Jump to ratings and reviews
Rate this book

பல்லவ பீடம்

Rate this book
சுக்கூட்டத்தினிடையே அரவம் கேட்டதுமே உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்றுவிட்ட பப்பகுமாரன், அந்த கூட்டத்திற்குள்ளிருந்து வெளியே வந்த ஆஜானுபாகுவான பெரிய மறவனையும் கண்டான். அவன் இட்ட கட்டளையையும் கேட்டான் அதைத் தொடர்ந்து வேல்களைத் தாங்கித் தன்னை நோக்கி வந்த மற்ற நான்கு மறவர்களையும் பார்த்தான். இத்தனைக்கும் அவன் அச்சத்தையும் காட்டவில்லை. இருந்த இடத்தை விட்டு நகரவுமில்லை, பேச்சுக் கொடுக்கவுமில்லை. ஆனால் கள்ளை குடித்து அரைமயக்கத்திலிருந்த முறைப்பிள்ளை மட்டும் தள்ளாட எழுந்து, வந்தவர்களை நோக்கி, “இவன் ஒற்றனல்ல” என்று உளறினான். இதைக் கேட்டதும் மேட்டில் ஏறி வந்த நால்வரும் பாதி வழியில் நின்றுவிடவே பெரிய மறவன் மட்டும் முன்னால் வந்து,

201 pages, Kindle Edition

Published August 14, 2021

14 people are currently reading
275 people want to read

About the author

Sandilyan

76 books390 followers
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
30 (31%)
4 stars
29 (30%)
3 stars
21 (22%)
2 stars
9 (9%)
1 star
6 (6%)
Displaying 1 - 9 of 9 reviews
2 reviews
July 12, 2016
Small Book... but very beautifully and sensually narrated by Sandilyan. This Book is based on a Aadhi Pallavas and their win over Kalabhras on an excellent and interesting plot. Though its a short story, this novel dwells in your mind after completing the book. Great one... i am fan of long series books... but after reading this, i have barged into the Book shop and frantically collected all of his Short novels on Chozhas and Pallavas :)
Profile Image for Vinoth Chander.
9 reviews14 followers
September 21, 2021
சாண்டில்யன் அவர்கள் பல்லவர் கால வரலாற்றை அவரது பாணியில் காதல் ரசம் சொட்ட எந்த எடத்திலும் தொய்வில்லாமலும் சுருக்கமாகவும் பொருள் சுவை குன்றாமல் ‌இயற்றியிருக்கிறார்.

அரசியல் மற்றும் போர் தந்திர புனைவுகளை விட காதல் ரசம் சற்று அதிகமாகவே இருப்பினும். ஆசிரியரின் உரைநடை சாமர்த்தியத்தால் நம்மை பல்லவர் காலத்துக்கே அழைத்துச் சென்று விட்டார்.
Profile Image for Tamil Isai (தமிழிசை).
34 reviews4 followers
November 21, 2017
pallava peedam is my favorite story written by sandilyan. Sivaskandhavarman and thamarai selvi scenes are good. I love sandilyan reading because he will mix all the colours in his book. Romance, politics,etc., Sivaskandhavarman (pappakumaran) is my favourite.Such a nyce novel with 200+ pages.
15 reviews
February 23, 2024
கற்பனை செய்தால் நல்ல சினிமாகவாக தோன்றும் உண்மையில் நல்ல சஸ்பென்ஸ் கதை இறுதி போர் காட்சியும் நன்றாக இருந்தது கடைசி ட்விட்ஸ் கூட சூப்பர் எதிர்பாராத திருப்பம் அசட்டல் ஸ்டோரி 🔥
Profile Image for Aargee.
163 reviews1 follower
May 31, 2024
Unlike other சாண்டில்யன் Sir's novels, this is an ultra short, crisp, to the point novel, written like what it needs to convey or perhaps imaginations with limitations
This entire review has been hidden because of spoilers.
40 reviews1 follower
September 17, 2025
Sandilyan’s books are truly in a class of their own. His mastery in crafting intricate twists and turns, and his ability to elevate even the smallest incidents into something grand, is an art that stands unmatched in Tamil literature. While Kalki reigns supreme in his own realm, Sandilyan commands a distinct domain of brilliance. It’s always a great read.
69 reviews1 follower
May 19, 2021
Pallava Beedam!

Pallavi Beedam, is one more work by the Author Shri Sandilyan in his style.
As usual his wonderful narration with foreplays of hero and heroine!
Good time pass!
Displaying 1 - 9 of 9 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.