அருணா பிறந்ததிலிருந்து மணமுடிக்கும்வரை நடந்த அத்தனை சுவையான சம்பவங்களையும் சின்னச் சின்ன நிகழ்வுகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார். எத்தனை சின்ன நிகழ்வாக இருந்தாலும் அது பெரிய வாசலை வாசகருக்குத் திறந்துவிடுகிறது. புகைப்படக்காரர் பின்னுக்குப் பின்னுக்கு நகர்ந்து விரிவாகவும் துல்லியமாகவும் படம் எடுப்பதுபோல அருணாவின் எழுத்து அவர் சொல்லவந்த காட்சிகளைக் கண்முன்னே நிறுத்துகிறது.
- அ. முத்துலிங்கம்
இளமை நினைவுகளை எழுத முற்படும்போது, நினைவேக்கத்தின் தழுதழுப்பும் இழந்தவை பற்றிய பொருமலும் தவிர்க்கமுடியாமல் வெளிப்படும். அருண்மொழியின் கட்டுரைகளில் அது நடக்கவில்லை . துல்லியமான விபரங்களுடன், சரளமான, மிகையும் அலங்காரமும் அற்ற நேரடி நடையும் இந்தக் கட்டுரை வரிசையின் தனித்துவம். சமனமான, முதிர்ந்த நடை.
அருண்மொழிநங்கை (மார்ச் 6, 1970) விமர்சகர், எழுத்தாளர். தன்னுடைய வலைப்பூவில் தன்வரலாற்றுக் குறிப்புகளை இலக்கியத் தரத்தில் எழுதியதால் பெரிதும் கவனிப்புக்குள்ளானவர். அந்தக் கட்டுரைகள் 'பனி உருகுவதில்லை’ என்ற தலைப்பில் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளன.
சிறிய வயது அன்றாடங்களை இவ்வளவு துல்லியமாகவும் சுவாரஸ்யமாகவும் எந்த இடத்திலும் தொய்வு சலிப்போ ஏற்படாமல் விறுவிறு என்று சொல்லி செய்யும் இவருடைய எழுத்தின் நடையே இந்த புத்தகத்திற்கான வெற்றி.
I wanted to like it because many have wholeheartedly recommended it for its fresh and authentic writing. But this didn't work for me. It felt like a work of carefully curated authenticity. It has some beautifully chiselled sentences to evoke certain emotions and paint some fantastic portraits. I would have enjoyed it a lot in a work of fiction. But it was tough for me to appreciate it as a memoir. Give it a try, YMVV.