நனவிலி எனும் சொல்லுக்கு, சுய நினைவிழந்து நிற்கும் ஆழ்மனம் என்பது பொருள். அதன் வினையால் உருவாகப் போவதென்ன? ஆழ்மனதின் ஆசை காரணமாய், இறந்த மனிதர்களை திரும்ப பார்க்கும் வசதியோடு வரும் கண்ணாடியை பொதுமக்கள் அனைவரும் விரும்பி பயன்படுத்துகின்றனர். அந்த கண்ணாடியில் துவங்கும் கதை, பக்குவமாய் பரிணாம வளர்ச்சி அடைந்து, அதைச் சார்ந்த சமூகப் பிரச்சனைகளை முன்னிறுத்துகிறது. ஒற்றை மனிதனாய் நம் நாயகன் யுவி, ஒரு பெரும் யுத்தமே நடத்தி முடிக்க, அத்தனையையும் ஆட்டுவிக்கும் அவன் எதிரி அடங்கிப்போவானோ? நனவிலி மனதோடு எதிர்காலத்தில் நூற்றுக்கு இருநூறு சதவீதம் நனவாகப் போகும் ஒரு கதையைக் காண வாருங்கள்...
விறுவிறுப்பான Sci-Fi கதை. இறந்தவர்களோடு தொடர்பு கொள்ள ஒரு கண்ணாடி என்பது தான் இக்கதையை படிக்க ஈர்த்தது. தெகிடி படம், Person of interest series, ஒரு கதாப்பாத்திரம் சவுக்கு சங்கரையும் ஞாபகப்படுத்தியது.