அந்த அம்மாவின் பெயர் ராஜேஸ்வரி! பிரியதர்ஷினியின் பதிலால் ராஜேஸ்வரியின் நடை தள்ளாடியது! அடுத்த படி எடுத்து வைத்தபோது கால் இடறி விழப்போனார்! சட்டென்று பதறி பிரியதர்ஷினி தாங்கிக் கொண்டாள்! அந்த அம்மாள் கொஞ்சம் குண்டு உடம்பு! கஷ்டப்பட்டு நிறுத்தினாள்! “ஆன்ட்டி... என்ன பண்ணுது? உட்காருங்க ஆன்ட்டி! கொஞ்ச நேரம் கழிச்சிப் போகலாம்!” என்றவள் மெல்ல படியின் ஓரம் அழைத்துப் போய் உட்கார வைத்தாள்! “மயக்கமா இருக்கும்மா! வேற ஒண்ணுமில்லை!” என்று ராஜேஸ்வரி சொன்னார்! வேதநாயகியும், மாணிக்கமும் பதறி அவர் அருகில் வந்தனர்!“யாரும்மா? என்னாச்சி, பிரியா?”“ஆன்ட்டி என்கிட்டதான் பேசிகிட்டு வந்தாங்க! பொள்ளாச்சியாம்! நம்ம இனமாம்! மயக்கம் வந்து படிதட்டி விழப்போனாங்க