வள்ளலார் எண்ணாயிரம் திருஅருட்பா பாடல்களைப் பாடி இருக்கிறார். இவை ஆறு திருமுறைகளாக வெளிவந்திருக்கின்றன. இவைகளை எல்லாரும் அறிவார்கள்.
அவர் எழுதி இருக்கும் உரைநடைகள் மிகப் பெரும்பாலோருக்குத் தெரியாது. வள்ளலாரின் உரைநடைகள் எல்லாம் "திருஅருட்பா உரைநடைகள்" என்ற பெயரில் ஒரு நூலாகவே வெளிவந்திருக்கிறது. இது ஐந்நூறு பக்கங்களுக்கு மேல் கொண்ட மிகப் பெரிய நூல்.
இந்த உரைநடை நூல் மனுமுறைகண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம், உபதேசங்கள், வியாக்யானங்கள், விண்ணப்பங்கள், கடிதங்கள், அழைப்புகள், கட்டளைகள், மருத்துவக் குறிப்புகள் என்ī