What do you think?

காலச்சக்கரம்
"காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
- GenresAudiobook
6 pages, Audiobook
Published October 1, 2021
About the author
காலச்சக்கரம் நரசிம்மா
16 books41 followersடி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.
சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.
குமுதத்தில் மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதியிருக்கிறார்.
தற்போது கல்கியில் கூடலழகி என்கிற சரிந்திர தொடரை எழுதிவருகிறார்.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 17 of 17 reviews
July 27, 2017
வெகு நாட்களாக இந்த புத்தகத்தை படித்து விட வேண்டும் என்று நினைத்து இருந்தேன். சமீபத்திய புத்தக திருவிழாவில் இந்த புத்தகத்தை ஒரு வழியாக வாங்கி மறுநாளே வாசிக்கவும் தொடங்கி விட்டேன்.
ஒரு பிளாக் மாஜிக் கதை. தொடக்க அத்தியாயங்கள் டில்லி, சென்னை, காஷ்மீர், கும்பகோணம் என்று பல இடங்களில் பலதரப்பட்ட மனிதர்களை மையமாக வைத்து நடக்கிறது. சற்றே குழப்பமாக இருந்தாலும் ஒரு சில அத்தியாயங்களை கடந்து அனைத்தும் ஒரு இடத்தில இணைய தொடங்குகிறது. ஒரு கமர்ஷியல் சினிமாவை போல் வேக வேகமாக பக்கங்கள் நகர்கின்றன.
ஸ்ரீ சக்கரத்தை மய்யமாக வைத்து பல தலைமுறைகள், சில மனிதர்கள், சில குழப்பங்கள், சில சஸ்பென்ஸ்கள் என்று சுவாரசியமாகவே இருக்கிறது. எனினும் ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களில் கூறப்படும் ஒரு சில ப்ளாஷ்பாக்குகள், அதில் வரும் மனிதர்கள் பெயர்கள் பெரும் குழப்பமாக இருக்கின்றன.
இந்த ஆசிரியரின் சங்கதாராவை போல் இந்த புத்தகமும் நடக்காத ஒரு விஷயத்தை நடந்திருக்கலாம் என்று கற்பனை செய்து எழுதப்பட்டிருக்கும் ஒரு நாவல். புத்தகம் படித்து முடித்தவுடன் கண்டிப்பாக இது உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறிவிடும் அளவுக்கு புருடாக்கள் அதிகம். :-)
ஆனால் படிக்க படிக்க சுவாரசியமாக இருப்பதை மறுக்க முடியாது. :-)

July 10, 2020
விறுவிறுப்பான நடை . விடை அறியப்பட்ட கேள்விகள் .தெரியா விவரம் விவரிக்கும் வேகமான பக்கங்கள் . இழுத்தடிக்காத பகுதிகள் என ஒரு இலக்கிய வாசிப்பிலிருந்து விடுபட நினைக்கும் வாசகனுக்கான complete பாக்கேஜ் என்றே இந்த நாவலை சொல்லலாம் . எடுத்த நாளிலே முடிக்கமளவு எளிய புத்தகமாக அதே சமயம் படிக்க ஆர்வமுட்டும் புத்தகமாக இருக்கும் இந்த காலச்சக்கரம் , ஜெட்டின் சக்கரம்ப் போல் வேகமாக ஓடி படிப்பவர் மனதை வெல்கிறது .
February 19, 2018
Good Story gripping till the end.
Want to Read
September 25, 2021I want buy this book,i from Singapore difficult get here
February 20, 2022
I am yet to read but I know that it was a classic
June 7, 2022
Fantasy
January 26, 2023
Fast pacing and entertaining
June 13, 2023
Must read book
What a story line! Amazing and engrossing book. Hats off to Mr. Narasimhan. This is another feather(book) on his cap. Believe it is his first feather.
What a story line! Amazing and engrossing book. Hats off to Mr. Narasimhan. This is another feather(book) on his cap. Believe it is his first feather.
September 6, 2023
One of the best reads
Awesome read.Will hook you till the end.Got to know about many things but not sure if it is true or not..But one thing is sure it's a good entertainer
Awesome read.Will hook you till the end.Got to know about many things but not sure if it is true or not..But one thing is sure it's a good entertainer
October 10, 2023
Very good story and story telling. Non linear of binding stories is good. But the end is bit rushed
September 5, 2024
For a debutante, this story was really spanning years and generations. Loved it.
January 30, 2026
Very interesting read, finished listening in less than 2 days & was very hooked than Sangadhara
September 22, 2018
வேறு வேறு காலங்களில் வேறு வேறு இடங்களில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையாக இருப்பதால் சலிப்பு தட்ட வில்லை என்று நினைக்கிறேன். மாந்தீரிகளீனால் ஆன பழி வாங்கும் கதை.
வேட்டி அணிவது இந்தியர்களின் வழக்கமா, இல்லை தமிழர்களின் வழக்கமா? அரிசி சோறு சாப்பிடாம மிருகங்களை வதைத்து சாப்பிடறது ... அவங்களுக்குப் பிறக்கும் குழந்தைங்க மூர்க்கமா இருக்கும் - உள்ளிருக்கும் காவித் தீவிரவாதி அப்ப அப்ப வெளி வருவான் போல!
ஆமாம், முதல் அத்தியாயத்தின் முடிவில் நான் அவளைப் பார்த்தேன் என்று வசுந்திரா போனில் யாரிடம் அழுவாள்?

December 10, 2021
ஒரு சிறந்த நாவலுக்கான பிரேம் ஒர்க் எது?
முதல் மூன்று நான்கு அத்தியாங்களுக்குள் கதையின் கருவை வாசகனுக்கு காட்டி ஆர்வத்தை தூண்டுவது.
இந்த நாவலில் முதல் நான்கு அத்தியாங்களிள் ஆசிரியர் பல முடிச்சுக்களை போடுகிறார்.
பாரால்லேல் ஸ்டோரி டெல்லிங் பார்மட்யில் தொடங்கி, பல கேரக்டர்களை அறிமுகம் செய்து, பல சுவரஸ்யமான முடிச்சுக்கள் போட்டு, அதற்கான விடைகளை கதையுடன் சேர்த்து கொடுத்து இறுதியில் ஒரு எதிர்பாராத திருப்பதுடன் கதை முடிகிறது.
A perfect screenplay elements நிறைய உள்ள ஒரு விருவிருப்பான திரில்லர் நாவல்.

May 17, 2023
Felt like watching a thriller movie with non linear screenplay set. The way the author has setup the world introducing the characters in the intial few chapters amped up my bonding with book. May be I was binge-reading it throughout. While it surely kept the tempo until the end, the overdosage of creative imaginations caused a bit of mental fatigue. Worth reading once!
Read
July 26, 2021An excellent historical cum spiritual novel.
An excellent opportunity to understand the concept of Yantra and human life.
Really appreciate the Author for his studies and narration of the story.
An excellent opportunity to understand the concept of Yantra and human life.
Really appreciate the Author for his studies and narration of the story.
August 3, 2021
Great writing
Almost a Tamil Davici code,so much characters and storyline brought together to a proper ending,definitely lot better than overrated Indira soundarrajan stories.Amust read.