அன்பு... அளவிட முடியாத சக்தியும் பெரும் வலிமையும் வாய்ந்தது.அந்த அன்பால் எப்பேர்பட்ட மலையளவு குணக் கேடனைக் கூட... மடுவளவாய் ஆக்கிவிட முடியும்! அன்புக்கு அடிமையாகாதோர் இவ்வுலகில் யாருமே இருக்கமாட்டார்கள்! அத்தகைய அன்பு நம்மிடையே மலையளவு குவிந்து கிடக்கிறது. நெஞ்சில் அள்ள அள்ளக் குறையாதது, அன்பு மட்டுமே! அந்த அன்பை பிறருக்கு வாரி வழங்குவதில் தயக்கம் காட்டக்கூடாது! தாராளமாய் அன்பை அனைவரிடத்திலும் விதைக்க வேண்டும்! அப்போதுதான் மீண்டும் அதே அன்பை ஆனந்தமாய் அறுவடை செய்ய முடியும்!அன்பு காட்டக்கூடத் தெரிய வேண்டும்! அன்பு காட்டுவது கூட ஒரு கலைதான்! அந்தக் கலையை அறிந்தவர்களை மக்கள் சமுதாயத்தில் விரல் விட்டு எண்ணி விடலாம்!அன்பை பகைவர்களிடமும் Ĩ