' நவீன தமிழிலக்கிய அறிமுகம் ' - ஒரு அத்தியாவசியம்.
கட்டுரைத்தொகுப்பான இந்நூலை படித்தது, தமிழிலக்கியத்தில் பலவற்றைத் தெளிவுற காண ஒரு திறவுகோளாக இருக்கிறது.
இந்நூலில் ஜெயமோகன்,
ஒரு புத்தக வாசிப்பின் படிநிலைகள் என்னென்னவென்று விவரிப்பது தொடங்கி இலக்கியத்தின் அடிப்படைகள் மற்றும் அரசியல்கள் தாண்டி தமிழிலக்கிய வரலாற்றினை விரிவாக ஆராய்ந்து வகைப்படுத்தியுள்ளார்.
இதுமட்டுமின்றி, இலக்கிய இயக்கங்கள் கோட்பாடுகள் என இந்நூலின் கடைசி பாகமும் இலக்கியத்தின் ஆழமான பிரிவுகளை விவரித்துள்ளார்.
ஆரம்ப நிலை வாசகனான எனக்கு இதில் இணைந்திருக்கும் பல தகவல்கள், அகவொளியாக அமைந்துள்ளதென்று சொன்னால் அது மிகையாகாது.
தகவல்களை பரிமாறிவரும் தருணத்தில் அவரது விமர்சனங்களையும் தாண்டி எதிர்ப்படும், ஒரு சில சமூக கருத்துகள் தேவையற்றதாகப் பட்டது.
கலைச்சொற்கள், சிறுகதைகள், புதினங்கள், ஆசிரியர்கள், கவிஞர்கள் பட்டியல்கள் என பக்கங்கள் முழுதும் நிறைந்துள்ள இப்புத்தகம் நிச்சயம் பயனுள்ளதாகவே அமையும்.
அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் (FAQs) இதிலிருப்பதும் இதன் தனியம்சம்.
"படைப்பில் நாம் உழைப்பை செலுத்துவதே இல்லை. உண்மையான பிரச்சனை இதுவே."
"இலக்கியம் ஒரு கலை."
"கலை என்றால் என்ன? குறியீடுகளின் மூலம் உணர்வுகளையும் எண்ணங்களையும் தொடர்புபடுத்தும் வழிமுறை. ... மொழிக்குறியீடுகள் இலக்கியம் ஆகிறது. அக்குறியீடுகளை பொருள்கொள்ளும் பயிற்சி நமக்கு தேவை. "