ் எப்பவும் ஹேப்பியா இருக்கணும். உனக்கு பிடிக்கலைனா நீ இங்கயே இருந்துக்க. நான் குட்டிம்மாவை அழைத்துக்கொண்டு சென்று வருகிறேன்...” என்று அமர்த்தலாக சொல்ல, “ஹலோ மிஸ்டர்... என் புள்ளையை எப்படி வளர்க்கறதுனு எனக்கு தெரியும்.