தொலைபேசியின் மறுமுனையில் நரசிம்ம சாஸ்திரிகள் சொன்னதைக் கேட்டு லேசாய் நெற்றியிலும், பிடரியிலும் வியர்த்தான், பிரசன்னகுமார். கார் இப்போது பச்சைக்காக சிக்னலில் நின்றிருந்தது.“என்னங்க... தம்பி... பேச்சையே காணோம்...?”“அது...வந்து...வந்து...”“எனக்குத் தெரியும் தம்பி... நீங்க என்ன சொல்லவர்றீங்கன்னு... எனக்கு நல்லாவே தெரியும்! இது ‘கம்ப்யூட்டர்’ யுகம். இந்த காலத்துல போய் ஜோதிடம், ஜாதகம் இதையெல்லாம் நம்ப நான் தயாராய் இல்லை... அந்த ஓவியாவைத்தான் கட்டிக்கப் போறேன்னு சொல்லவர்றீங்க இல்லையா...?”“இதோ பாருங்க... நான் இப்போ கார் ஓட்டிகிட்டு இருக்கேன். காரை ஓட்டிகிட்டே செல்போனில் பேச முடியாது. நான் வீட்டுக்குப் போனதும் உங்ககிட்டே பேசுறேன்...”“தம்பி...