அவள் மீதான ஈர்ப்பு ஒன்று அவனுக்குள் உருவாகிக்கொண்டு இருப்பதை அறிந்தேதான் இருந்தான். அது எந்தப் புள்ளியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று தெரியாமல் இருக்க அவன் சிறுவனும் அல்ல. இருந்தபோதிலும், அதைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் அவனால் முடிந்திருந்தது. கடைசிவரைக்கும் கூட அப்படியேதான் இருந்திருப்பான். இன்றைய அவன் மனது அந்தளவில் உறுதியானது; திடமானது.
கூடவே, செய்த தப்புகள் எல்லாம் உப்பு மூட்டைகளாக அவன் தோளிலேயே கனத்துக்கொண்டு இருக்கையில், அவளின் முன்னே சென்று உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிடவும் அவனால் முடியாது. சொல்லவும் நினைத்திருக்கவில்லை.
ஆனால், அவனுடைய மொத்த உறுதியையும் அவளின் ஒற்றைக் கண்ணீர் துளி உடைத்து