மாலை...!காற்றோடு... பனியும், குளிரும் கை கோர்த்து... கடந்து செல்பவர்களின் மேனியைத் தொட்டு, தழுவி... சில்மிஷம் செய்து கடந்து சென்றது! விஷ்வஜித் பணி முடித்து... பங்களாவிற்குள் நுழைந்தான்! தாயைத் தேடினான்! ஹாலில் இல்லாமல் போக... மாடிப்படி ஏறி... சிவரஞ்சனியின் அறைக்கு வந்தான். சிவரஞ்சனியோ அவருடைய அறையில் பெரிய கம்பளிப் போர்வையை இழுத்துப் போர்த்துக் கொண்டு படுத்திருந்தார் பக்கத்தில் கவலையோடு ரவிவர்மா அமர்ந்திருந்தார்.படுக்கையில் தாயைக் கண்டு பதறிப் போனான், விஷ்வஜித். “என்னப்பா? ஏன்? அம்மாவுக்கு என்ன?”“மதியத்திலிருந்து திடீர்ன்னு பீவர்ப்பா!”ரவிவர்மா கவலையோடு கூறினார்.“ஏன் எனக்குச் சொல்லல?”“சாதாரண சுரத்திற்கு உன்னைக் கலவரப்படுத்த வேண்