இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யாருமில்லை.ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அறவழியில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆயுதப் போராட்டம்தான் ஒரே தீர்வு என்று, இந்தியாவை விட்டு ரகசியமாக வெளிர்படும் வகையில் வெளிநாட்டில் இருந்த படியே தனி ஆயுதப்படையையும், தனி அரசாங்கத்தையும் அவரால் உருவாக்க முடிந்தது.
போஸ், விமான விபத்தில் இறந்து போனார் என்று பரவலாகச் சொல்கிறார்கள். இல்லை, அவர் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்கிறார்கள் சிலர். சீனாவில் அவரை நேரில் பார்த்துப் பேசியதாகச் சிலர் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். மாறுவேடத்தில் அவர் இந்தியாவில் சுற்றிக்கொண்டிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. போஸ் விவகாரத்தை ஆராய அமைக்கப்பட்ட ஒவ்வொரு கமிஷனும், ஒவ்வொரு விதமான முடிவை முன்வைக்கிறது. இந்த நிமிடம் வரை போஸ் ஒரு புதிர். புலப்படாத மர்மம்.
இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றில் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, தீரமும் விடுதலை வேட்கையும் கொண்ட தனி ஒரு பாகம்.
ஷா நவாஸ் கமிட்டி, ஜி. டி. கோசலா கமிட்டி, N .C முகர்ஜியின் கமிட்டி என பல கமிட்டிகள் கொண்டு ஒவ்வொரு முறை ஆராய்ந்த போதும் வேறு வேறு முடிவுகளை வெளிகொணர்ந்த மர்ம மரணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மரணம். தேஹ்ரடுன் துவங்கி ஜப்பானிய கோவிலில் இருந்த ஒரு கைப்பிடி அஸ்திவரை அனைத்துமே கட்டுகதைகள் எனவே தோன்றுகிறது. இன்றல்ல என்று அவிழ்ந்தாலும் இந்த மர்ம முடிச்சு இந்திய அரசியலின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்டது. மருதனின் இந்த புத்தகம், நேதாஜியின் வாழ்வை பற்றிய ஒரு டாகுமெண்டரி.
சதியோ விதியோ.. போஸ் மரண ரகசியம் வெளி வந்தால் நாடு தாங்காது என்பது மட்டும் உண்மை. தன்னிகரற்ற உண்மையான போராளிக்கு மலை மேல் ஒளி போல் ஏற்படவேண்டிய முடிவு மலையடிச் சிதை போல் யாரும் அறியாமல் முடிந்தது. அத்தகையவர்க்கு இந்த மரணமும் மர்மமும் தகுதியற்றது. மருதனின் ஆராய்ச்சியும் எழுத்தும் தைரியமும் போற்றத்தக்கது.
Nethaji, the most revered of freedom fighters, a man with a great vision. Had he been victorious, he would have changed the fate of India for sure. His vision and the remarkable effort to build an army to fight the British Empire is unimaginable during his time and he achieved the feat. This book has a lot of historical facts about this great person in the history of Indian Independence. The author has taken the effort to gather references from various sources and has generally done a good job, however for the reader it has some discontinuity at some places. The reading flow is not even. In spite of that, it was a very good read.
Subash was my childhood hero. But, apparently I didn't know most of his life history. He is one of the great hero, IMO. This book is greatly written. Easy language, interesting story telling, like a thriller.
A good read, Netaji was an unsung hero of Indian freedom movement, we have heard a lot of stories and rumours about him and this books helps greatly with factual data to know him more
This is an average book with historical facts. Don't expect too much details on every thing. It explains everything briefly, if some one want a quick read about Nataji's story then its good read. Its worth reading.