விறுவிறுப்பும் சரித்திரச் செய்திகளும் பின்னிப் பின்னி இழையோடும் இந்த வரலாற்றுப் புதினம் நிகழும் காலம் ஏறக்குறைய கி.பி. 1003.
முதலாம் ராஜராஜ சோழரின் பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நட்சத்திர நாளன்று விமரிசையான கொண்டாட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது சோழர் தலைநகரம். விழாவில் கலந்து கொள்ள, நாட்டின் பிறபகுதிகளிலிருந்து மக்கள் தலைநகரை நோக்கி வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர். ஓராண்டுக்கு முன் இராஜராஜரால் திட்டமிடப்பட்டுத் தொடங்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் (தஞ்சை பிருகதீசுவரர் கோயில்) வெகு வேகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. சிற்பிகள், சித்திரக்காரர்கள், தொழில் வல்லுநர்கள், சமயக் குரவர்கள் என பலதுறை வல்லுநர்களால் நிறைந்திருக்கிறது அந்த வளாகம். கடவுளுக்குப் பணிசெய்ய தேவரடியார் எனப்படும் 400 நடன மங்கையர் நாட்டின் பல பாகங்களிலிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.பிறந்த நாள் விழாவில் இராஜராஜ சோழரின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்ட “ராஜராஜ விஜயம்” என்ற நாட்டிய நாடகத்தை அரங்கேற்ற விஜயராஜ ஆச்சாரியரின் தலைமையில் முனைப்பாக ஒத்திகைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சோழநாட்டின் தலைநகரம் இவ்வாறு பிறந்த நாள் விழாக் கொண்டாட்ட ஏற்பாடுகளில் மகிழ்ச்சியோடு மூழ்கியிருக்க, தஞ்சைக்குச் சில காதங்கள் தள்ளி அமைந்திருக்கும் துழாய்க்குடியில் காட்டுப் பகுதியில் ஒரு வயதான முன்னாள் சோழப்படை வீரர் அம்பலவாணரின் கண்முன் ஒரு வீரன் படுகொலை செய்யப்படுகிறான். இறக்குமுன் அந்த வீரன் இராஜராஜரைக் கொல்வதற்காக செய்யப்பட்டுள்ள சதி பற்றிய சில தகவல்களைக் கூறிவிட்டு இறக்கிறான். தவித்துப் போகும் அம்பலவாணர் அந்தத தகவல்களைத் தஞ்சைக்கு எடுத்துச் செல்ல.. அங்கே சோழ சேனாதிபதி பரமன் மழபாடியார் அவருடன் இணைந்து கொள்கிறார். பேரரசருக்கு எதிராகத் தீட்டப்பட்டிருக்கும் சதி வெற்றி பெறுமா? அந்த த் தாக்குதல் எவ்வாறு நடைபெறும்? அத்தனை பாதுகாவலையும் மீறி இத்தனை துணிவுடன் அரசரின் உயிரைப் பறிக்க முனைவது யார்? எதற்காக?
பக்கத்திற்குப் பக்கம் விறுவிறுப்பு குறையாமல் வளரும் இந்தப் புதினம் தமிழில் நல்ல படைப்புக்களை எதிர்நோக்கும் வாசகர்கள் தவறவிட்டுவிட முடியாத தரமான படைப்பு.
Dr. Gokul Seshadri is the author of several works of historic fiction in Tamil based on the medieval history of South India. He is also a researcher, specializing in South Indian temple art and architecture.
A software architect by profession, Gokul started exploring his creative writing skills 20 years ago - with his first novel Rajakesari. This was followed by many other novels, short stories and articles. From 2010 onwards, he started pursuing academic studies in History with M.A. and M.Phil. degrees, followed by a doctoral research on Chola Ramayana sculptures. His novels are replete with intricate epigraphic, cultural, and historic references drawn from inscriptions, copper plate grants, literatures and living oral traditions. All of his books have been published by Palaniappa brothers. Also, from 2019 onwards, StoryTel India has been publishing his well known works as audiobooks.
முனைவர் கோகுல் சேஷாத்ரி தமிழில் பல வரலாற்றுப் புதினங்களை படைத்துள்ள எழுத்தாளர். கட்டுரையாளர். மற்றும் வரலாற்றாய்வாளர்.
மென்பொருள் துறையில் பணியாற்றும் இவர் வரலாற்றின் மேல் காதல் கொண்டு 2003ல் எழுதத் துவங்கினார். 2004ல் இணையத்தில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற இராஜகேசரி, தமிழ் இணைய உலகில் நேரடியாக வெளிவந்த முதல் வரலாற்றுப் புதினமாகும். தொடர்ந்து பைசாசம், சேர ர் கோட்டை, திருமாளிகை, உதயபானு உள்ளிட்ட பல நாவல்களைப் படைத்துள்ளார். 2010 முதல் தீவிரமான வரலாற்றாய்வில் ஈடுபட்டு சோழர் கால இராமாயணச் சிற்பங்கள் பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவரது வரலாற்றாய்வின் தாக்கத்தை இவரது படைப்புக்களெங்கும் நுண்ணிய கல்வெட்டுச் செய்திகளாகவும் இலக்கியத் தரவுகளாகவும் விரவிக் கிடப்பதைக் காணலாம்.
2008 முதல் பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம் இவரது புத்தகங்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் 2019 முதல் ஸ்டோரிடெல் நிறுவனம் இவரது படைப்புக்களை ஒலிப்புத்தகங்களாகவும் வெளியிட்டு வருகிறது.
ராஜராஜசோழனின் சதய விழாவை மையமாக வைத்து எழுதப்பட்ட நல்ல சஸ்பென்ஸ் நாவல். ஒரே ஒரு வருத்தம்: குந்தவை பிராட்டியார் ஒரு அத்தியாயத்திலாவது வருகிறார் ஆனால் வந்தியத்தேவர்... சத்ரபதி சிவாஜிக்கு மகாராஷ்டிராவில் விடுமுறை ஆனால் தமிழர்களின் தலைச்சிறந்த அரசர்களில் ஒருவர், அவரின் சதய விழாவிற்கு தமிழ் நாட்டில் அரசு விடுமுறை கிடையாது. பள்ளியில் கூட இவர்களை பற்றி அதிகம் படித்தாக ஞாபகமில்லை. தமிழனின் பெருமையைவிட இந்தியனின் பெருமையை தான் பள்ளிப்பருவத்திலிருந்தே திணிக்கிறார்கள்.
இந்த புதினத்தில் என்னை மிகவும் கவர்ந்தது இதன் கதைக்களம் தான். ஏற்கனவே இந்த எழுத்தாளரின் பைசாசம் இது போன்று தான். அதாவது பண்டைய காலத்தில் நடக்கும் ஒரு குற்றமும் அதனை துப்பு துலக்கி தீர்வை காணும் அந்த காலத்து நபர்களும். இந்த மாதிரி இரண்டையும் அருமையாக இணைத்துள்ளார் எழுத்தாளர். 'ஹிஸ்டாரிகல் பிக்ஷன்' என்ற ஒரு வகை புனைவை மேற்கொண்டுள்ளார்.கற்பனையுடன் உண்மையும் கலந்து எழுதப்படும்பொழுது நம் வாசிப்புக்கு இன்னும் மெருகேறுகின்றது. கோகுல் அவர்களின் எழுத்து நடையும் கற்பனையும் நம்மை அந்த காலத்துக்கே கொண்டு சென்று அம்பலவாணர் மற்றும் மழபாடியார் இவர்களுடன் இணைந்து கதையின் முழு ஓட்டத்தையும் உடனிருந்து கண்டு கழிக்கிறோம். முக்கியமான கதைமாந்தர்கள் சிலவர்களே என்றாலும் நிறையவே சின்ன சின்ன பாத்திரங்கள் வந்து செல்கின்றன. வாசிப்பின் ரசனையை அது மேலும் யதார்த்தமாக்கிறது. அங்கு அங்கு வரும் சங்க காலத்து வட்டார வழக்கு அழகு. எனக்கு இது வேகமான வாசிப்பிப்பாகவே அமைந்தது. அதே நேரத்தில் விறுவிறுப்பான ஒரு திரைப்படம் கண்ட நிறைவு. ஒரு வேகமான சுவாரஸ்யமான வாசிப்பை விரும்புகிறவர்கள் இதை கட்டாயம் படிக்கலாம்.
#196 Book 37 of 2023- இராஜகேசரி Author- கோகுல் சேஷாத்ரி
Firstly,thanks to “Palaniappa brothers” for giving me the opportunity to read and review this book.
“பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்ட போது ஆசியாவின் மிகப் பெரிய விமானமாக அது இருந்தது என்பதை யோசித்துப் பார்த்தால் இந்தச் சிற்பிகள் எடுத்துக் கொண்ட பொறுப்பு எத்தனை பெரியது என்பது புலனாகும்.”
“இராஜகேசரி மூவேந்த வேளார்” என்னும் அம்பலவாணரை மையமாகக் கொண்ட கதை இது.உடையாரின் ஐப்பசி மாத சதய விழாவுக்கு (birthday) 4,5 நாட்கள் முன்பு ஒரு சம்பவம் நடக்கிறது.இராஜ இராஜ சோழனின் உயிருக்கு அவர் சதய நாளில் எதிரிகளால் ஒரு ஆபத்து நேர இருக்கிறது.யார் அந்த எதிரிகள்?எதற்காக அவர்கள் உடையாரை கொல்ல நினைக்கிறார்கள்?அவர்களின் திட்டத்தை எப்படி சோழ படைவீரர்கள்/அரசு உறுப்பினர்கள் முறியடித்தார்கள் என்பது தான் கதை.
கல்கியின் “பொன்னியின் செல்வன்” ஏற்படுத்திய தாக்கத்தில் கோகுல் தன் எழுத்துப் பயணத்தை தொடங்கியிருக்கிறார்.மிகவும் எளிய தமிழில் எல்லாருக்கும் புரியும் வகையில் இந்த புத்தகம் அமைந்திருப்பது மேலும் ஒரு சிறப்பு.அத்தனை வரலாற்றுத் தகவல்களை இந்த புத்தகத்தில் அள்ளி வழங்கியிருக்கிறார்.உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புனைவுக்கதை தான் இது.
முதல் அத்தியாயத்தில் இருந்தே கதை விறுவிறுப்பாக நகர்கிறது.பெரிய கோவில் கட்டும் பணிகள்,சதய விழாவுக்காக தஞ்சையில் அரங்கேறும் ஏற்பாடுகள்,நிகழ்ச்சிகள்,சோழ மக்களுக்கு உடையாரின் மேலிருக்கும் அன்பு,பக்தி,பாசம்,சோழ வீரர்களின் திறமை என அத்தனையும் படிக்கும் போதே மெய் சிலிர்க்கிறது. மழபாடியாரின் புத்திக் கூர்மை கதையின் போக்கை வெகு சுவாரஸ்யமாக்கிறது.குந்தவை ஒரே ஒரு அத்தியாயத்தில் தான் வருகிறார்-அந்த ஒன்றே போதும் அவருக்கு சோழ தேசத்தின் மீதிருக்கும் காதலையும்,அவரது பெருமையையும் சொல்ல!
இராஜ இராஐ சோழன் எப்படிப் பட்ட அரசர்,சோழ இராஜ்ஜியம் எப்படி இவரால் “சோழ சாம்ராஜ்ஜியம்” ஆனது,அவர் ஆட்சியில் நாடும் மக்களும் எத்தனை மகிழ்வாக இருந்தது என்பதை இந்த புத்தகத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் உடையாரின் பெயர் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும்! சோழ மக்களுக்காவே,அவர்களின் நலனுக்காகவே அவர் வாழ்ந்ததால் தான் இன்றளவும் “சோழத்தின் பெருமைக் கூற சொல் பூத்து நிற்கிறது”.படிக்கையில் என்னுள் ஒரு பெரும் ஏக்கம் எழுந்தது-அத்தனை பெருமை வாயந்த சோழ மண்ணில் பிறக்கவில்லையே என்று! ஆனால்,அவற்றையெல்லாம் படிக்கும் பேறு கிடைத்ததை எண்ணி அகம் மகிழ்கிறேன்.
வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் என்றாலே கதைக்களம் பெரும்பாலும் மன்னர்களை அல்லது இளவரசர்களை சுற்றியே அமையும். வெகு சில புத்தகங்களே இதில் இருந்து மாறுபடும். மாறுபடும் புத்தகங்கள் கூட சில சமயம் முழு நீள காதல் காவியங்களாக அமைந்து விடுவதுண்டு. இவ்வகை புத்தகங்களில் இருந்து சற்றே மாறுபட்டு. இல்லை இல்லை. முற்றிலும் மாறான ஒரு கோணத்தில் எழுதப்பட்டது ராஜகேசரி என்னும் புதினம்.
புத்தகம் ராஜ ராஜ சோழரின் காலத்தில் நடைபெறுவதாக அமைந்துள்ளது. எனினும் நம் மரியாதைக்குரிய ராஜ ராஜ சோழர் கதையில் மிகச்சிறிய பங்கே வகிக்கிறார். புத்தகத்தின் பிரதான கதாப்பாத்திரங்கள் பரமன் மழபாடியார் மற்றும் அம்பலவாணர் ஆவர். இவர்களுள் அம்பலவாணர் அரைக்கிழவர் மற்றும் ஒரு சாதாரண குடிமகன். பரமன் மழபாடியார் ஒரு உயரதிகாரி.ஒரு நாள் அம்பலவாணர் இரவு கூத்து முடிந்து தன் அகத்திற்கு செல்லும் வழியில் ஒரு கொலை நடக்கிறது.
இராஜகேசரி by கோகுல் சேஷாத்ரி and narrated by தீபிகா அருண். Another thrilling Historical fiction from Gokul Sheshadri narrated by Deepika Arun. The narration was fantastic as usual by Deepika and the book was very gripping. Although, I see a pattern in Gokul Seshadri's writing. He builds the story up until the last few chapters, the twists and turns unfold in the last 2 to 3 chapters. This was the same pattern in Paisaasam as well. Why did I give 3 stars even after praising the author and the narrator? 2 major reasons, there was an instance where the author mentioned illiterates as "Tharkiri" as if they didn't get an education without interest that kinda irked me a lot. The second and most important reason when a couple of "female put make-up as men which looked disgusting and whatever said and done they are women" there was so much insensitivity in this one statement, in that one statement he disapproved Transmen, Cross-dressers, although that was not the case within the story when the word "Disgusting" is used it holds a lot of insensitivity in that. Otherwise a great thrilling read.
Rajakesari is an out and out thriller historical novel with a tight storyline and suspense till the end. The story is set during Rajaraja Cholan's period. The king is building the great temple at Thanjavur and there is a plot against his life. The hero of the story is an old man unlike other such historical novels. The author gives lot of historical evidences as bottom notes for terminologies, incidents and real people involved in the story. There are also lot of photos and sketches which add flavour to the story. The book can also be considered as a one of its kind tamil historical detective fiction. It was a pleasant surprise for me to read a book of this genre in tamil as I'm fond of books of this genre written by authors like C.J.Sansom and Ellis Peters. Definitely a book worth reading.
தமிழ் இலக்கிய சமூகம் பாராட்டப்பட வேண்டிய , பாராட்ட மறந்த எழுத்தளார்களில் கோகுல் சேஷாத்ரியும் ஒருவர் . அவருடைய எழுத்து பல பரிமாணங்களில் படிப்பவரை கவர்கிறது என்று சொல்வதில் மிகையேதுமில்லை . தமிழில் ஒரு நல்ல த்ரில்லர் , அதுவும் உலகத்தரத்தில் எழுதும் திறன்படைத்தவர் கோகுல் என்று சொல்வதில் மிகையேதுமில்லை . கதாபாத்திரங்களை அவர் கையாண்ட விதம் , கதைக்களத்தை அமைத்த விதம் என்று ராஜகேசரியில் பாராட்டப்பட வேண்டிய விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் . முன்னுருக்கும் மேற்பட்ட பக்கங்கள் இருக்கிறது என்கிற எண்ணமோ , சோர்வோ நமக்கு வராமல் பார்த்துக்கொண்டதில் எழுத்தாளரின் திறன் தெளிவாய் தெரிகிறது . நவீன வரலாற்று புதினங்களில் பாராட்டப்பட வேண்டிய அருமையான படைப்பு இந்த ராஜகேசரி . த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக தவற விடக்கூடாத புத்தகம் .
The story centers around the conspiracy and plots by the Cheras to assassinate the great Chozha King RajaRajan (Arunmozhi Varman) and how an old war veteran named Ambalavanar Kamban Arayan from a Chozha village journeys to the capital to save the king from impending danger. The author vividly expresses Ambalavanar's love for the king, his determination to protect him, and his struggles as a commoner to achieve his goal.
The Chera assassins are portrayed in a unique and intriguing manner, distinct from the killers we've encountered in other books. The book is well-paced, with the story maintaining its grip throughout without being unnecessarily lengthy. It is a good read, featuring a limited number of characters and a few well-placed twists.
Just one word - brilliant! The story revolves around a conspiracy to assassinate emperor Rajaraja Cholan on his birthday. No one knows who is executing this plan and where or if such a conspiracy even exists. One of the Chola empire's spies is murdered by some mysterious people, and that starts a series of events that lead to the day of the supposed assassination attempt. The authorities get clues in bits and pieces with several missing pieces in between. The book keeps readers on their toes at all times, as there's absolutely nothing that gives away what might happen next.
Amazing plot with numerous historical references and proofs . Perfect story line for the Chola period . Kept me engrossed till the last page . Great narration ! Waiting for the next book !
P.S. Vandhiyathevan does get a special mention in the book.
Story of the great King Rajaraja cholan. This part sets the pace for the greater story to be unfolded in the other parts. The story revolves thrillingly around the plot to assasinate the great king.
Amazing historical fiction from Gokul Seshadri. His style of writing is very much comparable to Kalki. The story of Rajakesari revolves around an assassination attempt on RajaRaja chola. The story is kept very simple and highly interesting. Must read if you are a fan of Kalki. Audiobook Comment: Voice by Deepika Arun (Storytel) indulges us in to the story. Perfect.
கோகுல் ஷெஷாத்ரியின் அற்புதமான வரலாற்று புனைகதை. அவரது எழுத்து பாணி கல்கிக்கு மிகவும் ஒப்பிடத்தக்கது. ராஜகேசரியின் கதை, இராஜராஜ சோழன் மீதான ஒரு படுகொலை முயற்சியைச் சுற்றியே உள்ளது. கதை மிகவும் எளிமையாகவும் மிகவும் சுவாரஸ்யமாகவும் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கல்கியின் ரசிகராக இருந்தால் படிக்க வேண்டும். ஆடியோபுக் கருத்து: தீபிகா அருண் (ஸ்டோரிடெல்) குரல் கதையில் நம்மை ஈடுபடுத்துகிறது.
The book increases the curiosity of the reader on passing every page, though it has a logical mistake that looks blunder , definitely it will be a good read....