Jump to ratings and reviews
Rate this book

யவன ராணி #1

யவன ராணி - முதல் பாகம்

Rate this book
Yavana Rani (Tamil:யவன ராணி) is a Tamil language historical novel written by Sandilyan. Its title translates to "Greek Queen" in English. The story is based on ancient Tamil poetry. It is a love story set around 2000 years ago, focusing on the Commander-in-chief of the Chola Army. The story takes place during the period of Karikalan, one of the greatest kings of the Early Cholas.

744 pages, Kindle Edition

Published October 31, 2022

493 people are currently reading
6320 people want to read

About the author

Sandilyan

76 books389 followers
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
847 (48%)
4 stars
571 (32%)
3 stars
205 (11%)
2 stars
64 (3%)
1 star
70 (3%)
Displaying 1 - 30 of 56 reviews
Profile Image for Kumaran Vellaisamy.
37 reviews38 followers
January 24, 2015
படித்ததிலேயே இரு பெண்களிடமும் மயங்கிவிட்டேன். நல்ல வேளை நான் அப்பொழுது பிறக்கவில்லை, இல்லையேல் அந்த இரு பெண்களையே சுத்தி வந்திருப்பேன்
Profile Image for Udhayt.
44 reviews6 followers
June 23, 2015
Let me try to write a review in Tamil :)


கரிகால்சோழரின் வெம்போரை சித்தரிக்கும் இந்நூலுக்கு காவேரி நதியின் சிறப்பையும், தமிழ் கன்னியரின் அழகையும் கல்கி வர்ணிப்பது ஒரு அணிகலனாக அமைகிறது.

ஆடவரின் இதயம் ஒருவருகருக்கு சொந்தம் இல்லை என்பதை போல கட்டும் இளஞ்செழியன்,தமிழ் பெண்டிரின் கற்புநெறியை காட்டும் பூவழகி,விதியை வழுவாது நம்பும் யவன ராணி ஆகிய மூவரும் ஒருங்கே சேர்ந்து கதைக்கு மேலும் உயிர் ஊட்டியுள்ளனர்.

இளஞ்செழியன் மற்றும் பூவழகிக்கு இடையேயான காதல் ஊடல் நகைக்கத்தக்கது.

வீரம் இல்லாத சோழர்களும் இல்லை, தமிழ் காவியமும் இல்லை. இந்த யவன ராணி நூலும் அதற்கு ஒரு விளக்கல்ல.

நல்லதொரு படைப்பு.
Profile Image for V.J. Eshwar.
Author 2 books6 followers
July 14, 2014
Yavana Rani was the first historial fictional work I had ever read in Tamil. At first, I was very much scared that I might not be able to finish it because I hated too much description in any novels and especially after my dad warned me of the same in this book too but I must thank Sandilyan for changing my taste. Ofcourse the book was too much descriptive but every word written was underlined by his extraordinary imagination which made me live at the periods of the Cholas. He was one of the best. And I would never forget Yavana Rani... !!!

She is the best!!!
Profile Image for Jeni Gabriel.
51 reviews3 followers
April 7, 2021
My first Tamil historical novel of this author impressed me so much to read all his books further. This man is so much gifted.. that his narration takes us to same feel n time period.. you enjoy it so much that it becomes so difficult and unbelievable to separate the imaginary characters from the history.. The characters, their contributions, patriotic feelings, moral values, ways of spying for greater good in those days inspired me remarkably.. especially the strong character Yavana Rani who keeps up her pride n belief till the end. I would definitely read it again n again.. if you also like strong female characters in a story n enjoy the battle of fate n wisdom, you should certainly go for this book. I am sure you will sleep only after finishing both the parts..
Happy reading
Profile Image for Ramachandran.
33 reviews1 follower
October 9, 2010
The 1st book was a bit boring.. but the 2nd book was absolutely marvelous. Feeling proud to be a Tamilan..
Profile Image for Ram M Srinivas.
91 reviews2 followers
January 17, 2023
மற்ற வரலாற்று நாவல்களில் நான் அனுபவித்ததைப் போல இந்த நாவல் எனக்குத் திருப்திகரமாக இல்லை. இந்த நாவல் நிறைய மசாலா மற்றும் வேண்டுமென்றே சஸ்பென்ஸ் கொண்ட திரைப்படம் போன்றது. பகுதி 1 முடிவில், கதையை விளக்க வேண்டுமானால், முக்கியமான காட்சிகளை மட்டும் 15 நிமிடங்களில் சொல்லிவிடலாம். மீதமுள்ள அனைத்தும் வெறும் தேவையற்ற விளக்கங்கள் மற்றுமே. பக்கங்களை நிரப்புவதற்காகவே காதல் காட்சிகள் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டது போல் உணர்கிறேன். தேவையான காட்சிகளை மட்டும் வைத்து 2ம் பாகம் வேகமாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.
Profile Image for Stalin Devaraj.
1 review1 follower
Read
April 19, 2017
Very Interesting Novel, but the author was highly influenced by cast, when we read his noveles, we can understand.
Profile Image for Sekar S.
22 reviews4 followers
July 13, 2023
அருமையான வரலாற்று புதினம், பழைய நகரங்கள் கண் முன் வந்து போயின. குந்தவை - வந்தியத்தேவன் போல் இங்கும் ஒரு ஜோடி. 💯 விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை
Profile Image for Antony Jerline.
27 reviews
July 22, 2023
ஒவ்வொருக் கதாப்பாத்திரங்களும் சந்திக்கும் ஒவ்வொருவரையும் வியப்பில் ஆழ்த்துவது நன்றாக அமைந்திருந்தது. கடைசிப் பகுதிக்குச் சற்று முன்புள்ள அத்தியாயங்களில் வரும் நகைச்சுவை அருமை. யவன குருமார்கள் சொன்ன விவரங்கள் என்று யவன ராணி பல இடங்களில் கூறியதும், அந்த கனிப்பின் மீதுள்ள நம்பிக்கையும், விதி மீதுள்ள நம்பிக்கையும் கதையை நன்கு சுழல விட்டதென்றே கூறலாம்.
2 reviews
February 22, 2021
யவனராணி

ஏதோ சோகச்சிந்தனையில்  மனம்போன போக்கில் புகார் கடற்கரையில் நடந்து கொண்டிருக்கும் இக்கதையின் நாயகனும் புகார் நகர சோழப்படை உப தலைவனுமான இளஞ்செழியன் காலில் ஏதோ தட்டுபட கீழ் நோக்கிய அவன் கண்களில், நெருப்பில் உருகும் மெழுகே உருகக்கூடிய பேரழகு கொண்ட ஓர் ஏந்திழையின் உடலை காண்பதாக தொடங்குகிறது இப்பெரும் நாவல்...

காலில் இடர்பட்டவள் யார் என்பதில் தொடங்கி அவள் தன் நாட்டிற்கே எதிரி என்றும் தன் நாட்டில் ஆட்சியை பிடித்து ராணியாக முடி சூட வந்தவள் என்றறிந்த பின்னும் அவளை காணும் பொழுதெல்லாம்  தனக்கென தன் அத்தை மகள் பூவழகி என்னும்  ஓர் அழகிய வஞ்சிக்கொடி  உள்ளதையும் மறந்து  சற்று மனத்தடுமாற்றம்  அடையும் சாதாரண மனிதனாகவே வலம் வரும் இளஞ்செழியன் ஒரு கட்டத்தில்  நாட்டை காப்பாற்ற அவன் எதிர்கொள்ளும் அபாயங்களும் அதிலிருந்து மீள்வதும் அவனின் சிந்தனை திறமையை பறைசாற்றுகின்றன  தவிர இறுதியில் உயிரையும் பணயம் வைத்து செய்யும் போர் அவனின் விரத்தை பறைசாற்றுகிறது.

இவர்கள் ஒரு புறம் இருக்க...

காற்றை விட வேகமாக ரதத்தில் வந்து போர் புரியும் மாவீரன் என்று பெயர் பெற்ற இளஞ்செட்சென்னியான தன் தந்தையையும் சூழ்ச்சியால்  கொன்று, தன்னையும் யாருமறியா சிறை வைத்த தாயாதியிடம் இருந்து  எவ்வாறு தப்பி பிழைத்தான் பின் வேளிர்,சேர  மற்றும் பாண்டிய மன்னர்களின் கையில் சிக்கிய தன் நாட்டை தளபதி இளஞ்செழியன், மாமன் இரும்பிடர்த்தலையார் மற்றும் ஆசை நாயகி அல்லியுடன் சேர்ந்து எவ்வாறு மீட்டான் நம் சரித்திர நாயகன் திருமாவளவன் என்னும் கரிகாலன் என்பதே  யவனராணி எனும் இந்நாவல்...

துறவறம் பூண்டு அடிகளாக நமக்கு அறிமுகமானாலும் தன் நாடு மாற்றார் கைக்கு செல்லாமல் இருக்க அடிகள்  பிருமானந்தரும், கருவூர் சமண மடத்தின் சமண அடிகளும்,இளவல் கரிகாலனின் ஆசை நாயகியான அல்லியும்,இரும்பிடர்தலையாரும் செய்யும் ஒவ்வொரு பிரயத்தனங்களும்  இளவல் கரிகாலன் மீதான அவர்களின் பேரண்பையும் நாட்டுபற்றையும் எடுத்துரைக்கிறது...

தன் ஆட்சியை தமிழகத்தில் நிறுவ ���ேண்டும் என்று வந்து காதல் என்ற ஒன்றிற்காக தன் இன்னுயிர் ஈந்த யவனராணியும், தன் குருவே ஆனாலும் அதனினும் மதிப்புடைய ராணிக்கு எதிரானதால் குருவையே எதிர்க்க துணிந்த அலீமாவும், தன் நாட்டிலிருந்து இங்கு வந்து தன் அரசை நிறுவி முடி சூட வேண்டும் என்ற குறிக்கோளோடு வந்தாலும் வந்த மாத்திரத்தில் இளஞ்செழியனிடம்
மனதை பறிகொடுத்த ராணி தன் நிலையிலிருந்து வழுவினாலும், தான் வந்த நோக்கத்திற்காக எதையும் செய்யும் ஒரு அசுரனாக சித்தரிக்கப்பட்டிருக்கும் யவன கடற்படை தளபதியான டைபீரியஸ்சும் என்றும்  மனதில் நிற்பார்கள்.

பொதுவாக கரிகாலன் என்றால்... எல்லாருக்கும் தெரிந்தது கல்லணையை கட்டிய  மன்னன் ஒருவனே கரிகாலன் என்றும் இன்னும் பலருக்கு  இவன் எதனால் கரிகாலன் என்றழைக்கப்படுகிறான் என்ற காரணமும் தெரிந்திருக்க கூடும்...
மேலும் கூறப்போனால் வரலாற்றின் மேல் ஆர்வம் உள்ளவர் சிலருக்கு இவர் ஒரு சோழ மன்னன்  என்றும் கூட அறிந்திருக்கலாம்...
ஆனால் இவன்  இயர் பெயரென்ன இவன் ஆட்சி எத்தகையது, இவன் தந்தை பெயரென்ன மற்றும் இவன் எவ்வாறு ஆட்சியில் அமர்ந்தான் என்னும் வரலாறு இங்கு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை...
ஆம்..
ஏனெனில் இவ்வுலகிற்கே எடுத்துக்காட்டாய் நீர் மேலாண்மையிலும், நிர்வாக மேலாண்மையிலும், மக்களை போற்றுதலிலும், ஆட்சி அதிகாரத்திலும் சிறந்து விளங்க கூடிய பண்முக திறமை கொண்ட மன்னர்கள் பலர் இத்தமிழகத்தில் இருந்தும் அதை தன் மக்களுக்கு கொண்டு சேர்க்காமல் தன் பாட புத்தகத்தில் மௌரியர்களுக்கும், முகலாயர்களுக்கும் இடம் கொடுக்கும் ஒரு திறமையான அரசை வைத்துக்கொண்டு வெறும் பள்ளிப்புத்தகத்தில் கிடைக்கும் வரலாற்றை மட்டுமே படித்திருக்கும் சாமானியர்களை குறை கூறுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்...
Profile Image for Arya.
83 reviews
February 7, 2020
The story traces back to Karikala Cholan, one of the greatest kings of the chola dynasty. This story is about the commander of the army, how he saves his country from the clutches of the Greek naval captain, Tiberius.
The book is nice. Recommended for all who have read his other series kadal pura. I'm easy to read the next part
12 reviews1 follower
December 3, 2023
Yavana rani written by chandilyan is one of the popular books,it's a historical fiction of queen who seized the chola kingdom when karikala cholan was young..In this first part the story is filled with love,perspicaciousness,guile of villain,and subterfuge of cholasupporters,and expections on next actions...
Going to start reading the next part.
Thank you
Profile Image for Gobinath.
34 reviews8 followers
May 14, 2022
மிகமோசமான புத்தகம். இதை என் கொண்டாடுகிறார்கள் என்று புரியவில்லை.

சலிப்புத்தட்டும் கதை, சுவாரஸ்யமில்லா எழுத்துநடை. 2000 ஆண்டுகளுக்கு முன்னாள் நடக்கும் கதையில், 'பாரதம்' 'இந்து' மதம் எல்லாம் எங்கிருந்து வந்தது? எழுத்தாளர்களுக்கு கொஞ்சமேனும் வரலாற்று அறிவும் பொறுப்பும் வேண்டாமா?
Profile Image for Aargee.
163 reviews1 follower
November 22, 2023
Fantastic story much unlike....

Fantastic plot much unlike கடல் புறா but the narration style is typical சாண்டில்யன் expressing the characters expressions & emotions often that go beyond the storyline. However there is no shortage of twists & thrills as the plot thickens.
1 review
October 22, 2025
One of the greatest works of Sandilyan!!

Most captivating story, based on the real history, Sandilyan combines it with his own imagination and narrative skills.
This is perhaps the best of his creations.
Profile Image for Preeti Pattabiraman.
15 reviews4 followers
July 24, 2018
Wonderful description of the Sangam period and of the Greeks and Romans. Lets read it for the queen😍🙂
Profile Image for Sudhakar D.
7 reviews
December 31, 2018
ஒரு பாகத்தில் முடிக்க வேண்டிய புதினம்.
Profile Image for Varun Ragul.
23 reviews
April 5, 2021
Best novel about Chola dynasty how karikala cholan conquered his kingdom back with the help of Ilancheliyan has described from ilancheliyan point. Interesting story must read one
8 reviews
August 27, 2022
one of the best from sanlyan. யவன இராணியின் காதல் இன்னும் என்னுள் மறையவில்லை. பெரும் தாக்கம் ஏற்படுத்திய புத்தகம்.
23 reviews
February 25, 2023
good and bad

Brilliant start. Got slow somewhere in between .. looking forward to the second volume though ! Hopefully it does not disappoint !
Profile Image for Kalai Arasi.
13 reviews
December 17, 2023
படைத்தலைவன் ,யவன ராணி சுற்றி கதை அருமையாக உள்ளது..
Displaying 1 - 30 of 56 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.