சேலம்!பேரழகியான சம்யுக்தா முதுகலை கணிதம் படித்துக் கொண்டிருந்தாள்! இன்று தனது கடைசி தேர்வை எழுதிவிட்டு பெரும் மகிழ்வுடன் தன் பங்களாவிற்குள் நுழைந்தாள்!அன்று என்றுமில்லாத அதிசயமாய்... தொழிற்சாலையிலிருந்து அண்ணன் அஸ்வினும், தந்தை சங்கரனும் நேரத்திலேயே வீடு வந்திருந்தனர்!“டாடி...”என்ற கொஞ்சலோடு ஓடிப்போய் அவர் அருகில் அமர்ந்து... சிறு குழந்தையாய்... அவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள், சம்யுக்தா!“இன்னும் சின்னக் குழந்தைன்னு நினைப்பு டாடி, இவளுக்கு!”என்று அஸ்வின் சொல்லவும்...“என் டாடிக்கு நான் சின்னக் குழந்தைதான்!”என்று சங்கரனின் முகம் பற்றிக் கொஞ்சினாள்!தாய் மாதவி கொண்டு வந்த காபியை பருகி முடித்தாள்!“சம்யுக்தாம்மா...