ஆப்கனிஸ்தானில் பிறந்து, பாகிஸ்தானில் வளர்ந்து, இந்தியாவில் நாசகாரியங்கள் புரியும் இயக்கம் லஷ்கர்-ஏ-தொய்பா. மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் என்னும் பெருங்கனவு இருந்தாலும், லஷ்கரின் பெரும்பாலான செயல்திட்டங்கள் இந்திய எல்லைக்கு உட்பட்டவைதான்.
காஷ்மீருக்காகப் போரிடும் இயக்கங்களிலேயே மிகவும் பலம் வாய்ந்தது லஷ்கர். அல் காயிதா முதல் மத்தியக்கிழக்கின் அத்தனை தீவிரவாத போராளி இயக்கங்களுடனும் இவர்களுக்குத் தொடர்பு உண்டு. தவிரவும் பாக், உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. யின் பரிபூரண ஆசிர்வாதம்.
தனக்கெனத் தனி ராணுவம், அரசியல் பிரிவு, உளவுத் துறை, நிதித்துறை என்று வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட ஓர் அரசாங்கம் போலவே செயல்படும் இயக்கம் இது.