Essential read for Caste Hindus
It's a best work. இந்த புத்தகம் ரொம்ப நெருக்கமா, உணர்வுப் பூர்வமா, கவித்துமா இருந்தது. "கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்" chapter படிக்கும் போது எனக்கு வந்த கோவமும் அழுகையும் கலந்த உணர்ச்சி என்னால தாங்கிக்க முடியல. அந்த உணர்ச்சி பல இடங்கள்ல எனக்கு இந்த தன் வரலாற படிக்கும் போது வந்துச்சு, உடனே புத்தகத்த மூடிடுவேன் ஆனாலும் படிச்ச சொற்கள் evocative-ஆ அந்த சம்பவத்தோட காட்சியையும் உணர்வையும் மனசுல அழுத்தும். கு.கோவிந்தராஜன் chapter படிக்கும் போது goosebumps-ஆ இருந்துது. "ஆனந்த விகடனைக் கிழித்த அறை நண்பன்" chapter-ல ஒரு சாதிவெறியனுக்கு திருக்குமரன் குடுத்த reply-அ படிக்கும் போது பரமானந்தமா இருந்துச்சு. "இராண்டாம் ஏவாளின் சில குட்டிக் கவிதைகள்" chapter படிக்கும் போது ரொம்ப exhilarating-ஆ இருந்துச்சு. "பறக்கடவுள்" chapter இறுதில இருக்குற சுகிர்தராணி கவிதை படிகக்கும் போது ரொம்ப devastating-ஆ இருந்துது. திருக்குமரன் சந்திச்ச சாதி இழிவுகளை படிக்கும் போது பெரிய வேதனைய குடுத்தச்சு, ஆனா திருக்குமரன் அவரோட அறிவுக் கூர்மையால திருப்பி எதிர்த்து அடிக்கும் போது, எனக்குள்ள ஒரு பெரிய எழுச்சி உண்டாச்சு. இந்த தன் வரலாற படிச்ச பிறகு அவர் பெரிய மேல admiration-னும், அன்பும் உருவானுச்சு, அதே சமயத்துல பொறாமையாவும் இருக்கு, காரணம் அவருக்கு இருக்கும் பெரும்திரளான நண்பர்கள். வெளிபடையா எல்லாரோட பெயரையும் திருக்குமரன் குறிப்பிட்டது இந்த புத்தகத்த ரொம்பவே authenticate-ஆ ஆக்கியிருக்கு.