1908 மார்ச் 13. வெள்ளிக்கிழமை. கப்பல் ஓட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தெருவில் இறங்கினர். கூட்டம் கூடினர். வேலைநிறுத்தம் செய்தனர். அரசு சொத்துகளை அழித்தனர். இரும்புக்கரம்கொண்டு இந்த எழுச்சியை அரசு ஒடுக்கியது. துப்பாக்கிச்சூட்டில் நால்வர் மாண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாயினர். மக்கள்மீது திமிர்வரி விதித்த அரசு, ஆறு மாதங்களுக்குத் தண்டக்காவல் படையை நிலைநிறுத்தியது. அதற்கு முன்போ பின்போ விடுதலைப் போராட்டக் காலத் தமிழகத்தில் இப்படியோர் எழுச்சி ஏற்பட்டதில்லை எனலாம். ஏராளமான சான்றுகளைக் கொண்டு இந்த எழுச்சியின்
A.R. Venkatachalapathy, a professor at the Madras Institute of Development Studies, Chennai, has held the Indian Council for Cultural Relations’ Chair of Indian Studies at the National University of Singapore. He is published widely, both in English and Tamil, on the social, cultural and intellectual history of colonial Tamil Nadu.
1908 மார்ச் 12 வ உ சி மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை அரசு கைது செய்கிறது. அதற்கு அடுத்த நாள் மக்கள் கடை அடைப்பு செய்துவிட்டு தெருவில் இறங்கி பொது சொத்துக்களை உடைத்தும் தீயில் இட்டும் அழித்து அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். பிறகு இந்த எழுச்சியில் பங்கு கொண்ட நபர்களை அடையாளம் கண்டு அவர்களை அரசு தண்டிக்கிறது. பொதுச்சொத்திக்கு ஏற்பட்ட இழப்புகளை தண்ட காவல் படையை நிறுத்தி மக்களிடம் இருந்து வசூலிக்கிறது. எழுச்சிக்கு பிரதான காரணம் வ உ சியின் கைது தான் என்றாலும் மக்கள் தங்களுடைய சுதேசிய உணர்வை காட்டுவதாக தான் இருக்கிறது. எழுச்சிக்கு முந்தைய நாள் வ உ சி ஆற்றிய உரையும் மிக முக்கியமானதாக கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் இந்திய டீம் நேவிகேஷன் என்ற நிறுவனம் கப்பல் போக்குவரத்தில் ஜாம்பவானாக விளங்கியது. இதனை எதிர்த்து சுதேசிய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்தை வ உ சி தொடங்குகிறார். பலராலும் இது முடியாத காரியம் என்று கைவிடப்பட்டதை தனது அசாத்திய திறமையால் வ உ சி தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார்.
காந்தியின் சுதந்திரப் போராட்டத்தின் வருகைக்கு முன்பாகவே தமிழகத்திலும் கல்கத்தாவிலும் மக்களிடையே சுதந்திர எண்ணம் கணன்று கொண்டு இருந்திருக்கிறது அது வெளிப்படும் ஒரு விதமாகவே எழுச்சி அமைந்துவிட்டது.
எழுச்சியை பற்றி தெரிந்து கொள்வதற்கு நமக்கு இருக்கக்கூடிய ஆவணம் அன்றைய சுதேசமித்திரன் நாளிதழும் அரசு ஆவணங்களும் தான். இதில் அரசு ஆவணங்களை நாம் கருத்தில் கொள்ள முடியாது ஏனென்றால் அன்றைய அரசு ஐரோப்பிய ஆதரவு அரசு. ஆகவே அவை ஐரோப்பியர்களுக்கு ஆதரவாக செய்திகளை கொண்டிருக்கும். இருந்த போதிலும் இந்து சுதேசமித்திரன் அரசு அறிக்கை என்று பலவற்றை ஆராய்ந்து இந்த எழுச்சியின் போக்கை ஒருவாறு தொகுத்து அளித்திருக்கிறார் ஆசிரியர். இருந்தாலும் வரிக்கு வரி ஆதாரங்களை குறிப்பிட்டு செல்வது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை ஆதாரங்களை பின் ஒட்டாக அல்லது இறுதியில் சேர்த்திருக்கலாம்.
எழுச்சியில் பங்கு கொண்டு தண்டனை பெற்றவர்கள் பெரும்பாலும் தொழு நோய் வந்து அவதிப்பட்டு இருக்கிறார்கள். ஆக அன்றைய சிறை என்பது எவ்வளவு மோசமானதாகவும் சுகாதாரமற்றதாகவும் இருந்திருக்கிறது என்பதை நமக்கு காட்டுகிறது. இந்த எழுச்சியில் உயிரிழந்தவர்களின் புகைப்படம் கூட இன்று நம்மிடம் இல்லை . எழுச்சியின் போராட்டக்காரர்கள் அடுத்த தலைமுறையிலேயே மறைக்கப்பட்டு விட்டார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு மகத்தான எழுச்சி அல்லது அரசு குறிப்பிடுவது போல ஒரு கலகம் இது என்று அறிய முடிகிறது. அன்றைய ஐரோப்பியர்களுக்கு ஐரோப்பிய அரசுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய வ உ சி அவரின் நினைவை நாம் போற்ற தவறி விட்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. எழுச்சிக்குப் பிறகும் அரசின் ஒடுக்கு முறையாளும் நலிவுற்று போன சுதேசிய கப்பல் கம்பெனியும் பிற்காலத்தில் முறையாக இயங்க முடியாமல் ஆனதால் மக்கள் சிறிது சிறிதாக வ.உ சியை மறக்க தொடங்கினர் என்பது வேதனையான ஒன்று. வ உ சி யின் முழுமையான வாழ்க்கை வரலாறு இருக்கிறதா என்று தெரியவில்லை. நான் வா உ சி யின் வரலாறு என்றேதான் இந்த நூலை வாசிக்க தொடங்கினேன். ஆனால் இது எழுச்சியை பற்றியதாக இருக்கிறது.
காலாபாணி , ( வேங்கை வயல் பெரிய உடையன தேவர் ) திருநெல்வேலி எழுச்சியும் வ உ சி யும் 1908 (வ உ சி ) போன்ற நூல்களுக்கு கிடைக்கும் விருது நமது முன்னவர்களை நாம் நினைவு கூறவும் அவர்களது வரலாற்றை போற்றவும் வெளி உலகுக்கு ஒரு திறப்பாக அமைவது மகிழ்ச்சியே .