இந்த பூமியின் காலம் அட்சரேகைகளாலும் தீர்க்கரேகைகளாலும் அளக்கப்படுகிறது என்றால் வரலாறு என்பது ரத்தத்தின் மீதும் முத்தத்தின் மீதும் புனையப்பட்ட கதைகளால் உருவானது. புகழப்பட்ட அரசர்கள்தான் தெய்வங்கள் ஆக்கப்பட்டார்கள். எதிர்த் திசையில் இகழப்பட்டவர்கள் அசுரர்கள் ஆகிறார்கள். அப்படி பாடப் புத்தகங்கள் வழி கிட்டத்தட்ட ஓர் அசுரனாக கட்டமைக்கப்பட்ட பிம்பம்தான் ஔரங்ஸேப். ஒரே மொழி, ஒரே மதம், மற்ற மதங்கள் யாவும் கீழானவை என்று அதிகார பீடம் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் வாழிடங்களையும் இடித்து அரச கோட்டைகள் கட்டுகின்ற ஒரு இருண்ட காலத்தில், அரக்கனாக பிம்பம் எழுப்பப்பட்ட ஓர் அரசனின் வாழ்வை வரலாற்றின் கல்லறைகளில் இருந்து தார்மீக அறத்துடன் சரியான தரவுகளின் மூலம் நாவலாக எழுதியிருக்கிறார் சாரு நிவேதிதா. பொதுவாக வரலாற்றுப் புனைவுகள் அலங்காரமான சொற்கள், மிகை வர்ணனைகள், நீளமான வாக்கியங்கள் கொண்டு எழுதப்படும். ஆனால், பாரமற்ற வாக்கியங்கள், எளிய சொற்றொடர்கள் மூலம் நேர்மையான பார்வையுடன் மிக அணுக்கமான சொல்லல் முறை வழியே ஒரு எதிர் அரசியல் பேசும் படைப்பைத் தந்திருக்கிறார் சாரு நிவேதிதா. காலத்திற்கு எதிராக ஒரு சீரிய கலைஞனின் பிரக்ஞை இப்படித்தான் வேலை செய்யும். - நேசமித்ரன்
Charu Nivedita (born 18 December 1953) is a postmodern, transgressive Tamil writer, based in Chennai, India. His novel Zero Degree was longlisted for the 2013 edition of Jan Michalski Prize for Literature. Zero Degree was inducted into the prestigious '50 Writers, 50 Books - The Best of Indian Fiction', published by HarperCollins. Vahni Capildeo places Charu Nivedita on par with Vladimir Nabokov, James Joyce and Jean Genet, in her article in the Caribbean Review of Books. He was selected as one among 'Top Ten Indians of the Decade 2001 - 2010' by The Economic Times. He is inspired by Marquis de Sade and Andal. His columns appear in magazines such as Art Review Asia, The Asian Age and Deccan Chronicle.
ஒவ்வொரு நாவலும் அதற்கான ஒரு மனநிலையை அதுவே மெதுவாகவே வளர்த்து வரும் அதிலும் குறிப்பாக ஒரு தொள்ளாயிரம் பக்க வரலாற்று நாவலென அறியப்படும் இது இப்படி ஒன்றும் செய்யவில்லை. தீவிரமாக ரத்தம், பேராசை, கொடுங்கோல் என்று மன்னர்களைப் பற்றி பழக்கப்பட்ட நடையில் எதனையும் பேசவில்லை. ஆனாலும் இதனை ஏன் அனைவரும் வாசிக்க வேண்டும்? இது வரலாற்றை எப்படி அணுகுகிறது? என்ற பல கேள்விகள் முன்னே வந்து நிற்கும். ஔரங்ஸேபுக்கும் எழுத்தாளருக்குமான உரையாடல் வழியே தான் இந்நாவல் எல்லாவற்றையும் இழுத்து பேசுகிறது(செங்கிகாஸ்கனைப் சாடும், ஷீவாஜியை சுரண்டும், சூபியிஸத்தை தூவும்...). இப்படி பேச்சுவழக்கில் இருப்பதால் தான் என்னவோ இது ஒரு உண்மையே பேசும் வழக்கத்தில் இருந்து வெளியே வந்து விடுகிறது போல. ஏனெனில் இந்நாவல் ஆங்காங்கே சூபியிஸ கிளைக்கதைகள், பொக்கிஷமான கவிதைகள், நாடற்ற சாமான்யனுக்கு ஏற்பட்ட சிக்கல், போரின் அறிவிப்பை கேட்டதும் ஓடி ஒளிகிற மக்களின் அவலம் போன்று நிறைய சின்ன சின்ன நுட்பமான விஷயங்கள் விரிவாக பேசப்பட்டு கிடக்கிறது. ஆனாலும், என்னை வியப்பில் ஆழ்த்தியது எவை என்றால் - *முகலாயர்களின் கடைசி இரண்டாம் ஷா ஆலமுக்கு சிம்மாசனம் கூட இல்லாமல் கொள்ளையடிக்கப்பட்டு கண்கள் பிடுங்கப்பட்டு மேஜையை தடவியதை தனியே துன்பவியல் நாடகமாக எழுதலாம் போல. இது எனக்கு கீஸ்லோவ்ஸ்கியின் Three Colors:White படத்தின் இறுதி காட்சியினை தான் நினைவுப்படுத்தியது. ஷாவுக்கு கிடைத்த சிம்மாசனத்தை தக்கவைத்து கொள்ள பேராசையுடன் பாடுபட்டு பிறகு எல்லாம் பரிபோய் அதே இடத்தில் சிம்மாசனம் இல்லாது குருட்டுப் பிச்சைக்காரனை போல அலைவதற்கு வேதனைப் பட வேண்டுமா? அல்லது சரியென கடக்க வேண்டுமா? *ஔரங்ஸேப் தான் செய்த பிழைகளை, பாவப்பட்டு வழங்கிய மன்னிப்பை தவிர்த்திருந்தால் இன்று அது வரலாற்றை மாற்றியமைத்திற்கும் 'நான் அந்த ஷீவாஜீ ஓட ஓட விரட்டியிருப்பேன்' என்கிறார் இன்னொரு பக்கம் தான் இறுதிக்காலத்தில் பைத்தியம் பிடித்து இறந்த பின்பு இப்போது இந்நாவலின் வழியே 'மறுபிறவி கிடைத்தால் எனக்கு ஒரு திருவோடு போதும்' என்கிறார். ஒரு பேரரசர்க்கு காலம் கடந்த பின்பு ஏற்படும் மாற்றங்களில் அவர் தன்னையே கிடைக்கும் பல சந்தர்ப்பங்களில் மாற்றியும் பேசுகிறார்? சிலவற்றை ஒத்துக்கொள்ளவும் செய்கிறார்? - இதனை அழிந்த ஒரு அற்ப உயிர் இன்னொன்றாக வந்து வேறுமாதிரியாக உலாவிக் கொண்டே முன்பு தான் செய்த அனைத்தையும் அருகே நின்று எட்டிப்பார்ப்பதன் விளைவு என்றே நான் பார்க்கிறேன். "கல்லறையில் உறங்கும் மனிதனைப் போல இரு" என்ற வரி தான் இப்போது என்னை ஆட்கொண்டுவிட்டது.