ஆறு மாத காலம் ஓடிவிட்டது. குழந்தைகள் உடம்பு தேறிவிட்டன. எல்லாமே சிஸ்டமாட்டிக்காக, சீராக நடந்தது! மஞ்சுவை இழந்த சோகம்கூட மெல்ல மெல்ல கரையத் தொடங்கிவிட்டது! வீட்டுக் கவலை என்பது அறவே இல்லை! அன்றைக்கு பேக்டரியில் புது - எந்திரம் வந்து இறங்கியிருந்தது. அது சம்பந்தப்பட்ட இணைப்பை மாது சரி பார்த்துக் கொண்டிருக்க, கனமான உருளை ஒன்று வலது கையில் வேகமாக இறங்க, மாது அலறிவிட்டான். உடனே மயக்கமும் வந்துவிட்டது. திரும்பவும் கண் விழித்தபோது ஆஸ்பத்திரி வாசனை! “எ... எனக்கு என்னாச்சு?” டாக்டர் அருகில் வந்தார். “வலது கையில் எலும்பு முறிவு! கட்டு போட்டிருக்கோம். நீங்க அசையக்கூடாது!” “எங்க வீட்டுக்குச் சொல்லியாச்சா?” “ஆள் போய் ஒரு மணி நேரமாச்சு?” சொல்ல&#