அன்புடை அன்றிலே - ராணி முத்து இதழில் செப்டம்பர் மாத வெளியீடாக வந்த நாவல்.அன்றில் பறவைகளைப் போல ஒத்த மனதினராய் வாழ்ந்து வந்த சம்விருதா – சாந்தனு தம்பதி கருத்து வேறுபாட்டால் இரு துருவங்களாய் மாறிப் போயினர். புரிதலற்ற உறவுக்கு ஆயுள் குறைவு என்பதை நிரூபிக்கும் வண்ணம் அவர்களின் உறவும் ஊசலாடத் துவங்கியது.அவர்களிடையே வந்த கருத்து வேறுபாடுகளுக்கு காரணம் என்ன? அவர்களை மீண்டும் பிணைத்து வைக்கும் மாயக்கயிறு எது?இக்கேள்விகளுக்குப் பதில் ‘அன்புடை அன்றிலே’ எனும் இந்நாவலில்... படித்துப் பாருங்கள்!