Mr. Perfect professor க்கும், Mrs Naughty Student க்குமான காதல் கதை... கதையில் இருந்து ஒரு டீசர்
பாரதியும் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, 'இப்படியே போனா அண்ணா ஆசைப்பட்ட போல டிராப் அவுட் ஆய்டுவோம்...' என்று நினைத்துக் கொண்டே கையை ஜீன்ஸ் பாக்கெட்டில் விட்டு பிட்டு பேப்பரை எடுத்தாள். அவள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் அவ்விடத்தில் இருக்கவே இல்லை... ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே மேசைக்கு கீழே வைத்து பேப்பரை பிரித்தது மட்டும் தான் அவளுக்கு தெரியும்... எப்போது எங்கே இருந்து அந்த வசிஷ்டன் வந்தான் என்று அவளாலேயே கணிக்க முடியவில்லை... மேசையில் பேனையால் தட்டினான்... அவளுக்கு உலகமே தலைக்கீழாக சுழலும் உணர்வு... அவன் பூட்ஸ் ஷூவை வைத்தே அது வசிஷ்டன் தான் என்று அவள் கண்டறிந்து விட்டாள்