Jump to ratings and reviews
Rate this book

இரவுக்கு முன்பு வருவது மாலை

Rate this book
தமிழின் மிக முக்கியமான சிறுகதையாசிரியர்களுள் ஒருவரான ஆதவனின் சிறுகதைத் தொகுப்பு இது. சந்தேக மில்லாமல் ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழுத்து அவருடையது. தனி மனிதனின் பிரச்னைகளை, தேடல்களை, மனக்கொந்தளிப்புகளை, அற்ப ஆசைகளை, அவை தீராதபோது எழும் ஆதங்கத்தை, குமுறலை - ஆதவனைப்போல் நேர்த்தியாகப் பதிவு செய்தவர்கள் தமிழில் குறைவு.

This collection of short stories by Aadhavan is a high watermark in the annals of Tamil fiction. He brought a new sensibility to this genre of writing dominated until then by predictable situations peopled by cardboard figures rather than flesh and blood individuals. Come and enter these magical pages written by one of the most sensitive contemporary writers in Tamil. We promise you that at the end of it, you will yearn for more.

7 pages, Audiobook

First published August 5, 1998

3 people are currently reading
178 people want to read

About the author

Aadhavan

24 books22 followers
Also known as ஆதவன் (Tamil).

Sundaram was born in Kallidaikurichi in Tirunelveli District and obtained his education in Delhi. He worked briefly for Indian Railways. Later he joined the National Book Trust of India as an assistant editor. He married Hema in 1976. He started his literary career as a writer of stories for children in the magazine Kannan. He wrote under the pseudonym Aadhavan (lit. The Sun). His most noted work was the novel En peyar Ramaseshan (lit. My name is Ramaseshan), which was translated into Russian by Vitaliy Furnika and sold over a hundred thousand copies. In 1987, he drowned while swimming in a river at Shringeri. He was awarded the Sahitya Akademi Award for Tamil posthumously for his collection of short stories Mudalil iravu varum (lit. First comes the night)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
20 (42%)
4 stars
21 (44%)
3 stars
5 (10%)
2 stars
1 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Ananthaprakash.
83 reviews2 followers
February 16, 2025
இரவுக்கு முன் வருவது மாலை - ஆதவன்

ஏற்கனவே ஆதவனின் ஒரு சில சிறுகதைகளை அங்கொன்றும், இங்கொன்றுமாக வாசித்ததிலிருந்தும், அதன் பிறகு அவரை தேடியதிலிருந்து உணரமுடிந்தது, ஆதவன் பெரும்பாலும் - நடுத்தர வர்க்கத்திலிருந்து சற்று மேம்பட்ட வர்க்க மனிதர்களின் வாழ்க்கையும், பொதுச் சமூகத்திலிருந்து அந்நியப்படுதலும் அதனால் அவர்கள் மனதில், வாழ்க்கைச் சூழலில் ஏற்படுகிற நுட்பமான உணர்வுகளையும், மனித மனதின் ஆழத்தில் ஒளிந்து கிடக்கிற ஆழ்மன உணர்வுகளையும் தான் தன்னுடைய கதையின் கருவாக வைத்து எழுதி இருக்கிறார் என்று.

இரவுக்கு முன் வருவது மாலை குறுநாவலும் - அப்படியான மேம்பட்ட வர்க்க ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே ஆன உறவுச் சிக்கல், அவர்களின் மன ஓட்டங்களில் உள்ள வேறுபாடு, நுட்பமான அக உணர்வுகள், சமூக கட்டமைப்பில் இருந்து தனித்து இருப்பதாக நினைக்கும் போக்கு, தங்களுக்கு தாங்களாகவே உருவாக்கிக் கொள்ளும் போலி உருவம் இப்படியென்று பலவற்றைப் பேசுகிறது.

பரபரப்பாய் சாதா இயங்கிக்கொண்டு இருக்கும் மனிதத் திரளில், ட்ராஃபிக் சிக்னல்களின் அதிகாரத்திற்கும், ஆணைக்கும் அதன் கண் சிமிட்டலுக்கும் அடி பணிந்து மிக வேகமாய் அதைக் கடந்து செல்லும் மனிதர்கள் மத்தியில், அப்படியான எந்தப் பரப்பும் இல்லாமல், சமூகத்தின் கட்டுப்பாட்டை மீறியதாக நிதானித்து அதைப் பார்த்துக் கொண்டு இருப்பதில் இருந்து தொடங்குகிறது கதையின் நாயகனுக்கும், நாயகிக்கும் இடையேயான அறிமுகமும், உரையாடலும்.

அங்கிருந்து எந்த ஒரு முன் அறிமுகமும் இல்லாமல் தொடங்குகிற அவர்கள் உரையாடலில் அவ்வளவு சுவாரஸ்யமும், விளையாட்டுத் தொனியும், மயக்கமும். வாசிக்க வாசிக்க நமக்கும் அதே மயக்க நிலை தொத்திக் கொள்கிறது.

இருவரின் உரையாடலிலும் ஒருவர் இன்னொருவரின் அந்தரங்க உலகத்தையும், நிர்வாண இயல்புகளையும் பார்க்கவும், உணரவும், அதைப் உணர்ந்து கொண்ட பின் ஏற்படும் சிறு அனுதாபமும் அதே சமயத்தில் தன்னுடைய பலவீனங்களை வெளிப்படுத்துவதும் பின் தானே அதிலிருந்து நகர்ந்து விலகுவதும் என ஒரு சமயத்தில் இருவரும் ஒரு போலி விளையாட்டை விளையாடிப் பார்க்கின்றனர்.

கிட்டத் தட்ட மயக்க நிலையில் தொடங்கி, சில நட்பு சீண்டல்கள், சிரித்துப் பேசுகிற உரையாடல்கள், முதல் தொடுதல்கள், செல்ல தீண்டல்கள், காதல் மயக்கங்கள் என முற்றிலும் கனவுலகத்தில் நடப்பது போன்றான அவர்களின் உரையாடல் - கொஞ்சம் கொஞ்சமாக அதன் பாவனை விளையாட்டைக் களைந்து, தங்களது போலி உருவங்களைக் களைந்து, ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் அறியவும், ஒருவர் ஒருவர் தன்னை வெளிப்படுத்தவும், விலகவும் நினைக்கும் ஆண்-பெண் மனம் சார்ந்த நுட்பமான இடத்திற்குக் கதை கொஞ்சம் கொஞ்சமாக நகர்கிறது.

சுத்தி சதா இயங்கிக் கொண்டிருக்கும் உலகத்தில் இருவரும், அது எல்லாவற்றிலிருந்தும் தனித்து விடப்பட்ட மனதுடனும், குழப்பத்துடனும், குறுநகையுடனும், சிறிய சீண்டலும், ஈர்ப்பும், மயக்கமுமாய் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடங்கிய உரையாடல் - மயக்கமான மாலையில் இருந்து இரவு நோக்கி பொழுது நகர்வது போல் மெதுவாக ஒருவரை ஒருவர் அறியவும், வெளிப்படுத்தவும் இறுதியில் இருவரும் அணிந்து கொண்ட போலி பிம்பங்கள் யாவும் அழிந்து, அவர்களின் ஆழ்மன சிக்கல்கள், கடந்த கால நினைவுகள், இழப்புகள் நோக்கி நகர்ந்து இறுதியில் எல்லா மயக்கங்களும் களைந்து கணங்களை மட்டும் நினைவில் நிறுத்துகிற இடத்திற்கு நகர்கிறது அவர்களின் உறவு.

இறுதியில் எந்த ட்ராஃபிக் சிக்னலுக்கு எதிரான நிதானத்தில் தொடங்கியதோ அதே ட்ராஃபிக் சிக்னலை விரைவாகக் கடப்பதாகக் கதை முடிகிறது. ஒரு வேலை அது மேலும் மேலும் ஒருவரை ஒருவர் அறியும் முயற்சியாய் இருக்கலாம் இல்லை இன்னமும் போலிகளை அணிவதாய் இருக்கலாம்.

மொத்தமாய் இரவுக்கு முன்பு வருவது மாலை ஆண், பெண் ஈர்ப்பையும், அந்த உறவுக்குள் நிகழும் சிக்கல்களையும், மன அடுக்குகளையும் அதன் நுட்பங்களையும் நேர்த்தியாய் காட்சிப் படுத்திய ஒரு குறுநாவல்.

இறுதியாக ஆதவனின் தொகுப்பிற்கு தி. ஜானகிராமன் எழுதிய வாழ்த்துரையில், தமிழில் நுண்ணுணர்வோடு எழுதுகிற பத்து,  பன்னிரண்டு பேர் இருப்பார்கள் என சில கூறுகளை வைத்து அதில் ஆதவனையும் ஒருவராய் வைக்கிறார். அந்த நுட்பத்தை வாசிப்பிலும் உணர முடிகிறது.

"காதல் மிக அழகானது நமக்கு அது கிடைக்கும் பட்சத்தில்" என்கிறேன்.
"எப்போது, அல்லது எங்கே அது கிடைக்கும்?"

"எப்போது எங்கு வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கக்கூடும். அதேசமயத்தில் எல்லாருக்கும் கிடைத்துவிடுவதுமில்லை. கிடைத்தவர்கள் பலர் அதை உணர்வதில்லை. உணர்ந்தவர் பலர் அதைப் பெறுவதில்லை."

"கடவுளைப் பற்றி ஆஸ்திகர்கள் சொல்வதுபோல அல்லவா இருக்கிறது!"
"ஆமாம். இரண்டுக்கும் ஒற்றுமைகள் உண்டு."

"கடவுள் வழிபாட்டை ஒரு 'ரொமான்டிக் எஸ்கேப்'பாகச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். அல்லது ஏதோ ஒன்றுக்கான ஸப்ஸ்டிட்யூட்டாக..."

"செயல்கள் முதலிலும் விளக்கங்கள் பிறகும் வருகின்றன. வாழ்வது முதலிலும் அதன் அர்த்தம் பிறகும் வருகிறது...❤️
Profile Image for Karthick.
369 reviews121 followers
June 16, 2025
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு - இதுதான் இப்படித்தான் என நிர்பந்திக்கும் சமூக கட்டமைப்பிடமும், கலாச்சார புனிதத்திடம் சிக்கிக்கொண்டு தவிக்கின்றன. எதார்த்தம் அங்கு தோற்றுப்போகிறது. வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் என்பது எடுபடவில்லை.

ஒரு ட்ராபிக் சிக்னலை கடக்கும் ராஜசேகரன், சாலையோர எதிரில் சிவப்பு புடவையும் வெள்ளை ரவிக்கையுமாக அவளை கண்கொட்டாமல் பார்க்கிறான். எதார்த்தமாக உரையாடலாக ஆரம்பித்து, நட்பில் உழன்று, புன்முறுவலும், தொடுதலும், சீண்டலும், தீண்டலுமாக காதலில் கரைந்து, மெல்லிய காமமும் இழையோடியபடி அவர்கள் அவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு உரையாடல் இப்படி :

"காதல் மிக அழகானது நமக்கு அது கிடைக்கும் பட்சத்தில்" என்கிறேன்.
"எப்போது, அல்லது எங்கே அது கிடைக்கும்?"
"எப்போது எங்கு வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கக்கூடும். அதே சமயத்தில் எல்லாருக்கும் கிடைத்துவிடுவதுமில்லை. கிடைத்தவர்கள் பலர் அதை உணர்வதில்லை. உணர்ந்தவர் பலர் அதைப் பெறுவதில்லை."
"கடவுளைப் பற்றி ஆஸ்திகர்கள் சொல்வதுபோல அல்லவா இருக்கிறது!"
"ஆமாம். இரண்டுக்கும் ஒற்றுமைகள் உண்டு."
"கடவுள் வழிபாட்டை ஒரு 'ரொமான்டிக் எஸ்கேப்'பாகச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். அல்லது ஏதோ ஒன்றுக்கான ஸப்ஸ்டிட்யூட்டாக..."

முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் சிக்கி தவிக்கும் இவர்களின் உணர்ச்சிகள் - ஒரு இருளும் வராத ஒளியும் நிறையாத இரண்டுக்கும் இடையிலான ஒரு மாலை பொழுது போன்றது. சிக்னலில்ஆரம்பித்து சிக்னலில் முடிகிறது இவர்களில் முடிவற்ற கதை.
Profile Image for Meenakshisankar M.
272 reviews10 followers
August 12, 2019
For people with a religious bend of mind, going to a particular temple might be an annual pilgrimage. For me, reading Aadhavan’s works is the annual pilgrimage. Especially this collection of short-novels (novellas) by Aadhavan is my favorite book of all time. (I mostly carry it with me wherever/whenever I travel). What he has achieved in the titular short-novel and in the next one very appropriately titled “siRagukaL” is mind-blowing. Especially, the female frame of mind that he has brilliantly revealed in siRakugaL is astonishing. If I can ever write one page like what Aadhavan has effortlessly achieved page after page in this book, I would die a happy writer.
Profile Image for Selva.
39 reviews8 followers
October 30, 2017
One of the fabulous writing excellence, i felt when i read this book. It is a collections of short stories which can picture the thought processes of men and women. Nature and characters of men and women clearly portrayed in an astute realistic sense. The author is more realistic and unbiased. He is in fact, genius in portraying people in Indian social structure with philosophical visualizations.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.