Jump to ratings and reviews
Rate this book

மால்கம் எக்ஸ் [Malcolm X]

Rate this book
திருடியிருக்கிறார். காலணிகளுக்கு பாலீஷ் போட்டிருக்கிறார். தெருமுனையில் நின்று கஞ்சா விற்றிருக்கிறார். வீடு புகுந்து கொள்ளையடித்திருக்கிறார். துப்பாக்கிக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்திருக்கிறார். எதுவும் செய்யலாம். தவறில்லை. இதுதான் மால்கமின் ஆரம்ப காலக் கொள்கை. சுயலாபத்துக்காகச் செய்ததை ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் உரிமைக்காக மாற்றியபோது, மால்கம் எக்ஸ் ஒரு ஹீரோவானார். தலைவர் ஆனார். கோடிக்கணக்கான கறுப்பின மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஆனார்.

மார்ட்டின் லூதர் கிங் சாத்வீகமாகப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் தன் முஷ்டியையும் குரலையும் உயர்த்தி வெள்ளையர்களுக்கு எதிராக ஆவேசத்துடன் போர்ப் பிரகடனம் செய்தார் மால்கம். அமெரிக்காவை உலுக்கிய மிக உக்கிரமான பிரகடனம் அது. மால்கம் நிகழ்த்திய தொடர் யுத்தம் வெள்ளையர்களைக் கிலி கொள்ளச் செய்தது. ஆயிரக்கணக்கான பக்கங்களை மால்கமுக்காக ஒதுக்கி குற்றச்சாட்டுப் பதிவு செய்தது அமெரிக்க உளவுத்துறை. தவிரவும், பகிரங்கமாகப் பல கொலை மிரட்டல்கள். ‘எச்சரிக்கையுடன் இருங்கள்’ என்று அறிவுரை சொல்லப்பட்டபோது, கத்தியின் வீச்சுபோல் இருந்தது மால்கமின் முழக்கம். ‘ஒரு பெருச்சாளியைப்போல் கட்டிலுக்கு அடியில் நூறு ஆண்டுகள் பதுங்கிக் கிடப்பதற்குப் பதிலாக, சிறுத்தையைப்போல் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் பாய்ந்து வாழ்ந்து உயிரைக் கொடுப்பேன்’.

176 pages, Paperback

Published January 8, 2009

9 people are currently reading
75 people want to read

About the author

Marudhan

39 books84 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
24 (47%)
4 stars
18 (35%)
3 stars
8 (15%)
2 stars
1 (1%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
60 reviews6 followers
July 15, 2023
ஒரு கள்ளக்கடத்தல்க்காரன் கறுப்பின மக்களுக்காக போராடும் தலைவனாக எப்படி மாறினான் என்னும் கதையிது.
மால்கம் எக்ஸ் மற்ற போராளிகளை போல சிறுவயது முதலே மக்களுக்காக போராடும் எண்ணம் கொண்டவர் இல்லை. சிறு வயது முதலே வெள்ளையர்களிடம் அடிமைத்தனத்தை அனுபவித்தாலும் ஒரு இடத்தில் தன்னால் வெள்ளையர்களை எதிர்க்க முடியாது என நினைத்தார்.
14 வயதிலேயே படிப்பை விட்டு ஷூ பாலீஸ் போடும் வேலைக்கு சென்றார். பிறகு அங்கிருந்து கஞ்சா விற்கும் ஆட்களிடம் பழக்கம் கிடைத்து கஞ்சா விற்க துவங்கினார். 20 வயதிற்குள்ளாக கஞ்சா குழுவிற்குள் ரெட் எனும் பெயரில் முக்கியமான கடத்தல் காரராக இருந்து வந்தார். 21 வயது வரை போதைப்பொருள், பெண்கள், மது என தனது வாழ்வை முழுமையாக வாழ்ந்து வந்தார்.
இதன் பின்னர் 21 வயதில் துப்பாக்கி வாங்கினார். அதை கொண்டு தன்னை தாழ்வாக நடத்தும் வெள்ளையர்களிடம் வஞ்சம் தீர்க்க நினைத்தார். வெள்ளையர் வீட்டில் கொள்ளையடித்தார். ஆனால் அதில் மாட்டிக்கொண்டார்.
அவருக்கு 10 வருடம் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. சிறைக்கு சென்ற மால்கம் அங்கு துப்பாக்கியை விடவும் பலமான ஒரு ஆயுதத்தை பார்த்தார். புத்தகங்கள், ஆம் அங்கு நூலகம் இருந்தது. அங்கு உள்ள புத்தகங்களை சும்மா படிக்க துவங்கிய மால்கம் அதன் மூலம் கருப்பர்களின் வரலாற்றை அறிந்தார். தொடர்ந்து 10 வருடம் தனது கண் பார்வை கோளாறு ஆகும் வரை பல இலக்கியங்களை படித்துவிட்டு 31 ஆவது வயதில் ஒரு போராளியாக வெளியே வந்தார் மால்கம்.
கருப்பர்களுக்கு ஆதரவான ஒரு இஸ்லாம் இயக்கத்தில் சேர்ந்து தொடர்ந்து வெள்ளையர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை துவங்கினார். காலம் முழுக்க வெள்ளையர்களை திட்டி தீர்த்தார். வெள்ளையர் அனைவரும் மோசமானவர்கள் என்பது அவரது எண்ணம். ஒரு வெள்ளையர் உங்களிடம் கனிவாக பேசினால், நல்லவன் என கூறினால் கூட நம்பாதீர்கள் என மால்கம் பேசியபோது, அதற்கு எதிரான ஒரு வாதத்தை மார்டின் லூதர் கிங் பேசி வந்தார்.
வெள்ளையர்களும், கருப்பர்களும் சமரசமாக வாழும் அமெரிக்காவை உருவாக்க வேண்டும் என மார்ட்டின் நினைத்தார். அதனால் இருவருக்கும் இடையே வன்மத்தை ஏற்படுத்த அவர் விரும்பவில்லை.
ஆனால் வாழ்வில் வெள்ளையர்களால் அதிக பாதிப்புகளை கண்ட மால்கம் அதற்கு உடன் படவில்லை. அவர் அனைத்து வெள்ளையர்களையும் திட்டினார். இதனால் அவருக்கு ஆதரவாக இருந்த வெள்ளையர்கள் கூட அவரை விட்டு விலகினர். இறுதியாக தான் தவறான வழியில் சென்று கொண்டுள்ளோம். இந்த பாதை சமத்துவத்தை ஏற்படுத்தாது என்பதை அறிந்த சில நாட்களில் மால்கம் எக்ஸ் கொல்லப்பட்டார். அவர் உடலில் இருந்து 16 தோட்டாக்கள் எடுக்கப்பட்டன.
எப்போதும் வீரத்தின் பின்னே ஓடுகிற ஒரு கூட்டமாகவே மனிதன் இருப்பதால், சமத்துவத்தை பற்றி அவர்கள் யோசிப்பதில்லை. ஒரு சாரார் நீதிக்காக போராடும்போது இன்னொரு சாராரை நீ மோசமானவன், கேடு கெட்டவன் என திட்டிக்கொண்டே இருப்பது ஒரு வீரமான செயலாக இருக்கலாம். ஆனால் அது இரு சாராருக்கு இடையே என்றைக்குமே சுமூகமான உறவை ஏற்படுத்த போவதில்லை. இதை மால்கம் எக்ஸ் புரிந்துக்கொள்வதற்கு வெகு நாட்கள் ஆகியுள்ளது.
இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மால்கம் எக்ஸ் பேசுவார் அப்போது #Notallwhiteman என்கிற ஒரு வாதத்தை வைப்பார். அனைத்து வெள்ளையர்களும் மோசமானவர்கள் என்னும் என் கருத்து தவறானது. அனைத்து மனிதர்களிலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர். இனி நான் கருப்பர்களை மோசமாக நடத்தும் வெள்ளையர்களை எதிர்த்தே போராடுவேன் என கூறுவார்.
அதற்கு பிறகு அவர் காரில் போகும்போது ஒரு வெள்ளை பெண் கைக்கொடுப்பாள்.
“என்ன மால்கம் இப்போதாவது மனம் மாறினீர்களே! இனி எங்களுக்கு கை கொடுப்பீர்கள் தானே” என கேட்பார்.
மால்கமிற்கு மிகப்பெரும் மன கஷ்டமாகிவிடும்.வெள்ளையர்களிடம் இப்படி ஒரு வெறுப்பை வெளிப்படுத்தியது குறித்து வருத்தப்படுவார்.
இந்த புத்தகம் மால்கம் எக்ஸ் வாழ்க்கையை சுவாரஸ்யமாக நமக்கு சொல்லும் ஒரு புத்தகம்.
Profile Image for Thamarai Selvam  Ekambaram .
12 reviews
Read
May 22, 2025
மால்கம் எக்ஸ் முழு வரலாற்றையும் படிக்க நேரம் குறைவாக இருப்பவர்கள் அல்லது நான் பெரிய புத்தகப் புழு இல்லை அதனால் குறைவான பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் எனக்கு சரியாக இருக்கும் என்றால் இதுதான் உங்கள் காண புத்தகம்

மால்கம் எக்ஸ் அமெரிக்காவில் நடந்த கருப்பின வெறுப்பையும் வேறுபாட்டையும் உடைத்தெறிய போராடிய ஒரு கருஞ்சிறுத்தை.... அந்தக் கருஞ்சிறுத்தை ஒரு சகாப்தம் அது என்றுமே முடியாது.

உலகம் முழுவதும் போராளிகளாக கருதப்படும் காஸ்ட்ரோ சேகுவாரா போன்றவர் தான் மார்க்கம் எக்ஸ் ஆனால் இந்தியாவில் அவரைப் பற்றி பெரிதளவில் யாருக்கும் தெரியவில்லை ஏனென்றால் இவர் கம்யூனிசத்தின் மீது நம்பிக்கை ஏற்று வராக இருந்தார்.

மருதன் இந்த புத்தகத்தை எழுதிய முறை மிகவும் எனக்கு பிடித்திருந்தது புத்தகத்தின் ஆரம்பத்தில் மால்கமிக்ஸ் பிறப்பை எல்லாம் பற்றி பேசாமல் அவரின் கடைசி நொடிகளைப் பற்றி பேசி இருந்தார் எப்படி அது இருந்தது என்று அதை படிக்கும் போது என் கண்கள் முன்னால் அந்த காட்சி வந்து சென்றது என் கண்ணின் முன்னால் மால்கம் எக்ஸ் பதினாறு குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இந்த புத்தகத்தில் நான் மிகவும் ஈர்க்கப்பட்ட ஒரு வரி அல்லது ஒரு குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்றால் நாம் என்னவெல்லாம் கற்று இருக்கின்றோமோ அது சில சமயம் தவறாக இருக்க வாய்ப்புண்டு புதிதாக கற்றுக் கொள்வதை விட ..... நாம் ஏற்கனவே கற்றுக் கொண்டதில் இது தவறோ அதை பிழை திருத்தம் செய்து கொள்வதுதான் மால்கம் எக்ஸ் கூட இதை செய்திருக்கிறார் நாமும் செய்வோம்.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Maharadan.
2 reviews
October 5, 2024
எமது தோழர்

14 ஆண்டுகளில் கறுப்பிண மக்களுக்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்த மாபெரும் போராளி

தோழர் மால்கம் எக்ஸின் சகாப்தம் முடிந்துவிடவில்லை
8 reviews1 follower
November 27, 2016
Malcolm X is a very terrific book by Marudhan. All of Malcolm’s speeches/etc was taken place in the 1960’s. It tells you all about Malcolm. And how he lives. Also, it informs you about how the past was back then. Malcolm faced many racist people and disclaimers. I recommend this book to any reader, who loves history. It's very interesting. However, there are some negative parts in the book, but it's just how the author tells us about what really happened. In conclusion, there's a conflict. Malcolm has no right to disagree to any law. Or he tries to hold a speech to tell, but sometimes he can't. Racism holds him down. This book is great and inspiring. This is a very fantastic book to read.
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.