என்னுரை- நாகேந்திர பாரதியின் சிறுகதைகள் ---------------------------------------------------------------------------------- எனது பள்ளிப் பருவத்திலே இருந்தே கவிதை, சிறுகதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்தது. அறிமுக எழுத்தாளனாக கல்கி பத்திரிகையில் எனது முதல் சிறுகதை வெளியானது.
எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் குமுதம், கல்கி, குங்குமம், பாக்யா , ராணி, தேவி கணையாழி, பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. எனது கவிதைகள் பல தொகுப்புகளாக அமேசானில் கிண்டில் வெளியீடாக வந்துள்ளன.
இது எனது சிறுகதைத் தொகுப்பின் ஆறாவது புத்தகம். காதல், பாசம், நகைச்சுவை, திகில் என்று பலவித உணர்ச்சிகளின் தொகுப்பாக வந்துள்ளதால் இதற்கு ' கதம்பக் கதைகள் ' என்று தலைப்பிட்டுள்ளேன். இது ' கதம்பக் கதைகள் ‘ - நாகேந்திர பாரதியின் சிறுகதைகள் - தொகுப்பு 6 '