Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.
இந்தக் கதை எப்படி வரலாற்று நாவலாக வகைப்படுத்தப்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. வரலாற்று நாவல் என்பது அடிப்படை வரலாற்று காட்சியில் சில கற்பனை கதாபாத்திரங்கள் சேர்க்கப்படும் ஒன்று ஆனால் இந்த புத்தகத்தில் வரலாற்று நாவல் என்று கூறுவதற்காக சில வரலாற்று பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் இருந்து சில கவிதைகளைச் சேர்த்து, வரலாற்று இடங்களிலிருந்து காட்சியை எடுத்துக்கொள்வதால் அது வரலாற்று நாவலாகிவிடாது.இது முழுக்க முழுக்க கதையாக எடுக்கப்பட்ட மசாலா படம். சில கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்படுவது போல, இந்த உதாரணம் நேர்மாறாக உள்ளது.வழக்கமான ஹீரோ, குறைந்த தரத்தில் இருப்பார், ஆனால் ராஜாவைக் கோர முடியும் மற்றும் அவரை அழகாக வெளிப்படுத்தும் நாவலில் 3 கதாநாயகிகள் உள்ளனர். ஹீரோவை திருமணம் செய்ய ஹீரோயின்கள் சண்டை போடுவார்கள், ஹீரோ சண்டை போட்டு வில்லனை தோற்கடிப்பார். ஹீரோ எல்லா இடங்களிலும் இருப்பார், எல்லாவற்றையும் அறிந்திருப்பார், 20 வயதாக இருப்பார், அவர் போர் வியூகத்தை வழிநடத்துவார், ஒரு மந்திரியும் ராஜாவும் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார். எதிரி என்ன செய்வான் என்பதை அவன் கணிப்பான், எதிரிகள் அவனைக் கணிக்க மூளை இல்லாமல் இருப்பார்கள். அதில் 1 க்கும் மேற்பட்ட ஹெராயின் இருப்பதால் மற்றும் நாவல் போர் வரிசையைக் கொண்டிருப்பதால், வழக்கமான டெம்ப்ளேட்டாக கிளைமாக்ஸில் ஒரு ஹெராயின் கொல்லப்படும். சரித்திர நாவல் என வகைப்படுத்தி, பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், உடையார், கடிகை, வேள்பாரி என நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
எதிர்பாராத திருப்பங்களுடன் யவன ராணி 2ஆம் பாக கதைக்களம் அமைந்திருந்தது. யவன ராணியின் உதவி, இளஞ்செழியனின் தந்திரம் மற்றும் டைப்பீரியஸின் கடமையுணர்வு இவற்றை மையமாக கொண்டது. வர்ணணையைச் சற்று குறைத்திருக்கலாம். நிறைய இடங்களில் பழையவற்றை நினைவுப் படுத்துவதாக கூறி திரும்பத் திரும்ப வாசித்தவற்றயை வாசிக்கும் நிலை. இது இல்லாது இருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.
Today we could see many people migrate from our state and head to foreign countries for better living. 😐 But will you believe that there was time when foreigners travelled to our state and worked under us?!?😇
While Karikala Cholan ruled Tamilagam, 2000 years ago Greeks, Romans, Arabs, etc came here and settled down for 2 reasons : good jobs and better administration 🥳
This book describes that golden era 🎉 in which Karikala Cholan had to undergo many hardships before he could capture and ascend the throne. 🥰 Against the Cheras, Pandyas and the then ruler of Chola along with 15 Velirs, Karaikalan fights the war in Venni Paranthalai and wins it 🔥
Though the hero of the story is Ilanchezhiyan, I loved the characters Karikalan and his sister Poovazhagi 💐 The Plot, battle of Venni and Karikalan’s bravery were beautifully handled🌹
But if you ask me on why I gave 3/5 for this book - half of the second part describes how Ilanchezhiyan escapes back to Puhar. The author could have cut it short...but may be Sandilyan fans would like it 🤷🏻♀️
Another feast for all historical fiction lovers...you can give it a try to know more about how glorified Tamilagam was 2000 years ago ✨
I loved this story very very much... I had so many mixed emotions and feelings with this book... Even though the author used some descriptions used to decribe girls appearance which i don't like, still i loved the way the story moved.. And the every twist in every chapter.. It was great great book in my heart.. At last i loved the characters which i hated in the first place..
Awesome book must recommended to all of the tamil readers out there ❤️
Great historical fiction & is a must read. As usual, the story & pages would've been much less if it were less repetitive & carries mellowed down emotions
ஏதோ சோகச்சிந்தனையில் மனம்போன போக்கில் புகார் கடற்கரையில் நடந்து கொண்டிருக்கும் இக்கதையின் நாயகனும் புகார் நகர சோழப்படை உப தலைவனுமான இளஞ்செழியன் காலில் ஏதோ தட்டுபட கீழ் நோக்கிய அவன் கண்களில், நெருப்பில் உருகும் மெழுகே உருகக்கூடிய பேரழகு கொண்ட ஓர் ஏந்திழையின் உடலை காண்பதாக தொடங்குகிறது இப்பெரும் நாவல்...
காலில் இடர்பட்டவள் யார் என்பதில் தொடங்கி அவள் தன் நாட்டிற்கே எதிரி என்றும் தன் நாட்டில் ஆட்சியை பிடித்து ராணியாக முடி சூட வந்தவள் என்றறிந்த பின்னும் அவளை காணும் பொழுதெல்லாம் தனக்கென தன் அத்தை மகள் பூவழகி என்னும் ஓர் அழகிய வஞ்சிக்கொடி உள்ளதையும் மறந்து சற்று மனத்தடுமாற்றம் அடையும் சாதாரண மனிதனாகவே வலம் வரும் இளஞ்செழியன் ஒரு கட்டத்தில் நாட்டை காப்பாற்ற அவன் எதிர்கொள்ளும் அபாயங்களும் அதிலிருந்து மீள்வதும் அவனின் சிந்தனை திறமையை பறைசாற்றுகின்றன தவிர இறுதியில் உயிரையும் பணயம் வைத்து செய்யும் போர் அவனின் விரத்தை பறைசாற்றுகிறது.
இவர்கள் ஒரு புறம் இருக்க...
காற்றை விட வேகமாக ரதத்தில் வந்து போர் புரியும் மாவீரன் என்று பெயர் பெற்ற இளஞ்செட்சென்னியான தன் தந்தையையும் சூழ்ச்சியால் கொன்று, தன்னையும் யாருமறியா சிறை வைத்த தாயாதியிடம் இருந்து எவ்வாறு தப்பி பிழைத்தான் பின் வேளிர்,சேர மற்றும் பாண்டிய மன்னர்களின் கையில் சிக்கிய தன் நாட்டை தளபதி இளஞ்செழியன், மாமன் இரும்பிடர்த்தலையார் மற்றும் ஆசை நாயகி அல்லியுடன் சேர்ந்து எவ்வாறு மீட்டான் நம் சரித்திர நாயகன் திருமாவளவன் என்னும் கரிகாலன் என்பதே யவனராணி எனும் இந்நாவல்...
துறவறம் பூண்டு அடிகளாக நமக்கு அறிமுகமானாலும் தன் நாடு மாற்றார் கைக்கு செல்லாமல் இருக்க அடிகள் பிருமானந்தரும், கருவூர் சமண மடத்தின் சமண அடிகளும்,இளவல் கரிகாலனின் ஆசை நாயகியான அல்லியும்,இரும்பிடர்தலையாரும் செய்யும் ஒவ்வொரு பிரயத்தனங்களும் இளவல் கரிகாலன் மீதான அவர்களின் பேரண்பையும் நாட்டுபற்றையும் எடுத்துரைக்கிறது...
தன் ஆட்சியை தமிழகத்தில் நிறுவ வேண்டும் என்று வந்து காதல் என்ற ஒன்றிற்காக தன் இன்னுயிர் ஈந்த யவனராணியும், தன் குருவே ஆனாலும் அதனினும் மதிப்புடைய ராணிக்கு எதிரானதால் குருவையே எதிர்க்க துணிந்த அலீமாவும், தன் நாட்டிலிருந்து இங்கு வந்து தன் அரசை நிறுவி முடி சூட வேண்டும் என்ற குறிக்கோளோடு வந்தாலும் வந்த மாத்திரத்தில் இளஞ்செழியனிடம் மனதை பறிகொடுத்த ராணி தன் நிலையிலிருந்து வழுவினாலும், தான் வந்த நோக்கத்திற்காக எதையும் செய்யும் ஒரு அசுரனாக சித்தரிக்கப்பட்டிருக்கும் யவன கடற்படை தளபதியான டைபீரியஸ்சும் என்றும் மனதில் நிற்பார்கள்.
பொதுவாக கரிகாலன் என்றால்... எல்லாருக்கும் தெரிந்தது கல்லணையை கட்டிய மன்னன் ஒருவனே கரிகாலன் என்றும் இன்னும் பலருக்கு இவன் எதனால் கரிகாலன் என்றழைக்கப்படுகிறான் என்ற காரணமும் தெரிந்திருக்க கூடும்... மேலும் கூறப்போனால் வரலாற்றின் மேல் ஆர்வம் உள்ளவர் சிலருக்கு இவர் ஒரு சோழ மன்னன் என்றும் கூட அறிந்திருக்கலாம்... ஆனால் இவன் இயர் பெயரென்ன இவன் ஆட்சி எத்தகையது, இவன் தந்தை பெயரென்ன மற்றும் இவன் எவ்வாறு ஆட்சியில் அமர்ந்தான் என்னும் வரலாறு இங்கு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை... ஆம்.. ஏனெனில் இவ்வுலகிற்கே எடுத்துக்காட்டாய் நீர் மேலாண்மையிலும், நிர்வாக மேலாண்மையிலும், மக்களை போற்றுதலிலும், ஆட்சி அதிகாரத்திலும் சிறந்து விளங்க கூடிய பண்முக திறமை கொண்ட மன்னர்கள் பலர் இத்தமிழகத்தில் இருந்தும் அதை தன் மக்களுக்கு கொண்டு சேர்க்காமல் தன் பாட புத்தகத்தில் மௌரியர்களுக்கும், முகலாயர்களுக்கும் இடம் கொடுக்கும் ஒரு திறமையான அரசை வைத்துக்கொண்டு வெறும் பள்ளிப்புத்தகத்தில் கிடைக்கும் வரலாற்றை மட்டுமே படித்திருக்கும் சாமானியர்களை குறை கூறுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்...
சாண்டில்யனுக்கு நன்றி. இப்புதினத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அவற்றின் தொழில்முறை என அனைத்தும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இப்புதினத்தில் எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் பிரும்மானந்தர் கரிகாலன் பூவழகி குமரன்சென்னி அல்லி நாங்கூர்வேள் இக்கதை பல கதாப்பாத்திரங்கள் கொண்டது. இதன் முக்கிய இரண்டு கதாபாத்திரங்கள் யவனராணி மற்றும் இளஞ்செழியன். சம்பவங்களும் கலைகளும் நிரம்ப இருக்கின்றன. அந்த காலத்தில் வெளிநாட்டு சூழ்நிலைகளையும் இப்புதினத்தில் காணலாம். அருமையான புத்தகம்.
Interesting historic novel.we know lot of details about karikala cholas period in chola dynasty.all characters are beautifully written by writer chandilyan.great novel