'க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும்.
காஸ்ட்ரோ ஒரு பிறவி புரட்சியாளர். அவரது புரட்சி மனப்பான்மையின் வேர், அவரது விடுதலை வேட்கையில் இருந்தது.
இத்தனைக்கும் பஞ்சத்தில் அடிபட்ட வம்சத்தில் இருந்து வந்தவரல்லர் அவர். மாபெரும் பண்ணையார் குடும்பத்தின் வாரிசாகப் பிறந்தவர்.
ஆனால் தேச விடுதலைக்காக, ஏகாதிபத்திய ஒழிப்புக்காகச் சொத்து சுகங்களைத் தூக்கிப் போட்டுவிட்டுத் துப்பாக்கி ஏந்தி, காட்டுக்குள் போனவர் அவர்.
சோவியத் யூனியனே சிதறிப் போன பிறகும், இன்று வரை க்யூபா ஒரு கம்யூனிச தேசமாக உய்ரித்திருப்பதற்கும், இந்த வினாடி வரை அமெரிக்காவால் அசைத்துப் பார்க்க முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்வதற்கும் ஒரே காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ.
வீரமும், விடுதலை வேட்கையும் நெïசுரமும் மிக்க காஸ்ட்ரோவின் விறுவிறுப்பான வாழ்க்கை வரலாறு இது.
நூலாசிரியர் மருதன், இந்திய தீவிரவாத இயக்கங்கள் அனைத்தைக் குறித்தும் அலசி ஆராயும், 'துப்பாக்கி மொழி' நூலின் ஆசிரியர்களுள் ஒருவர். கல்கி இதழில் தொடர்ந்து எழுதிவருபவர்.
பிடல் காஸ்ட்ரோவைப் பற்றி மிகவும் விறுவிறுப்பாகவும், சுருக்கமாகவும் எழுதப்பட்டிருக்கும் ஒரு புத்தகம். இந்த புத்தகத்தை பல புத்தக கண்காட்சிகளில் பார்த்திருந்த போதும் வாங்கி வாசிக்க மனதிருந்ததில்லை. இந்து தமிழ் திசை நாளிதழில் எழுத்தாளர் மருதனின் கட்டுரைகள் பலவற்றை வாசித்த பிறகு தான் இந்த புத்தகம் கவனம் ஈர்த்தது. ஒரு மகத்தான போராளியின் வாழ்க்கையைச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.
After reading this book, I am inspired with Fidal Castro . Also we will know the true color of America. It is good read and the writing style of maruthan is good. He explains briefly without any boring stuff. This makes us to keep reading the book. I would recommends this book.
புரட்சி என்ற சொல்லை நினைத்தாலே நமக்கு பிடல் காஸ்ட்ரோவும் சேகுவேராவும் தான் முதலில் நினைவிற்கு வருவார்கள். பிடல் காஸ்ட்ரோ மட்டும் இல்லை என்றால் உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்பட்ட கியூபாவை அமெரிக்கா தனது காலனி ஆதிக்க நாடாகவே வைத்திருக்கும். க்யூபா என்ற தேசம் அனைவருக்கும் தெரிந்து இருப்பதற்கு காரணம் பிடல் காஸ்ட்ரோ தான்.
வலிமையான உடல் வாகு, இரும்பு போன்ற தேகம், 6 அடி 2 அங்குல உயரம், முரட்டுத்தனமான தாடி மீசை என கம்பீரமான தோற்றத்தை உடையவர் பிடல் காஸ்ட்ரோ.
உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்பட்ட கியூபா முதலில் கொலம்பஸின் கனவு பிரதேசமாக இருந்தது .கியூபா சிறிதுகாலம் ஸ்பெயினின் காலனி ஆதிக்க நாடாக இருந்தது. ஸ்பெயின் இடம் தப்பித்து அமெரிக்காவிடம் மாட்டிக்கொண்டது கியூபா.
இயற்கை கனிமங்கள், கடற்கரைகள், வளமான பூமி அதுமட்டுமல்லாமல் புவியியல் ரீதியாக வட அமெரிக்காவையும், தென் அமெரிக்காவையும் இணைக்கும் பாலமாக கியூபா உள்ளது .கியூபாவை காலனி நாடாக ஆக்குவதன் மூலம் ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவையும் தொடர்புகொள்வது அமெரிக்காவுக்கு மிகவும் எளிது.
இதன் காரணமாகவே அமெரிக்க நிறுவனமான யுனைடெட் பிரூட் கியூபாவில் ஆட்சி அதிகாரத்தை ஏற்படுத்தியது .இதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் பிடல் காஸ்ட்ரோ. குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் முதன்முதலில் கிழக்கிந்திய நாடுகளில் ஒன்றான கியூபாவில் கம்யூனிசத்தின் விதையை விதைத்து ,மக்களின் ஆதரவோடு பல ஆண்டுகளாக ஆட்சி புரிந்தார். பிடல் காஸ்ட்ரோவை ஒதுக்கிவைத்துவிட்டு கியூபாவின் வரலாற்றைப் புரிந்துகொள்ள இயலாது. ஃபிடல் காஸ்ட்ரோவையும் ,கியூபாவையும் அறிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு நிச்சயம் இந்நூல் உதவி செய்யும்.
A good portrait of an interesting personality. Made me want to know more about Fidel Castro.
The biggest problem for this book is the lack of a clear timeline. It is not easy to follow the year in which the events are happening. Also, there were some extended writing about Che. Even though it was amazing to read the exploits of this great revolutionary, it seemed to have been put in place to fill pages!!
இந்தியா துரோகம் செய்யாதிருந்தால் தமிழீழமும் மலர்ந்திருக்கும். புரட்சியும் அதன் விளைவுகளும் அசாதாரமாணவை. இன்னும் கொஞ்சம் ஆழமாக/விரிவாக எழுதி இருக்கலாமோ என்று தோன்றியது.
தற்போது க்யூப எழுத்தாளர்களுடன் உறவு கொள்ள வேண்டும் என்று அவருக்கு ஆசைதான் - சரியான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என்றால் இப்படித்தான் பல அர்த்தம் தரும்.
கியூபா வின் சகாப்தம்... இந்த மனுஷன் வாழ்ந்த காலத்துல நானும் வாழ்ந்துருகேன் nu நினைக்கும் சந்தோசமா இருக்கு.. but Ivar yaarunu Ivar ponathukku apram thaan தெரிந்துகொண்டேன் என்பதில் வருத்தம்... இவரை பற்றி படிக்கலாம் nu pona, ippo Che guavera vai Patti படிக்க வைத்து விட்டார்.. அடுத்து லெனின், karl-marx, மார்தி .. இப்பொழுது நான் கம்யூனிசம் என்ற வார்த்தைக்க்கான முழுமையான அர்த்ததின் தேடலில்..
Must read for everyone about revolution and freedom of Cuba
மிகவும் அருமையான புத்தகம்.. Gives me a lot of insight over the struggles how Cubas come through the resolution and HoW Fidel Castro cares about people and communism.
Got a chance to read about this Iron man- one who bought Cuba in front of all other nations.. His ideologies may not be welcomed by many, but should really commmermate how he fought for his land, with iron fist..
Really good book regarding the Cuban Revolutionary, seems like I just scratched the surface of getting to know about his life. But it was a good introductory book regarding getting to know about his early days.
It's a fine portrait of Fidel Castro. Provided info abt Cuba n US in his period n how he overcame all the challenges n let Cuba a standalone nation. Felt the timeline was little nebulous.
This one don't let me to do my regular activity, even if i not a regular reader i finished it in a week.Interesting books especially the chapters with Che🔥.Very good book..
போரடிக்காத முறையில் எழுதப்பட்டிருந்தாலும் காஸ்ட்ரோவின் நெகட்டிவ்களை பற்றி மருதன் எழுத மறந்ததேனோ?பிடலுக்கு ஆகக்குறைந்து 4 காதலிகள் இருந்தனர்.அவர்களுள் பிரபலமான NATY REVELUTA,MARITA LORENZ பற்றி ஒரு வரி கூடக் குறிப்பிடாமல் பிடலிற்கு பல காதலிகள் என்பது அமெரிக்காவின் வெறும் வதந்தி என்று குறிப்பிட்டது நகைப்புக்குரியது.சில இடங்களில் பிடல் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட தகவல்களைக் காண முடிகின்றது.உ+ம் பிடல் வாசிக்காத புத்தக வகை எதுவும் இருக்க முடியாது. கியூப வரலாறு,உலக வரலாறு தொடர்பான "அத்தனை" நூல்களையும் பிடல் வாசித்தார்.பிடல் காஸ்ட்ரோவின் சீர்திருத்தங்களால் கியூபா முன்னேறியிருந்தது உண்மை எனினும் பொருளாதார சீர்திருத்தங்களால் மக்கள் சில பல இன்னல்களைச் சந்தித்தது பற்றி மருதன் ஏதும் குறிப்பிடாதது இது பிடலின் சுயசரிதையா? இல்லை பிடல் புராணமா?
ஃபிடல் காஸ்ட்ரோ - கம்யூனிசத்தை முதன் முதலில் கிழக்கத்திய நாடுகளில் ஒன்றான கியூபாவில் பரப்பி, மக்களிடன் ஒரே கட்சியை பல ஆண்டு காலம் வெற்றிகரமாக மக்களின் ஆதரவோடு ஆட்சி புரிந்த தலைவர், மெக்சிகோ பத்திரிக்கையாளர் தன் புரட்சி வாழ்க்கையை பற்றி கேட்கும்போது, தன்னுடைய 88ஆவது வயதில் அளிக்கும் பதில் "எனக்கு தற்போது இருக்கும் அனுபவம், என் இள வயதிலும், அப்போது இருந்த இளமை, இப்போதும் இருந்திருந்தால் கியூூபாவை வேறுவிதமாக மாற்றியிருப்பேன்" என்று கூறி, கியூபாவை பற்றி விவரிக்கும் சில பக்கங்கள், ஒருமுறையாவது கியூபாவையும், ஃபிடலையும் பார்த்துவிடமாட்டோமா என்ற தூண்டுதலை தூண்டிவிடும். அற்புதமான படைப்பு.
Its biography, but you can read like novel, he make people to follow him without even knowing they are following not only him but also communism. Great and successful man.
i would say this book discuss short history of fidel castro, cuba & che guevara. would have enjoyed more if it was discussing the controversial part of fidel castro