“ஸார்...”“சொல்லுங்க...” வராந்தாவில் நடந்துகொண்டே பேசினார் சத்தியமூர்த்தி.“கேஸ் இருபதாம் தேதி கோர்ட்டுக்கு வர்றப்ப - எதிர்தரப்பு வக்கீல் ஒரு புது சாட்சியத்தைக் கொண்டு வரப்போறதா ஒரு ரூமர் ஸார்!”“சாட்சிதானே...? வரட்டும்...”“அப்புறம்... ஸார்...”“சொல்லுங்க.”“இன்னிக்கு காலையில எனக்கு ஒருத்தன் ஃபோன் பண்ணி என்னை மிரட்டினான் ஸார்! துரைராஜ் கேஸ்ல தீர்ப்பு துரைராஜுக்குப் பாதகமாயிருந்தா சம்பந்தப்பட்ட எல்லார்க்குமே தண்டனை காத்திட்டிருக்குன்னு சொன்னான் ஸார்!”“ரப்பிஷ்... யாரவன்...?”“தெரியலை ஸார்!”“என்னோட சட்ட வாழ்க்கையில இது மாதிரி எத்தனையோ மிரட்டல்களை ஒரு காதாலே வாங்கி இன்னொரு காதாலே விட்டவன் நான். நீங்க பயப்படறீங்களா சப்-இன்ஸ்பெக்டர்?”“நோ... நோ.
அட்டகாசமான க்ரைம் த்ரில்லர் நாவல். தெளிவான கதை சொல்லல். நாவலின் ஆரம்பம் முதல் முடிவு வரை சிறிது கூட கதை சொல்லலில் தொய்வு இல்லை. நாவலின் முடிவு மிகவும் எதிர்பாராதது. எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.நான் படித்த ராஜேஷ்குமார் அவர்களின் மிகச்சிறந்த க்ரைம் நாவல்களில் இதுவும் ஒன்று.
Novel review
A gripping crime thriller novel. Clear storytelling. From the beginning to the end of the novel, there is no slack in the narration. The ending of the novel is very unexpected. I really liked it. This is one of the best crime novels by Rajesh Kumar that I have read.