உலக கலைப் பாரம்பரியத்தின் சிறப்பு பரிமாணம் பெற்றவை சோழர் காலச் செப்புச்சிலைகள். பன்னாட்டளவில் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் எல்லாவற்றிலும் இவை ஓரிரண்டாவது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்நூல் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இருந்த செப்புப் படிமங்களை குவிமையமாக வைத்துப் பேசுவதுடன், மற்ற இடங்களிலுள்ள கலையழகு மிக்க செப்புப் படைப்புகளையும் கவனிக்கின்றது. இந்த திருமேனிகளை உருவாக்கும் முறை, ஆலய மரபொழுக்கத்தில் அவற்றின் இடம், உருவநியதிகள் போன்றவற்றைப் பற்றியும் இந்நூல் விவரிக்கின்றது. சோழ மன்னர்கள் வென்ற போர்கள், எழுப்பிய ஆலயங்கள், கொடுத்த நல்கைகள் ஆகியவற்றின் பின்புலத்தில் செப்புப் படிமங்களின் தோற்றம் பற்றி இந