இளையபல்லவன் இருமுறை தளத்தில் உலாவி விட்டு அந்த இருவர் எதிரிலும் நின்றான். “அன்று தீர்மானித்தேன். கலிங்கத்தின் கடற்படைப் பலத்தை என்னால் முடிந்த வரையில் முறிப்பதென்று. முறிப்பது மட்டுமல்ல, ராஜராஜ சோழர் காலத்திலும், ராஜேந்திர சோழ தேவர் காலத்திலுமிருந்த தமிழர்களின் கடலாதிக் கத்தை மீண்டும் நிலை நிறுத்துவதென்றும் அன்றே பிரதிக்ஞை செய்தேன். அந்தப் பிரதிக்ஞையை நிறைவேற்றவே இந்த அக்ஷயமுனை வந்தேன். இங்கு நமது கப்பலை நல்ல பலமுள்ளதாகச் செய்து பழுதும் பார்ப்போம். புதுப் புது விதப் போர்க்கலங்களை இதில் பொருத்து வோம்! பிறகு கடலோடுவோம்! கடலோடி, கலிங்கக் கப்பல்களை மறிப்பதற்கும், பிடிப்பதற்கும், அழிப்பதற்கும் கடலில் முகத்தை நீட்டிக் கொண்டிருக்கும் இந்த அக
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.
The great chola general karunakara pallavan learns about sea warfare from the great pirate chief Aguda (Aguda is a historical figure who later established the jin dynasty). He lands in acheen point(or Akshaya munai) reckoning that it is the best place from where he can obliterate the sea dominance of kalinga which recently began its genocide against tamil people and trade ships due to it's cruel king who dislikes chola empire. There he finds himself surrounded by terrible conspiracies involving mysteries that can put big kingdoms in danger. Karunakaran must act with great care, for his actions can decide the fate of three big empires of chola, kalinga and srivijaya. This is a story about how karunakaran navigates these hostile situations torn between his attraction for manjal azhagi (daughter of cold and calculating duke of akshaya munai) and his love for kanchana (appeared in the first part. Now separated)He is given new responsibilities to protect the island from great warriors of pathak and sulu and the calculating selfish duke of akshaya munai and his new alcohol addiction.
"எதுவும் வேண்டாம் தேவி. நான் எங்கும் இருந்தாலும் புறாவின் நினைப்பு எனக்கிருக்கும். இங்கு வந்ததும் வீட்டுப்புறா ஒன்றைக் கண்டேன். பிறகு காட்டுப்புறா ஒன்று கைக்கு வந்தது. இனி கடற்புறவொன்றும் கப்பலில் பறக்கும்!" என்றான் இளையப்பல்லவன், ஆபத்தான நினைப்புகளை அவள் இதயத்திலிருந்து அகற்ற. அவள் தனது கண்களை அகல விரித்தாள். "கடல் புறாவா!" என்றும் ஆச்சர்யம் குரலில் ததும்ப வினவினாள்.
இதற்கு பிறகு புகாரை அடைந்து இளையபல்லவரின் கதை தொடரும் என்று நினைத்திருந்தேன். ஆனால் கடல் புறா கடலைக் கிழித்துக் கொண்டு நின்றது அக்ஷய முனையில். இங்கிருந்தே தொடங்குகிறது கடல்புறாவின் இரண்டாவது பாகம்.
கொம்புகள் முழங்க அக்ஷய முனையை அடைந்தது கடல்புறா. அந்த கலனில் இருந்த அமீரில் தொடங்கி, கண்டிய தேவன், சேந்தன் என்று எல்லோரும் சற்றுக் கலங்கித்தான் போயிருந்தனர். எதற்கும் கலக்கமின்றி வழமை போல தன் திட்டங்களை மட்டும் தெரிவித்து விட்டு, அந்த மாபெரும் அக்ஷய முனைக் கோட்டையை தீர்க்கமாக சிந்தனையைத் தெறிக்க விட்டன இளையப்பல்லவரின் கண்கள்.
ஒரு வருடம் முழுதும் கடலில் பயணம் மேற்கொண்டு மிகப்பெரிய சீனக்கடற் வேந்தன் அகூதாவின் உபதலைவனாக தன்னை உருவகித்துக் கொண்டு அடுத்த திட்டத்துடன் அக்ஷய முனையை அடைந்த இளையபல்லவரை நாமனைவரும் கடைசி முறை பார்ப்பதாக இருந்து விடும் என்று எண்ணி அமீரும் சரி, மற்றவர்களும் சரி, சிந்தை வயப்பட்டிருந்த நொடிகள் அவை.
அதற்கான கரணம் அவர்கள் வந்திருக்கும் இடத்தைப் பற்றியதான உண்மைகளும், கடல் கொள்ளையர்களின் மாபெரும் கூடாரம் இருக்கும் அக்ஷய முனையின் கொடூரமான கோட்டைத்தலைவனும், அங்கே சுற்றி இருந்த மக்களும் அவர்களின் அரக்கத்தனமான வாழ்க்கை முறையும்தான். இப்படி இந்தக் கரையை அடைய அடைய, கப்பலில் உள் இருந்தோர் நினைத்து திகைக்க, கொம்புகள் ஊதப்பட்ட தருணத்தில் அந்த அக்ஷ்ய முனைக் கோட்டைக்குள்ளும் மிகப் பெரிய பய ரேகைகள் அப்பட்டமாக ஒட்டிக் கொண்டன.
மனிதர்களும், மனிதர்களுடைய உணர்வுகளும், பயங்களும், மோகங்களும்தானே அரசுகள் வீழவும், வெகுண்டெழவும் வழி வகுத்தன. இப்போது மட்டுமென்ன அதற்கு விலக்கு. கொம்பின் ஓசைக் கேட்டவுடன், அந்த அக்ஷய முனைக்கோட்டையின் தலைவன் என்று அறியப்பட்ட பலவர்மன், அச்சத்தின் முதல் அடி சூழ வந்து, இளையபல்லவர் ஒருவராக வருவதைப் பார்ப்பதில் புத்தகம் துவங்குகிறது.
இந்த பகுதி முழுவதும், பலவர்மனும், அவரது மகளான மஞ்சளழகியும் இந்த அக்ஷய முனைக் கோட்டையும், கொள்ளைக்காரர்களும், அந்த பகுதிப் பிராந்தியத்தை உரிமைக் கோரும் நான் வகை மக்களைப் பற்றியும், புகாருக்கு செல்லாத இளையப்பல்லவரின் மீதித்திட்டம் என்ன என்பதையும் சாண்டில்யன் அவர்கள் நம் கைக் கோர்த்து அந்த கடற்கரை மணலில் நடத்திக் கூட்டிச் சென்று சொல்லியிருப்பார். சரித்திர நாவல்களில் வரும் உரையாடல்கள் சில முறை தர்க்கங்களை விதைத்து செல்லும். உதாரணத்திற்கு, மாபெரும் அழகி என்று வர்ணிக்கப்பட்ட ஒருவள், மாபெரும் வீரனிடம் பேசிய வரிகளைப் பாருங்கள்.
"நீங்கள் மாவீரர் என்றேன் - அடக்கத்தைக் காட்டினீர்கள். உங்களுக்கு அடக்கமிருக்கிறதென்றேன். வெட்கத்தை காட்டினீர்கள். வெட்கமிருக்கிறதென்றேன் - என்னைக் குத்திக் காட்டி விஷமமும் உண்டு என்பதை நிரூபித்தீர்கள். அடக்கம், வெக்கம், விஷமம் ஆகிய குணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்றாள் அவள் உள்ளதைத் திறந்து காட்டி.
"ஏன்?" அவளுக்குப் பதில் சொல்லத் தெரியாததால் ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காக அந்த ஒற்றை சொல்லை உதித்தான் இளையப்பல்லவன்".
இப்படியான குறும்பும், வீரமும், குரோதமும் கொப்பளிக்க இனி அந்த இரவும், வரப்போகின்ற நாட்களும் இருப்பதற்கான அனைத்தையும் சாண்டில்யன் மெல்ல மெல்ல தன சொற்களின் வழிக் கட்டமர்த்தி நகர்கிறார். பலவர்மன் ஏன் இளையப்பல்லவனை ஏதும் செய்யாமல் இருக்க வேண்டும், ஏன் அன்றைய இரவான சித்திரைப் பவுர்ணமி கொண்டாட்டங்கள் சிறப்பு பெறுகின்றன என்பதுவும் இரசிக்கத் தகுந்த எழுத்து நடை.
"பழைய வாஜாங்கில் நிழலாட்டம்தான் காட்டுவார்கள். பரதநாட்டியம் கலந்த பிறகு நடனக்கலைஞர்கள் நேரிடையாக ஆடுகிறார்கள். வாஜாங்கில் இரு வகை உண்டு. வாஜாங் பூரணா என்பது புராணக் கதைகளை ஆடுவது. வாஜாங் கோதக் என்பது வேறு வகை காதற்கதைகளை ஆடுவது. இரண்டும் மகோன்னதமாயிருக்கும் இளையப்பல்லவரே. வாஜாங் நிகரற்ற நாட்டிய முறை. அதன் பின்னிசை பிரம்மிக்கத்தக்கது. வெளிச் சூழ்நிலையில் ஆடப்படும் இந்த நடனத்தைப் பார்த்த பின்பு நீங்களே புரிந்து கொள்வீர்கள்" என்று மஞ்சளழகியின் கண்கள் கனவுலகில் சஞ்சரிக்கத் தொடங்கின.
இப்படியெல்லாம் வர்ணிக்கப்பட்ட நடனங்கள் நடைபெறும் அன்றைய இரவின் கொண்டாட்டங்கள், கொடூரங்கள் நிறைந்ததாகவும், அந்த அக்ஷய முனையின் விதியையும் வேறு விதமாக தீர்மானம் செய்யும் முறையிலேயே அனைத்து நிகழ்ச்சிகளும் நம் கண் முன்னர் விரிகின்றன.
"அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த மஞ்சளழகியின் முகத்திலும், பலவர்மன் முகத்திலும் பெரும் திகில் விரிந்தது. அவன் அன்றிரவு நிகழ்ச்சிக்கு வந்தால் அவன் மரணம் நிச்சயம் (இளையப்பல்லவர்). அவன் மாண்டால் அகூதாவால் கோட்டையின் அழிவு நிச்சயம். இந்த இரண்டு நிச்சயங்களையும் எண்ணி எண்ணித் திகிலுக்கு உள்ளானார்கள் அவ்விருவரும்".
எவ்வளவு இன்பம் கொட்டி கிடந்த போதிலும் அது துன்பத்தில் தான் முடியும் என்பதில் அந்த கொண்டாட்ட இரவுக்கு இம்மி அளவு கூட பேதம் இருப்பதாக அறிந்து கொள்ள இயலவில்லை. சொல்லி வைத்து அந்த கொண்டாட்டங்களில் பல வருடங்களாக நடக்கும் கொலைகளுக்கான களம் தயாரானது. அப்போது தான் வில்வலன் இளைய பல்லவரை வீழ்த்த ஆயத்தமான நேரம். வில்வலன் அன்றைய இரவு கொண்டாட்ட காலத்தில், அக்ஷ்ய முனையின் முக்கியமான நால்வரில் ஒருவன். மனிதர்களை உண்ணும் பதக் இனத்தவர்கள், சூளுக் இனத்தவர்கள் என்று அந்த அக்ஷய முனையின் முக்கிய முடிவுகள் எடுப்பவர்களில் பிரதானமானவன்.
அன்றிரவு நடந்து விடக்கூடாது என்று எதைத் தடுக்க இளையப்பல்லவன் முற்பட்டானோ அது கண்டிப்பாக நிகழ்வதற்கான வாய்ப்பை வில்வலன் பல முறைகளின் வழி நடக்க செய்து கொண்டிருந்தான். ஆயினும் அதற்கு பிறகு மிகத் தெளிவான வாள் ஏந்தல்களும், சொல் ஏந்தல்களும் சேர்ந்து என்று இரவு மிகப் பெரிய சேதாரம் தவிர்க்கப்பட்டன. இருந்தும் ஒரு கொலை நிகழ்ந்துதான் கடந்தது அந்த இரவு. பலவர்மனின் சூழ்ச்சியும் பின்னர் வரும் சதிகளும், மிகப்பெரிய உண்மைகளை உடைக்கின்றன. அற்ப விநாடி என்று ஒதுகூடாவற்றை சாண்டில்யன் இவ்வாறு விளக்குகிறார்.
"வாழ்வில் விநாடி என்பது அற்பக் காலம். ஆனால் அந்த அற்பக்காலம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதும் உண்டு. மாற்றங்கள் எண்ணங்களில் ஏற்படலாம். சரீரத்தில் ஏற்படலாம். உயிரைப் பற்றிக் கூட ஏற்படலாம். ஆகையால் விநாடி தானே என்று காலத்தை ஒதுக்குவதற்கில்லை. விநாடியாயிருந்தாலும் அது காலம் தான். அதன் வேகம் இணையற்றது என்பதை உணருவதுதான் விவேகம்".
இந்த வரிகளில் தான் எத்தனை ஆழம் பொதிந்துள்ளன. வெகு சமீபத்தில் வாழ்வில் நிகழ்ந்தவை அப்படியே பிரதிபலித்திருப்பதை என்னவென்று கடந்து செல்வது? இப்படிப் பலப்பல எண்ணக் குவியல்களை, கடத்தி சென்று எப்படி இளையப்பல்லவர் அக்ஷ்ய முனையின் மிகப்பெரிய சதுரங்க வேட்டையை முறியடிக்கிறார் என்பதே மீதிக்கதை.
"வருந்தாதே மஞ்சளழகி. கடமையை நோக்கிப் போகிறேன். சீக்கிரம் வந்துவிடுகிறேன்". என்று தளத்தில் நின்ற இளையப்பல்லவன் முணுமுணுத்தான். வேகமாக அடித்த காற்று அந்த சொற்களை மஞ்சளழகிக்கு கொண்டு சென்றதோ என்னவோ தெரியாது. பாய்மரத்தை மட்டும் நன்றாக உந்தி, கடல்புறாவின் வேகத்தை அதிகப்படுத்தியது. காதலரைப் பிரிப்பதில் காற்றுக்குத்தான் எத்தனை ஆனந்தம்".
இனி பாகம் மூன்றை வாங்க வேண்டும். முடிந்தால் மூன்று பாகங்களையும் படித்துப் பாருங்கள்...
சோழர்களின் தூது போக்குக்கு ஒத்துழைக்காத கலிங்கர்கள் தமிழர்களை கொடுமை படுத்தியது போக தூது வந்தவர்களை சிறை படுத்தியதும்,அவர்களை தண்டணை மேடைக்குக் கொண்டு சென்று கதை முடிக்க முயல்வது என தான் போக்குக்கு செயல்பட, அவர்களை அழிக்கும் முதல் படியாக அவர்களிடமிருந்து தப்பிய சோழ படைத்தளபதி இளையபல்லவன் கலிங்கர்களின் கடற்படைக்கு ஓர் அரணாக அமைந்திருக்கும் அக்ஷயமுனை என்னும் தீவில் முகாமிட்டு பின் அதைக் கைப்பற்றுவதே இப்பாகம்.
இதனூடே, இந்த கடற்கரையில் கட்டப்படும் கடல்புறாவும், ஏற்கனவே காஞ்சனையை சுமந்து கொண்டிருக்கும் இதயத்தை துளைத்து நுழையும் தீவின் தலைவனது மகளும், பகைவர்களின் சூழ்ச்சியும் என இத்தனையும் மீறி தன் எந்த ஓர் நகர்விளும் தன்னைச் சுற்றி உள்ள அத்துணை காரணிகளையும் ஆராய்ந்து மதியால் இளையபல்லவன் தீட்டும் திட்டங்களும், எதிரியின் தோல்விகளும் என விறுவிறுப்பின் உச்சத்தில் நகர்கிறது.
Sandilyan has this habit of making the book interesting in its last league. Slow, boring and dizzy. But the last 100 pages will do justice to the hype.
once again, one of the best stories, written in a gripping way, each chapter and the story literally flies keeping you engaged so much that you can not stop.
நேற்றைய முடிவில் 2 அத்தியாயம் மீதம் இருக்க இன்று காலை 3 மணிக்குள் எழுந்து படித்து முடித்தேன். பாகம் 1 உடன் ஒப்பிடுகையில் பாகம் 2 கொஞ்சம் சுமார் தான். சினிமாதனமாக இருந்தது இந்த பாகம் ஆனாலும் சலிப்பை அதிகமாக கூட்டவில்லை. இரண்டாவது கதாநாயகியின் பெயரை மஞ்சள் அழகி என்று வைத்தது சிரிப்பாக இருந்தது. ஆசிரியர் சாண்டில்யன் என்ஜினீயரிங் படித்திருந்தால் எங்களை விட அதிகமாகவே பக்கங்கள் நிரம்ப கதை எழுதி இருப்பார் என்பது நிதர்சனமான உண்மை.
Another master stroke by Sandilyan. This books can be even read as a separate book, doesn't need to be a sequel. That much of isolation lies between the first one and this one with new set of characters, geography etc.
There are many things explained in very detailed manner. But I disappointed as there is very less explanation on the technical terms on the ship building during that times. And also last few episodes are going very fast. It could have been explained in a detailed manner as first half to connect all dots.
Overall, historical fictions are always marvelous if they comes from a very good narrator.
Nice portrayal of characters, however one irritating thing about Sandilyan novels is that in the middle some interesting sequence of events the story digresses into something unrelated and goes into a sort of mega-serial mode dragging some unrelated conversations and narrations. However on the whole, the novel becomes fast paced and interesting, plots unfolding and mysteries unravelling which makes it a class apart. The details about the Tamil, esp Cholas, ship building skills and technology is quite amazing and without that skill and understanding of the trade winds, it would have been impossible to have conquer the south-east asian countries by Raja Raja Cholan and Rajendra Cholan
Part 2 is equally entertaining and captivating as the first one and a continuation of the story of part 1. Karunakara Pallavan escapes from Kalinga and becomes a sea dacoit. How Karunakara Pallavan wins Akshaya munai, an island which is at a strategic location with access to key route between India and Srivijayam kingdom forms the story.
When we expect the story to start right where it ended in first part (either at paloor or in the mid sea), the readers are given a pleasant surprise - the story starts in the "Akshaya munai" fort of Kadaram kingdom, where Karunakara pallavan (now, a trained sea warrior) lands and meets Balavarman, the chief of the fort. Balavarman is the supreme commander of the fort and there is no one in the kingdom who can oppose him, including the emperor. Karunakara needs to gain control over this fort to break the supremacy of the ocean enjoyed by "Kalinga" kingdoms. But it is not an easy task, as he needs to win over the wicked Balavarman, who is supported by the tribals Sulus & Pathuks. He also needs to save Balavarman's daughter Manjal azhagi (who falls in love with Karunakara) from the evil plot set against her !
Unlike the first part, this part takes lot of time to settle into the core plot. Lot of time needs to be spent in reading repetitive descriptions about the incidents that have occurred just moments ago. Too many page filling contents could have been easily done away with ! It really tests the reader's patience a lot.
But towards the second half of the book, the plot gets serious and the author starts to build lots of mystery elements to keep the readers curious and glued to the plot. As expected, the ending is fabulous with unexpected revelations. Like the first part, this one too ends by leaving the readers in a highly emotional state. Can't wait to start the finale part of this trilogy !!
It has good story. But lot of details on this book are repetitive, may be that's because it could have been written as series in a weekly magazine. But such redundancy is not valid Or required anymore and considering it is still in demand among Tamil historical novel enthusiasts, the publications can cut short the novel and make it more interesting.
This is almost fifty percent romance and fifty percent adventure drama. If you are not a fan of romance literature, you may find hindrances reading this. This is one of the main differences when you compare it with ponniyin Selvan.
Establishing the environment of the characters and their inner thoughts are little overkill at many places. It is also the strength for novels.
Not sure if Karunakara pallavan really had a hand in helping Cholas in establishing their Almost-vassals in South East Asia but Cholas did eventually do it around that time. Also the Aguda lived in different age altogether. With all these shortcomings, the novel still managed to be good.
Heroics were explained with less heroic flair which is actually good and I liked it. Although the final act was one dimensional And little incomplete.
சாண்டில்யனின் கடல் புறா – பகுதி 2 சாகசத்தையும் உணர்ச்சியையும் அழகாக இணைக்கிறது! கதையின் வேகம் அதிகரித்து, கடலின் ஆழத்திலிருந்து பேரரசுகளின் இதயத்துக்குள் நம்மை இழுக்கிறது. வரலாற்று உணர்வும், வீரத்தும், காதலும் கலந்த ஒரு மாபெரும் அனுபவம் இது. இரண்டாம் பகுதி முழுவதும் சுவாரஸ்யம் நிரம்பி, இறுதி பகுதியை எதிர்பார்க்கும் ஆவலை இன்னும் உயர்த்துகிறது!
Sandilyan’s Kadal Pura – Part 2 takes the adventure to a whole new level! The story dives deeper into history, passion, and intrigue, moving with the power and grace of the sea itself. Every chapter brims with tension, courage, and wonder. A thrilling continuation that perfectly builds toward the grand finale — can’t wait to see how this magnificent vo
The actual story could've made not more than 200-250 pages, but what made those 507 pages were unnecessary elaboration on people's emotions. Describing emotions are ok in fiction, but these are over explanatory, add to that beginning of every chapter has detailed emotional explanations about the end of the previous chapter. Although the end has everything explained well especially on all the mysteries, too much elaboration had caused more impatience to complete than anxious reading.
The novel is not good as its first part, but its not a bad one. The love sequence in the middle makes the story lagging but ended with a climax which is not disappointing. Few twists in the story can be easily guessed by the readers before it reveals.
இந்தக் கடல் புறா தமிழகத்தின் கடற் காவியத்துக்குப் பெரும் பொன்னேடு சேர்க்கும்”
முதல் பாகம் போல் இந்த பாகத்தின் கதைக்களமும் தமிழ்நாட்டில் நடக்கவில்லை. கடல் கடந்து அக்ஷயமுனை என்று அழைக்கப்பட்ட துறைமுகத்திலும் கோட்டையிலும் நடைபெறுகிறது.
முதல் பாகத்தில் காணப்பட்ட முக்கிய கதாபாத்திரங்களில், கதையின் முடிவில் பழையூர்ப் பெருந்துறையில் சிக்கிக்கொண்ட சேந்தன், கண்டியத்தேவன், அமீர் மற்றும் நம்முடைய கருணாகர பல்லவன் ஆகியோரைச் சுற்றியே கதை நகர்கிறது. மீதி எவரையும் அவ்வளவாகக் காணோம் நன்றாக ஓடும் ஆற்றில் சிறு தடுப்பணைகள் போலே, இளையபல்லவன் மஞ்சளழகியின் கண்டவுடன் காதல் காட்சிகளும், பேச்சுகளும் அமைந்தன. இன்பமான காவியக் காதல் உணர்வை அது தரவில்லை. மோகம், காமம் இவ்விரண்டை மட்டுமே அளித்த உணர்வு.
ஒவ்வொரு அத்தியாயத்தை முடிக்கயிலும், அடுத்த அத்தியாயத்தைத் தொட்டே ஆகா வேண்டும் என்ற நிலையில் ஆசிரியர் எழுதியிருப்பது
இளையபல்லவன் எழுந்து நடனமண்டபத்தின் மீது மின்னல் வேகத்தில் ஏறி நின்று நடனத்தைச் சற்று நிறுத்தினான். கூட்டத்தின் கூச்சலையும் கையமர்த்தி அடக்கினான். அத்துடன் அத்தனை கூட்டத்துக்கும் கேட்கும் வகையில் இரைந்து பேசவும் தொடங்கினான்: “நான் தமிழ் நாட்டவன். நடனத்தில் சிறந்த அந்தப் பெருநாட்டிலிருந்து வந்திருக்கிறேன். இருப்பினும் இத்தகைய அற்புத நடனத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. நடனத்தின் சிறப்பு மட்டுமல்ல நான் இன்று கண்டது. நடனமாடிய இந்த மஞ்சளழகியின் கலைச் சிறப்பையும் கண்டேன்” என்று கூறினான்.
இந்த அலை வந்து காலைத் தடவுகிறது மீண்டும் போய் விடுகிறது. மறுபடியும் வருகிறது, போகிறது. அற்பகால ஸ்பரிசம் இது. விட்டு விட்டு விலகும் நிலை. என் வாழ்க்கையில் நீங்களும் இப்படித்தான் மோதியிருக்கிறீர்கள். அலை போலப் போய்விடுவீர்களா? போய்ப் போய் வருவீர்களா? போகாமல் பகிட் பாரிஸான் மலைபோல் நிலைத்து நிற்பீர்களா? எனக்குத் தெரியவில்லை. அது உங்களுக்கும் தெரியாது. விதிதான் அதை நிர்ணயிக்கும். காலம்தான் முடிவு சொல்லும். ஆனால் என் மதி மட்டும் ஒரு கதை சொல்கிறது,”
“ஆம். புறாவின் முகம் முகப்பாக இருக்கட்டும். பக்கப் பகுதியை புறாவின் சிறகுகளைப் போல் அமையுங்கள். இந்த மரக்கலம் இனி கடலில் பறந்து செல்லும் பெரும் புறா. இந்தக் கடல் புறா சோழநாட்டு வரலாற்றைக் கடற் பகுதியில் விரிவுபடுத்தும். இதன் புகழைத் தமிழகக் கவிகள் பாடுவார்கள். கடல்புறா இன்றியமையாத கடற் போர்க்கலமாக கடற் காவியமாக மாறும்,” என்று கூறிய இளைய பல்லவன்,
“நல்ல பழக்கங்களைச் சீக்கிரம் விட்டுவிடலாம். கெட்ட பழக்கங்களை ஒழிக்கக் காலம் தேவை!”
பரபரப்புடனும் கேள்விகளுடனும் முற்று பெற்ற கடல்புறாவின் முதல் பாகம் சாண்டில்யனின் தமிழுக்கும், கதை புனையும் ஆற்றலுக்கும், ஆராய்ச்சிக்கும் நல்லதொரு எடுத்துக்காட்டென்றால், இந்த இரண்டாம் பாகம் அதைத் தாண்டி ஓங்கி நின்று வாசகர் உள்ளத்தை ஆட்கொண்டுவிடும் என்பதில் ஐயமேதும் இல்லை. என் விமர்சனத்தைப் புள்ளிகளாக்கிப் பதிவிடுகிறேன்:
1. முதல் பாகம் போல் இந்த பாகத்தின் கதைக்களமும் தமிழ்நாட்டில் நடக்கவில்லை. கடல் கடந்து இன்றைய சுமத்திரா தீவில், அன்றைய நாளில் அக்ஷயமுனை என்று அழைக்கப்பட்ட துறைமுகத்திலும் கோட்டையிலும் நடைபெறுகிறது.
2. முதல் பாகத்தில் காணப்பட்ட முக்கிய கதாபாத்திரங்களில், கதையின் முடிவில் பழையூர்ப் பெருந்துறையில் சிக்கிக்கொண்ட சேந்தன், கண்டியத்தேவன், அமீர் மற்றும் நம்முடைய கருணாகர பல்லவன் ஆகியோரைச் சுற்றியே கதை நகர்கிறது. மீதி எவரையும் அவ்வளவாகக் காணோம்.
3. புதிதாக சேர்க்கப்பட்ட பாத்திரங்களான பலவர்மனும் மஞ்சளழகியும் இக்கதையின் போக்கிற்கு மிக முக்கியப் பங்காற்றியுள்ளனர்.
4. ஒவ்வொரு அத்தியாயத்தை முடிக்கயிலும், அடுத்த அத்தியாயத்தைத் தொட்டே ஆகா வேண்டும் என்ற நிலையில் ஆசிரியர் எழுதியிருப்பது, படிப்பது வரலாற்று புதினமா அல்லது ஏதும் மர்மம் நிறைந்த திகில் கதையா என்று யோசிக்கத் தூண்டுகிறது.
5. நன்றாக ஓடும் ஆற்றில் சிறு தடுப்பணைகள் போலே, இளையபல்லவன் - மஞ்சளழகியின் கண்டவுடன் காதல் காட்சிகளும், பேச்சுகளும் அமைந்தன. இன்பமான காவியக் காதல் உணர்வை அது தரவில்லை. மோகம், காமம் இவ்விரண்டை மட்டுமே அளித்த உணர்வு.
6. கடைசி இரு நூறு பக்கங்களில், சாண்டில்யன், கதையின் போக்கில் தேவையற்ற எல்லாவற்றையும் உதறிவிட்டு, மர்மத்தை மட்டும் கையில் கொண்டு, பக்கத்துக்கு பக்கம் பரபரப்புடன் நகர்த்தியிருக்கிறார்.
7. உடைபட்ட மர்மங்களும், வெளியான ரகசியங்களும் அடுத்த பாகத்தில் என்னென்ன நடக்கப் போகிறதோ என்று நம்மை யோசிக்கத் தூண்டும். கதையின் நாயகன் இளையபல்லவனின் அறிவையும் ஆற்றலையும், வித்தியாசமாக தந்திரமாக சூழல்களைக் கையாள்வதையும் கண்டு ரசிக்காமல் இருக்க முடியலை. அதே போல் பலவர்மனுடைய சுயநலம், வன்மம் எல்லாம், சரியான வில்லனைக் காணும் எண்ணத்தை ஏற்படுத்தின.
Extremely explanatory especially over romance The story is about the chronicle of chieftain karunagara pallavan The fictional story takes few facts and real events of chola dynasty during Monarch Vira Rajendra and Kulothunga I