Jump to ratings and reviews
Rate this book

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு [Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu]

Rate this book
என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன்? காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா? எனில், இது காந்தியின் தோல்வியா? காங்கிரஸில் இணைந்திருந்த ஜின்னா திடீரென்று பாகிஸ்தான் என்னும் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தது ஏன்? யாரைக் குற்றவாளியாக்கலாம் என்பது பற்றியும் பிரிவினைக்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்தும் அபிப்பிராயங்கள் மாறுபடலாம். ஆனால், பிரிவினையின் விளைவுகள் பற்றி ஒருவருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்கமுடியாது. வெளிப்படையான விளைவுகள் அவை. பல லட்சக்கணக்கான மக்களின் சரித்திரம் சீரழிந்து போயிருக்கிறது.

மரணம் மட்டுமே நிச்சயம். ஓர் ஹிந்துவாக இருந்தால் ஒரு முஸ்லிம் மூலமாக. ஒரு முஸ்லிமாக இருந்தால் ஓர் ஹிந்துவால். அல்லது சீக்கியரால். நல்லவர்கள், கெட்டவர்கள் என்று யாரும் இல்லை. மொத்தம் இரண்டே ஜாதி. உயிர் வாழ விரும்புபவர்கள். உயிரை அழிக்க விரும்புபவர்கள். எதற்கும் கணக்குத் தெரியப்போவதில்லை. இறந்தவர்கள். தொலைந்தவர்கள். குழந்தைகளைத் தொலைத்த தாய்கள். சகோதரர்களைத் தொலைத்த சகோதரிகள். பிரிந்த நண்பர்கள். உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாமலேயே இந்த நிமிடம் வரை துடித்துக்கொண்டிருப்பவர்கள். துயர் தாங்காமல் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டவர்கள். மனச்சிதைவுக்கு ஆளாகி இறந்துபோனவர்கள். இறந்து பிறந்த குழந்தைகள். பிறந்து இறந்த சிசுக்கள். இது அரசியல் வரலாறு மட்டுமல்ல. மதவெறி என்னும் பேயால் சுழற்றியடிக்கப்பட்ட இரு தேசத்து மக்களின் உலுக்கியெடுக்கும் சரித்திரமும் கூட

184 pages, Paperback

First published January 1, 2007

37 people are currently reading
183 people want to read

About the author

Marudhan

39 books84 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
60 (28%)
4 stars
93 (44%)
3 stars
43 (20%)
2 stars
5 (2%)
1 star
6 (2%)
Displaying 1 - 24 of 24 reviews
Profile Image for Shyam Sundar.
112 reviews40 followers
May 23, 2014
இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் நாம் இழந்ததைவிட, இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்காக இழந்ததுதான் பல மடங்கு அதிகம். அந்த ரணங்களும், துயரங்களும் இன்று வரை தொடர்கின்றன. அந்த வரலாற்றுச் சம்பவங்களை இந்நூலில் ஆசிரியர் விரிவாகக் கூறியுள்ளார். சுதந்திரம் வேண்டி காங்கிரஸூடன் இணைந்து போராடிய ஜின்னா, தீடீரென பாகிஸ்தான் வேண்டி பிடிவாதம் பிடித்து ஏன்? என் சடலத்தின் மீது தான் தேசம் துண்டாடப்பட வேண்டும் என்று வைராக்கியமாக இருந்த காந்தி, பிரிவினைக்குச் சம்மதித்தது ஏன்? காந்தி நினைத்திருந்தால் பிரிவினையை தடுத்திருக்க முடியுமா? இரண்டு பக்கமும் மதவெறி எப்படி எல்லாம் தாண்டவமாடியது? ஒருவரையொருவர் பழி தீர்க்க என்னென்ன வியூகங்கள் வகுக்கப்பட்டன? பரிவினையில் ஆங்கிலேயர்களின் பங்கு என்ன? அனைத்திந்திய முஸ்லிம் லீக் தொடங்கக் காரணம் என்ன? பிரிவினை குறித்து காந்தியின் பேட்டி… என்று இப்பிரச்னை குறித்தே பல தகவல்கள் இந்நூலில் திரட்டப்பட்டுள்ளன. இவற்றைப் படிப்பதற்கே திடமான மனது வேண்டும்.

இந்த புத்தகத்தில் ஆசிரியர் காந்தியின் மனநிலை, நேருவின் திட்டங்கள், ஜின்னாவின் பிடிவாதம், வல்லபாய் படேலின் கிடுக்குப்பிடி இணைப்புகள், கோட்சேவின் கோபம் என்று எல்லாவற்றையும் அறிய வைத்து புரிய வைக்கிறார். ஒவ்வொரு இந்தியனும் உண்மையான சுதந்திர வரலாற்றை பற்றி அறிய வேண்டுமானால் பிரிவினை பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு இப்புத்தகம் ஒரு பொக்கிஷம்.
Profile Image for Avanthika.
145 reviews853 followers
March 7, 2014
"என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன்?" - இது ரொம்ப நாளா எனக்குள்ள இருக்கற கேள்வி, இன்னும் பதில் மட்டும் கெடைக்கல. Marudhan's way of presenting is interesting as-usual. ஆனா ஒரே புத்தகத்துல, that too within 100+ pages, யாராலையும் நடந்தத நடந்த மாதிரி சொல்ல முடியாது. சில எடத்துல இத எங்கயோ படிச்சு இருக்கோமே, கேட்டு இருக்கோமேன்னு தோணுது. அத கொஞ்சம் தவிர்த்து புதுசா எதாவது தகவல் குடுத்திருக்கலாம் ! Not criticizing Marudhan, but am damn sure no author till date gave a clear picture about what happened to Indian Politics during that crucial period (1930-1947) and there's no convincing answer for partitioning Baarat.
60 reviews6 followers
September 7, 2021
இந்திய பிரிவினை குறித்து முடிந்த அளவு தகவல்களை முன் வைத்த புத்தகம். சில தகவல்கள் விடுப்பட்டிருக்கலாம். முதலில் இந்த புத்தகத்தை படிக்கும் போது எனக்கு தோன்றியது என்னவென்றால் மத ரீதியான ஒரு புத்தக விமர்சனத்தை அல்லது மத ரீதியான கருத்தை பொது வெளியில் முன் வைக்கும் போது மதவாதிகளை புண்படுத்துவதாக அது அமைகிறது என பலர் சண்டைக்கு வருகிறார்கள்.

இந்த புத்தகம் மூலம் நான் சில விஷயங்களை அவர்களுக்கு விளக்க நினைக்கிறேன். ஒரு மதம் என்ன செய்ய முடியும். எதற்காக மத வாதிகள் மதங்களை பின்பற்றுகின்றனர். கண்டிப்பாக கடவுள் தனக்கு நன்மை செய்வார் என்னும் காரணத்துக்காகவே அவர்கள் கடவுளை (தங்கள் மத கடவுளை) நம்புகின்றனர்.

இவர்களுக்கு மதம் குறித்த அரசியல் தெரியாமல் இருக்கலாம். அல்லது தெரிந்தும் அதை கண்டுக்கொள்ளாமல் இருக்கலாம். இப்படியாக பின்பற்றும் ஒவ்வொரு மதவாதிகளும் ஆபத்தானவர்கள் என்றால் அது நிச்சயம் மத வாதிகளுக்கு அபத்தமாக தோன்றலாம். நான் எனது பகவானை, இயேசுவை, அல்லாஹ் வை வணங்குகிறேன். அதில் என்ன நாங்கள் உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கி விட போகிறோம் என கேட்கலாம்.

இந்த கேள்வியை கேட்கும் முன்பு நாம் ஒரு முறை இந்திய பிரிவினை பற்றி பார்ப்போம். இந்தியாவில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வெள்ளையர்கள் காலம் தொட்டே பிரச்சனைகள் இருந்ததாக மவுண்ட் பேட்டன் கூறுகிறார். விடுதலை இந்தியாவில் தனது இஸ்லாமிய சமூகத்திற்கு பாதுகாப்பு இருக்காது என கருதுகிறார் முகமது ஜின்னா. அந்த சமயத்தில் ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சி காங்கிரஸ் அளவிற்கு செல்வாக்கு பெற்ற கட்சியாக இருக்கிறது.

காந்தியின் காங்கிரஸும் இந்துக்களுக்கு சப்போர்ட்டாக பேசுகிறது. காந்தி ஒரு முழு இந்துவாக இருக்கிறார். வருணாசிரமத்தை மனுதர்மத்தை ஆதரிக்கிறார். பகவத் கீதை குறித்து பேசி சிலாகிக்கிறார். ராம ராஜ்ஜியம் அமைய வேண்டும் என்கிறார். எனவே பிரிட்டிஷ் இந்தியாவிலேயே படாதபாடு படும் சிறுபான்மை இஸ்லாமியர்கள் விடுதலை இந்தியாவில் மோசமான நிலையை அடைவார்கள் என ஜின்னா நினைக்கிறார்.

இதனால் இஸ்லாமியர்களுக்கு தனி தேசம் என்னும் கோட்பாட்டை முன் வைக்கிறார். ஆனால் வெள்ளையர்கள் முதலில் காந்தியை வெறுத்தாலும் பிறகு காந்தியின் சொல்லுக்கு பொது மக்களிடையே இருக்கும் செல்வாக்கை அறிந்து அவருக்கு நல்ல மரியாதை அளிக்கின்றனர். இதனால் காந்திக்கு வெள்ளையர்களிடம் இருந்த செல்வாக்கு ஜின்னாவிற்கு இல்லை.

ஆனால் இந்தியாவில் காங்கிரஸிற்கு பிறகு பெரிய கட்சியாக முஸ்லீம் லீக் உள்ளது. அதுவும் வலுவான ஆதரவுடன். இதனால் ஜின்னாவுக்கு உரிய இடம் தானாக உருவாகிறது. இந்தியாவை கூறு போடும் பணி பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட் பேட்டன் தலையில் வந்து விழுகிறது.

இருவருக்குமிடையே சமரசம் பேசி ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் எல்லைகள் பிரிக்கப்படுகின்றன. ஆனால் இதில் காந்திக்கு இஷ்டமில்லை. சாதிக்கு எதிராக பேசினால் இந்து மதம் துண்டாகும் என அதற்கே மவுனம் காத்தவர் இந்தியா இரண்டாவதில் மகிழ்ச்சி கொள்வாரா?. இதற்கும் மதவாதிகளுக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்கலாம்.

ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாகவே ஜூன் மாதம் முதலே இந்தியாவில் மத வன்முறை வெடிக்க துவங்கியது. அது மிக மிக மோசமாக இருந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை பற்றி பேசும் போது தேச பக்தியாளர்களுக்கு எல்லாம் குருதியில் நெருப்பு எரிவதை காணலாம். ஆனால் இந்திய பிரிவினையின் போது இறந்தவர்கள் அதைவிட அதிகம். அதாவது இந்தியர்களால் கொலை செய்யப்பட்ட இந்தியர்கள்.

இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே சண்டை தொடர்ந்தது. பஞ்சாப் ரத்த காடானது. இரு மதத்தினரும் கொடூரமாக கொல்வதில் துவங்கி, பெண்களை கற்பழித்து கொல்வது, கற்ப்பிணி பெண்களின் சிசுவை வயிற்றை கிழித்து வெளியே எடுத்து போடுவது, பெண்களின் மார்பகங்களை வெட்டுவது போன்ற அனைத்து செயல்களையும் இந்த இரு மதக்காரர்களும் செய்தனர்.

ஐ.நா வில் இந்த பிரிவினையை பதிவு செய்தபோது ஜெர்மனியில் ஹிட்லரால் நடந்த இன அழிப்புக்கு சமமான ஒரு கொடூரம் இந்தியாவில் நடந்தேறியது என கூறப்பட்டது. விடுதலை இந்தியாவை வெற்று ஒரு வாரத்தில் நேரு அதை மீண்டும் மவுண்ட் பேட்டனிடம் கொடுக்க முன் வந்தார். “இந்த இரத்தம் மிதக்கும் இந்தியாவை நான் ஆட்சி செய்ய விரும்பவில்லை. வெள்ளையர்களின் ஒட்டு மொத்த ஆட்சியிலும் இல்லாத அளவு இரத்தத்தை நான் கண்டுவிட்டேன்” என்கிறார். இதன் மூலம் வெள்ளையர்களை விட இந்தியர்கள் மோசமானவர்கள் என்பதை நாம் அறியலாம். அமிர்தசரஸிற்கு வந்த ஒரு ரயில் பிணங்கள் நிரம்பி வந்தது.

இன்னும் எவ்வளவோ கொடூரங்கள். இதையெல்லா���் செய்தது யார்?. தீவிரவாதிகளா?, வெள்ளையர்களா?, பகவானையும், அல்லாஹ்வையும் வணங்கிய மத வாதிகள் தான். அதுவரை சாமி கும்பிட்டு கொண்டிருந்த ஒவ்வொரு மத வாதியும் இந்தியா இந்துக்களுக்கான நாடு என்னும் வாசகத்தையும் பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்கான நாடு என்று இஸ்லாமியர்களும் ஆளுக்கு ஒரு ஆயுதத்தை தூக்கிய போதுதான் மத வாதிகளின் உண்மை சொரூபம் வரலாற்றில் பதிவானது.

இப்போது தெரியும் மத வாதிகள் ஆபத்தானவர்கள் என ஏன் நான் கூறினேன் என்று. மதங்கள் தங்கள் வரலாற்றை இரத்தத்தின் மீது எழுதி வந்துள்ளன. இந்த கொடூரங்கள் நடந்த காலத்தில் எந்த மத சாமிகளும் அவதாரம் எடுக்கவில்லை. இங்கே மதம் பற்றி எழுதுவது உங்களை புண்படுத்துகிறது என்றால் இந்த மதம் வரலாறு முழுவதும் எங்களை புண்படுத்தி வருகிறது. அதுவும் எழுத்தாலோ கருத்தாலோ மட்டும் அல்ல. அதையும் தாண்டி புண்படுத்தி வருகிறது. எனவே மதம் வரலாற்றில் என்ன இந்திய மக்களுக்கு கூட நன்மை பயக்கவில்லை என்பதே உண்மை. மதத்தை பின்பற்றுவதால் எந்த பிரோயஜனமும் இல்லை. மாறாக அது பிரிவினையைதான் உண்டாக்குகிறது.
Profile Image for Yadhu Nandhan.
257 reviews
October 7, 2021
இந்தியப் பிரிவினைக்கான காரணத்தையும் அப்போது நிலவிய அரசியல் சூழலையும் சொல்கிறது இந்த நூல். அந்தப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களை பற்றியும் அவர்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றியும் சொந்தங்களை இழந்த குடும்பங்களைப் பற்றியும் பேசுகிறது இந்த நூல். இந்தப் பிரிவினைகள் காந்தியடிகளின் மீது தவறு உள்ளதா இல்லையா என்பதில் தன் கருத்தை சொல்லாது அப்போது நடந்தவற்றை சொல்லியிருக்கிறார் ஆசிரியர் ஆனால் என் மனதில் காந்தியடிகள் மகாத்மாவாக இருக்கிறார். தனியொரு தேசமாய் பிரியாது இருந்திருந்தாலோ அல்லது பிரிந்த தேசம் சண்டையிட்ட சகோதரர்கள் சேர்ந்து கொள்வது போல மறுபடியும் ஒன்றாய் சேர்ந்து இருந்தாலோ எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்து ஏங்க வைக்கிறது இந்த நூல். பிரிந்தபின் பாகிஸ்தானுக்கு என்ன ஆனது அது எப்படி நமக்கு இவ்வளவு எதிரி தேசமாய் போனது என்பனவற்றை அறிய தூண்டு கிறது இந்த நூல்.
15 reviews
October 6, 2025
1900 - 1955 வரை இந்தியாவில் நடந்தது என்ன ?
பிரிவினை ஏற்பட்டது ஏன் ? எதனால் ? எப்படி என
உதிரம் சிந்திய வரலாற்றை கூற்+ஆய்வாக கண்முன் நிறுத்துகிறார் எழுத்தாளர் .

ஒரு மதத்தவன் மற்ற மதத்தவனை மாறி மாறி வெட்டி சாய்த்து உருவாக்கியது இந்த பிரிவு மட்டும் அல்ல அதையும் தாண்டி பொதுவாக உருவாக்கியது இரண்டே - உயிர் பிழைக்க விரும்புபவர்கள் மற்றும் உயிரை அழிக்க விரும்புபவர்கள் !

இயற்க்கையால் படைக்கப்பட்ட மனிதன் உடம்பில்
பேதமில்லாமல் ஓடும் ரத்தம் சிவப்புதான் என அறிந்தும் மத நம்பிக்கையால் மதி இழந்து மரணத்தை மாறி மாறி பரிசு அளித்துக்கொண்டான் !

"மதம் மனிதனுக்காகவே, மனிதன் மதத்திற்காக அல்ல"
- அண்ணல் அம்பேத்கர்
June 10, 2024
எது நேர்மை? எது அறம்?
இந்த சமூக கட்டமைப்பில் நடுநிலை என்பது கிடையாது இதை காந்தி ஆரம்பத்திலே உணர்ந்து யிருந்தால் இப்படி பட்ட பிரிவினை தவிர்க்க முடிந்தது இருக்கும் :)
என்றுமே பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பது தான் நேர்மை அப்படியானால் காந்தி சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பது தான் அறம் அதை விட்டு நான் நடுநிலமையை நாடுகிறேன் என்பது ஆத்திகம் செய்பவர்களின் பக்கம் நிற்பதற்கு சமம்!!
காந்தியின் நடுநிலை ஜின்னாவின் ஏமாற்றம் அதனால் ஏற்படும் அகங்காரம், பிடிவாதம்... 2 ... 4..40 கோடி மக்களின் தவறான புரிதல் அதனால் ஒரு கோடு உதிரத்தால் :)
Profile Image for Vinodh Tharma.
32 reviews7 followers
August 31, 2019
India Pakistan Partition nicely explained

Before reading this book I know very little about India Pakistan partition and thought British were the reason for Partition. But there were lot of other reasons. Book explain nicely. More than 1 million people's killed during partition. This seperation was a big mistake. I recommend others to read to learn about partition history and lesson.
Profile Image for Durai Balaji.
8 reviews4 followers
March 18, 2019
Good narration

Good narration, but book did not gives in depth information about India - Pakistan partition. Nehru, Gandhi, Jinnah's Speeches and letters given in this book gives little understanding about their views. It gives insight about the religious violence
1 review
March 2, 2018
Informative and useful

Narration is good. Interested to read author 's other books. Recommended to all who wants to know about indian history and civil services aspirants.
Profile Image for Segu Abdul.
14 reviews4 followers
November 30, 2019
First of all I have to give thanks to author for mentioning the hidden things .
1 review
April 16, 2022
Must read

Most Interesting book, like Vandhargal vendarargal, If you like know history of partition like a story, definitely u can choose this book.
Profile Image for Mithun.
16 reviews1 follower
March 22, 2024
Details the black pages of separation

Worth reading...we just Heard about the freedom fighters and independence..but this book elaborates the blood bath in the name of religion..
9 reviews
June 4, 2021
நள்ளிரவில் சுதந்திரம் புத்தகம் படித்து அதே வேகத்தில் படித்த புத்தகம். கிட்டத்தட்ட இரண்டு புத்தகமும் ஒன்று தான். நள்ளிரவில் சுதந்திரத்தில் சொல்லப்பட்டதை மிக சுருக்கமாக அறிந்துகொள்ள முடியும்.


ஜின்னா தான் இந்தியா பிரிவுக்கு காரணமா? காஷ்மீரையும் கேட்டார்களே அதை ஏன் கொடுக்கவில்லை போன்ற பல கேள்விகளையும் வைத்துள்ளார்.
Profile Image for Karthic Sivaswamy.
66 reviews3 followers
January 21, 2015
A really nice book to know about the history behind the partition. Its the worst thing to have happened to our country and the fact is we still see Pakistan as our enemy and vice-verse.

It also talks about Gandhiji, Nehru, Jinnah and Mountbatten during those times and how everyone changed their stands every now and then. It also helps us to to know about the Congress party.

And, captures the lives lost and the struggles people went through those times.

Though the book doesn't follow any timeline it jumps between the times which makes it a little difficult to follow at times.
Profile Image for Yokes kumarasamy.
27 reviews
April 26, 2014
When this writer written anything about communist leaders and communism, you dont need think twice to buy that book. it would be good. Che Guevera or Fidal Kastro or even HU gintao or any other communist book - just buy it.

But He(writer) accept the great fight of fidal kastro for cuba against imperialism, but he did not understand the gandhiji's Ahimsha for India, eventhough we got our freedom in a better way.

To my opinion, except the writing style, its just a crap.
Profile Image for மணிகண்டன்.
12 reviews4 followers
January 4, 2016
இந்திய தேசத்தின் மிககொடுமையான வரலாற்றுப் பக்கங்கள். கண்ணீர் மீது மட்டும் உருவானது அல்ல மனித மனங்களில் ஒரு துளியும் மனிதம் இற்றப்போன உலகத்தின் இறுதி நாட்களில் உருவானது இந்தியப்பிரிவினை. தலைப்பைப்போல உதிரத்தால் உருவான வரலாறு தான் இந்தியப்பிரிவினை. எத்தனை கொடுமையான நிகழ்வுகள் அவைகள். மறக்கமுடியாத வடுக்கள்.
10 reviews3 followers
June 10, 2011
Good Job by Author Marudhan. This book gives very in-depth details about India Partition 1947. I listened audio version of this book. I don't hesitate to listen again. Narrator of this audio book, K.Charles, was great with his voice. His style of narration ,and his modulation were wonderful.
Profile Image for Joseph Rony.
5 reviews
July 15, 2015
Whatever I studied in my school days about indian independence is totally different, but the Leaders were same.
This book gave a different picture and explained one of the main reason which leads to separation of hindustan into 2 nations. Worth Reading and the last sentence was true
5 reviews2 followers
April 10, 2015
The narration is extremely good.. The incident has been explained with a common view.. The books revolves around many incidents and people who were important and reason behind partition.. Though the incidents explained briefly, it will give the major reason and effect before and after partition.
4 reviews1 follower
Read
December 1, 2012
good politics related book. good to know about indian leaders and their characters upto some extent
Profile Image for Prabhu R.
22 reviews32 followers
November 5, 2014
”இந்தியப் பிரிவினை - உதிரத்தால் ஒரு கோடு ” என்ற புத்தகத்திற்கு நான் எழுதிய மதிப்புரை. (mathippurai.com ல்)

http://mathippurai.com/2014/11/05/par...
Displaying 1 - 24 of 24 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.