காட்டுக்குதிரைக் கன்றின் துள்ளல்; பற்ற வைத்த பட்டாசுப் பாய்ச்சல்; எதிர்ப்படும் எதையும் எத்தும் எள்ளல்; அனைத்தின் ருசியையும் அறியும் மேய்ச்சல்; துக்கத்துக்குச் சிரிப்பின் துணியை மாட்டல்; கோபம் என்றாலும் குறைவாய் கூறல்; பரந்ததைச் சிற்சில பதங்களில் காட்டல்; உள்ள இலக்கணத்தை உணர்வுக்காக மீறல்...
இப்படி ஒரு நடை எப்படி இருக்கும்? இந்த நூலின் நடை அதை விளக்கும்.
தனிமை, வெறுமை, தைரியமின்மை, பொறுமை இல்லா போக்கிரித்தன்மை - எல்லாம் எதிர்மறை. செல்வேந்திரன் எழுத்தினால் அவை அத்தனையும் அறிமுறை.
தனது கதை போல் செல்வேந்திரன் சொல்வது உங்கள் கதைதான். படியுங்கள், ஆமென்பீர். நகைச்சுவையாளன் போல் ஒரு தோற்றம். உள்ளே கிடப்பது அணையா நெருப்பு. ரசித்து ரசித்துப் படித்துவந்தாலும் முடித்து வைக்கையில் மூளைக்கு வேலை. பொழுதுபோக்குக்கு நான் உத்தரவாதம். இந்தப் புத்தகம் இரண்டாம் முறை படிக்கவும் பத்திரம் ஆகும்.
வாங்கிய 3 மணி நேரத்தில் கிட்டதட்ட இரண்டு அமர்வுகளில் படித்து முடித்தேன். ஹாசியம் நிறைந்த கட்டுரைகளாக தோன்றினாலும், நாம் சிந்திப்பதற்க்கும் கற்றுக்கொள்ளவும் நிறைய உள்ளன. வீட்டு வேலைகளைக் குறைத்துக்கொள்வது எப்படி? என்று ஒரு கட்டுரை எழுதிவிட்டார் இவர். ஆனால் இதனை வீட்டில் பொருள்களை வாங்கிக் குவிப்போரிடம் எப்படி சொல்வது?. அவர் அப்பா சொன்ன அறிவுரைகளாக கூறியவை யெல்லாம் சிறு தொழில் தொடங்குவோர் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம். நம் இந்திய கார்பரேட் நிறுவனங்கள் எப்படி அமேரிக்கவின் HR மேலாண்மை மாதிரிகளை ஊழியர் குறைப்புகளில்/layoff அறமல்லாமல் கடைப்பிடிக்கின்றன என்று கூறிசெல்கிறார்.
இந்த புத்தகத்தில் செல்வேந்திரன் வாசிக்கும் சிலபல புத்தகங்களை கூறியுள்ளார். எனக்கு தெரியாத சில புத்தகங்களை குறித்துக்கொண்டேன். (இப்படித்தான் வாசிப்பு விரிவடையும் போலும்).
எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை ‘விடடங்கு நாட்களில், இளம்ஸ் சகோதரிகளின் ஒருநாள்’. இக்கட்டுரையில் தனது குழந்தைகளின் ஒரு நாள் பற்றியும், அவர் குழந்தைகளின் நாட்களில் எப்படி பங்குகொள்கிறார் பற்றியும் அவர் கூறியவற்றை வளர்த்தெடுத்து (ஜெயமோகன் குழந்தைகள் பற்றி ஒரு 10 கட்டுரைகள் எழுதியிருப்பார். அதையும் துணைக்கொண்டு) ஒரு புத்தகமாகவே கொண்டுவர வேண்டும் என்று தோழர் செல்வேந்திரனிடம் அன்பு விண்ணப்பம் வைக்கிறேன்.
ஊரடங்கு காலத்தின் அனுபவங்கள் பற்றிய கட்டுரைகள். அவற்றை பற்றி பேசுவது மிக முக்கியம். பல துறைகளில் வருவாய் இழப்பு ஏற்பட்டு ஊர் திரும்பிய கூட்டம் ஒருபுறம், வேலை பளு ஏற்பட்டு சங்கை நெரிபடுவதை தினமும் அனுபவித்த ஒரு கூட்டம். நண்பர்கள், உறவினர்கள் பிரிவில் வாடும் மக்கள் இவற்றின் நடுவே இருக்கும் நாம் அதை கடக்க வேண்டும், எது முக்கியம் எது தேவையற்றது என்பதை உணர்த்திய தருணங்களை காட்சிப் படுத்தும் கட்டுரைகள்.
ஒரு கொடுமையான கால கட்டத்தில் தனது ஊழியர்களை கிளம்பச் சொல்லும் பெரு நிறுவனங்கள் ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையின் நியாய தருமம் கூட கடை பிடிக்கிவில்லை என்ற இடம் முற்றிலும் உண்மை, ஆனாலும் முதலாளிதுவத்தில் லாபம் மட்டுமே குறி, அதற்கு உன்னால் வழி இருந்தால் நீ இருப்பாய், இல்லை என்றால் உன்னை சுமப்பது நிறுவனத்திற்கு நட்டம் என்று உண்மை தெரிந்து பதினான்கு ஆண்டுகள் ஆகின்றன.
அழுதுக்கொண்டு இருக்காத உழது கொண்டு இரு என்பது நித்தயமான வாக்கு.பெரு முயற்சிகள் அடிப்படையான மனிதாபிமானம் மூலமும் இலக்கை அடையாலாம்,லாபம் மட்டுமே ஒரு வழியல்ல என்பது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டிய ஒன்று.
பல எழுத்தாளர்கள் கட்டுரைகளில் எட்டி பார்த்து செல்கிறார்கள், அவை அனைத்தையும் பகடியாகவும், நேர்மறையாக சித்தரிப்பது இப்பொழுது அரிதான விஷயமாகிறது.
வேஷ்டி அணிவது, அதன் ரகங்கள், தொட்டில் வேட்டி,கிட்சனில் நடக்கும் தணிக்கைகள், மனைவியை வைத்துக் கொண்டு பிள்ளையை டிவோர்ஸ் செய்ய நினைக்கும் நண்பன், கவிதையும் கற்கண்டும், இராயிரம் குழுவிகளுக்கான அகராதி,என்று எந்த ஒரு விஷயத்தையும் சொல்லும் பொழுது மென் நகை இல்லாமல் நம்மால் படிக்க இயலாது.
கொரோனவால் பாதிக்கப்படாத எவரும் இல்லை.அந்த கசப்பான நாட்களை ஏதேனும் ஒருவகையில், அட, அதுவும் நல்ல நேரம் தான் பா!! என்று உணர வைக்க ஒரு வழி, இந்த கட்டுரை தொகுப்பு.
அன்றாட வாழ்வில் நிகழ்ந்ததையும் தான் பெற்ற அனுபவங்களையும் கொண்டு பெரும் வெற்றுக் காலம் எனும் தலைப்பில் நாம் ஏதாவது ஒன்றை பெற வேண்டும் (வெற்று ஆகாமல் இருக்க வேண்டும்) என்று எழுதி இருக்கின்றார்....