திறந்த சுற்றுமுற்றும் அறைகளிலிருந்து கூட்டமாக வெளிப்பட்ட அவர்கள் அவளை மெள்ள மெள்ள வியூகமாக நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.இரண்டு பேர் அவளை இழுத்து சுழல் நாற்காலியில் அமர்த்தி கட்டிப் போட்டார்கள். ஒருவன் அவளை ஓங்கி அறைந்து தள்ள... அது உருண்டு வேறு யாரிடமோ போய் மோதி நிற்க -சுற்றி சுற்றி வந்து கதறியவளின் குரல் அடங்க அடங்க சுற்றிலும் இருந்த அந்த அந்நியர்களின் குதூகல கூவல் அதிகமாகியது.செயலற்றவனாக குனிந்து பார்த்துக்கொண்டிருந்த பரதன் மெள்ள துவளும்போது-துவண்டு தொங்கிய அவள் பின்னந்தலைமுடியைப் பிடித்து முரட்டுத்தனமாக உயர்த்திய அந்த ஆள் கூராக தீட்டப்பட்ட கத்தியை அவள் கழுத்துக்குக் கொண்டு போனான்.உயரமான மாடியிலிருந்து சரிந்து விழு&#