நவீன தமிழ்ப் புனைகதைகளில் கவனம் பெறாமல் போய்க் கைக்குத் திரும்பிய பொக்கிஷம் ப. சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’. முதல் நாவலாக எழுதப்பட்டும் இரண்டாம் நாவலாகக் கருதப்பட்ட அவலமும் இதற்கு நேர்ந்திருக்கிறது. கைப் பிரதியாக நீண்டகாலம் கிடப்பில் இருந்த இந்நாவல் 1959ஆம் ஆண்டு ‘கலைமகள்’ நாவல் போட்டியில் பரிசு பெற்றதோடு இலக்கிய உலகின் பார்வைக்கு வந்தது. எனினும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடங்கியது. புதிய வாசிப்பு ஆர்வத்தின் விளைவாக பரவலான கவனிப்புக்கும் ஏற்புக்கும் இன்று இலக்காகியிருக்கிறது. காலம் கனிந்து திருப்பியளித்த கொடை இந்தச் செம்படைப்பு. கடல் கடந்த களத்தில் நிகழ்ந்த வாழ்வை வலுவுடனும் தெளிவுடனும் சித்தரிக்கும் ‘கடலுக்கு அப்பால்’ நாவல