Jump to ratings and reviews
Rate this book

Pathaiyil Pathintha Adigal: A Life History of Manalur Maniammai, Who Dared to Break Tradition and Tread a New Path

Rate this book
ஆண் ஆதிக்கம் உட்பட ஆதிக்க சக்திகளை எதிர்த்த தாழ்த்தப்பட்ட பண்ணையடிமைகளுக்கும் உழைப்பாளிகளுக்கும் நீதி கோரிப் போராடி அவற்றிற்காக உயிரையும் கொடுத்த ஒரு பெண்ணின் வாழ்க்கை சரிதம்

200 pages, Paperback

Published January 11, 2014

2 people are currently reading
31 people want to read

About the author

Rajam Krishnan

42 books16 followers
ராஜம் கிருஷ்ணன் (பிறப்பு: 5/11/1925) மூத்த தமிழக எழுத்தாளர். சென்ற தலைமுறை எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன், தன் கதை, கட்டுரைகளால் அன்றைய வாசகர் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர். பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்த போராளி.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். 15 வயதில் கிருஷ்ணன் என்பவருக்கு மணம் செய்விக்கப்பட்டார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.

ஒரு நாவலுக்கான பொருளை முன்பே திட்டமிட்டு, சம்பந்தப்பட்ட இடங்களில் பிரயாணம் செய்து, மக்களின் வாழ்வைக் கண்டறிய அங்கேயே தங்கி உய்த்துணர்ந்த பின்னரே நாவலை எழுதுவார். இதுவே இவரது தனிச் சிறப்பாகும்.

1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார்.

பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர், அதன் விளைவாக 'முள்ளும் மலர்ந்தது' என்ற நாவலை எழுதினார். திருமதி ராஜம் கிருஷ்ணன் 'முள்ளும் மலர்ந்தது' நாவலை எழுதச் சம்பல் பள்ளத்தாக்குகளுக்கு நேரில் செல்லத் தீர்மானித்ததும், அவரது கணவர் தமது உத்தியோகத்தையே ராஜினாமா செய்துவிட்டு உடன் புறப்பட்டார். எத்தனை பேர்களால் இப்படிப்பட்ட தியாகங்களை, இலக்கிய ஆர்வத்தை முன்னிட்டுச் செய்ய முடியும்? அப்படி அங்கு அவர் தங்கியிருந்த போது மாபெரும் கொள்ளையன் மான்சிங்கின் மகன் தாசில்தார் சிங் என்பவனுடன் பேச சுமார் அரைமணி நேரம் பொறுமையாக அவனெதிரே இவர் அமர, அந்த மீசைக்கார கொள்ளையனோ, ஒரு தினசரியால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, அப்படியே இழுத்தடித்துக் கொண்டிருந்தானாம்! ராஜம் அம்மாவின் பொறுமையைக் கண்டு, பின்னர் மனம் திறந்த அவன், நான்கு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தானாம்! இவன் சுமார் 400 கொலைகள் செய்தவன் என்பது குறிப்பிடத் தக்கது!

இந்த 'முள்ளும் மலர்ந்தது' புத்தகத்திற்கு முன்னுரை எழுத திரு. ஜெயப்ரகாஷ் நாராயணணை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும், அவரைச் சுற்றி இருந்தவர் இவரை அருகிலேயே அண்ட விடவில்லை. சரி, வினோபா பாவேயிடம், சென்று வாங்கிலாம் என்றால், புத்தகத்தை (தமிழ்) முழுதும் பார்த்த அவர், தமிழிலேயே, "நான் சந்நியாசம் வாங்கிக் கொண்டவன். எனவே, என்னால் எந்த முன்னுரையும் தரலாகாது," என்றாராம்! ராஜம் அம்மாவோ, அங்கேயே சத்தியாக்ரகம் செய்து, "நீங்கள் தரும் வரை நான் இங்கேயே அமர்வேன்," என்று சொல்லி இருந்த இடத்தை விட்டு நகரவில்லையாம்! மனம் நெகிழ்ந்த பாபா (வினோபா பாவேயை அப்படித்தான் அழைத்தர்களாம்), "ஆசீர்வாதங்கள். அன்புடன், பாபா," என்று தமிழிலேயே எழுதி கையெழுத்திடாராம்! ஆனால் அந்தப் புத்தகம் எங்கோ போய்விட்டதுதான் மிகவும் வருத்தமான விஷயம்.


டாக்டர் ரெங்காச்சாரியின் சுய சரிதை எழுதுகையில், அவர் தொழில் புரிந்த எத்தனையோ ஊர்களுக்கு சென்று பயனுற்றவர்களை பேட்டி எடுத்துள்ளார். அதிகாலை நடை செல்லும் போது இவர் பிரசவம் பார்த்த ஆடு மேய்க்கும் பெண்ணையும் பார்த்து அவளைப் பேட்டி எடுத்துள்ளார். டாக்டர் ரெங்காச்சாரி வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்ப்பாராம். எனினும் ஒரு மருத்துவ கருத்தரங்கத்துக்கு செல்ல நேரிட்டபோது, உடன் சென்ற அவரது நண்பர் மட்டுமே இவர் பேசியதைப் பதிவு செய்திருந்தாராம். படுத்த படுக்கையாய் இருந்த அநத நண்பரைப் பேட்டி காண ராஜம் அம்மா, செல்கையில், டாக்டரின் பெயரைக் குறிப்பிடதுமே, 'இரு, நான் சொல்கிறேன்' என்று அந்த நிலையிலும், விரிவாக செய்திகளைப் பகிர்ந்து கொண்டாராம். (நண்பர் கஸ்தூரி ஸ்ரீநிவாசன்?) மறுநாள் பத்திரிகையை பிரித்த ராஜம் கிருஷ்ணனுக்கு தூக்கிவாரிப் போட்டதாம்! அந்த நண்பரின் மரணச் செய்தியைக் கண்டு!

திரு. கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம் வயதில் 2002ல் அவர் இயற்கை எய்தினர். ராஜம் - கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. அதன் பிறகு தனது உறவுக்காரர்கள் சிலரை நம்பி தன்னிடமிருந்த பணத்தையும் சொத்துக்களையும் விட்டு வைத்தார் ராஜம் கிருஷ்ணன். ஆனால் அவர்களோ இவரை ஏமாற்றிவிட, 83 வயதில் நிர்க்கதியாய நிற்க வேண்டிய நிலை. அவரது நண்பர்களும், ஒரு சகோதரரும் உதவி செய்து அவரை பாலவாக்கம் விச்ராந்தி முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.

ஆனால் யாரும் தன்னைப் பார்த்து இரக்கப்படுவதை இந்த நிலையிலும் விரும்பாத ராஜம் கிருஷ்ணன் இப்போதும் அதே உற்சாகத்துடன் எழுத்துப் பணியைத் தொடர்கிறார். இவரது கடைசி புத்தகம் ‘உயிர் விளையும் நிலங்கள்'. குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அதை பெண்கள் எதிர்நோக்கும் விதங்கள் குறித்து 25க்கும் மேற்பட்ட கட்டுரைகளோடு கூடிய இந்தப் புத்தகம் பெண்களுக்கு புதிய விழிப்பை உண்டாக்கும் முயற்சி.

முதுமையில் தற்போது பொருளாதார கஷ்டத்தினாலும் உடல்நலிவினாலும் கஷ்

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (85%)
4 stars
1 (14%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
15 reviews5 followers
February 10, 2016
முகநூலில் இன்றைய பரபரப்பு ஒரு தொலைக்காட்சி விவாதம் பற்றியது. விவாதங்களின் கடைசிப் புள்ளி ஒரு தீர்வாக முடிவது எல்லாம் கற்காலக் கதை. இப்பொழுதெல்லாம் விவாதங்களின் வரையறை 'சர்ச்சையால், சர்ச்சைக்காக, சர்ச்சைகளே' என்பதே. வழமைபோல், இதுவும் தனி மனிதத் தாக்குதலில் முடிந்திருக்கிறது. ஆண் பங்கேற்பாளர் என்றால் 'தேசத் துரோகி' பாதையிலும், பெண் பங்கேற்பாளர் என்றால் 'விபச்சாரி' பாதையிலும் விவாதச் சாக்கடை சமூக ஊடகங்களில் நாறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மணலூர் மணியம்மாள் பற்றிப் பேசுவது சாலப் பொருத்தம்.

கடந்த காலங்களைக் காட்டிலும் பெண்களின் கல்வி நிலை உயர்ந்திருக்கிறது. ஆணுக்கு நிகர் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதெல்லாம் ஒரு பக்கம் என்றாலும் இன்றும் நீண்ட கால நம்பிக்கைக்ள் மீது பெண்கள் கேள்வி கேட்கத் துவங்கும் போதெல்லாம் வசைகளையும் அவதூறுகளையும் கடக்கத் தான் வேண்டியிருக்கிறது. இன்றைக்கே நிலைமை இப்படியென்றால் 19ஆம் நூற்றாண்டில் எப்படியிருந்திருக்கும்? பெண்கள் வாயைத் திறந்திருக்க முடிந்திருக்குமா? ஆனால் அந்தக் காலத்தில் பிராமணக் கைம்பெண், ஆண்களைப் போல கதர் வேட்டியும் சட்டையும் அணிந்து ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடினாள் என்றால் நம்ப முடிகிறதா?

ஆமாம், சில மனிதர்கள் நம்மை பிரமிக்க வைப்பதர்க்கே பிறந்தவர்கள். அவர்களுள் ஒருவர் மணலூர் மணியம்மாள். கீழத்தஞ்சைப் பகுதியில் மணலூர் கிராமத்தில் பிறந்த மணியம்மாள், அந்தக் கால வழக்கப்படி சிறு வயதிலேயே மணமுடித்துக் கொடுக்கப்படுகிறார். கணவன் வீட்டிற்குள் அடைபட்டுக் கிடக்கிறார். கணவன் இறந்து போனதும் அதை விடக் கொடூரமான விதவை வாழ்க்கைக்குத் தள்ளப்படுகிறார். தலைமுடி மழிக்கப்பட்டு, வெள்ளுடை தரித்து, கட்டுப்பாடுகளுடன் கூடிய உணவை உண்டு, சிவ பூஜையே கதியென்று கிடக்கிறார். கைம்பெண்கள் செய்யலாகாது என்று அதற்கும் விமர்சனங்கள் வருகின்றன. சாதாரணப் பெண்கள் என்றால் உடைந்து உருக்குலைந்து போய் விடுவர் அல்லது அவற்றைக் கண்டுகொள்ளாமல் தன் பூஜையைத் தொடர்வர். ஆனால் மணி ஒரு புதிய பரிணாமம் அடைகிறார். 'கரவெளி' என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்களைப் பற்றித் தெரிய வருகிறது. பண்ணையில் இடைத்தரகர் முறையை ஒழித்து தானே நேரடியாகப் பண்ணையம் பார்க்க ஆரம்பிக்கிறார். அதற்கு அவர் எடுத்துக் கொண்ட பரிணாமம் தான் வேட்டியும் சட்டையும். இது பெண்களைப் பண்பாடு என்ற பெயரில் ஒடுக்கும் ஆண்களுக்கு எதிராகக் கிளம்பிய மனோபாவத்தின் எடுத்துக்காட்டுக் குறியீடு.

பண்ணை பார்க்க ஆரம்பித்ததிலிருந்து தலித் மக்களின் பிரச்சனைகளை நேரடியாகப் பார்க்கிறார். அவரது அன்பின் கரங்கள் அடக்குமுறைகளைத் தாண்டி, சாதியப் பிளவுகளை நீக்கி சேரிகளுக்கு நீள்கிறது. அவர்களிடையே சுகாதாரத்தை வலியுறுத்துகிறார். கல்வி அளிக்கிறார். பிரச்சனைகளுக்குத் தீர்வாகிறார். இவையெல்லாம் பட்டாமணியம் என்ற எதிரியை உருவாக்கித் தருகிறது. அவனது இன்னல்களை ஒருபுறம் சமாளித்துக் கொண்டு, தன் சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் காலத்தில் ஏற்கனவே இருந்த காந்தியப் பார்வை அவரைக் காங்கிரஸில் இணைக்கிறது.

தலித் மக்கள் முன்னேற்றமும் பெண் விடுதலையும் இல்லாமல் நாடு விடுதலையடையச் சாத்தியமில்லை என்பது காங்கிரஸ் மேலிடத்தின் பார்வையாக இருந்த போதும் அது கிராமங்களை எட்டியிருக்கவில்லை. காங்கிரஸில் பெண் இருப்பது கவுரவம் என்றிருந்த 'தாராளமயம்' அவள் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டதும் 'தளர்ந்தமயம்' ஆகிறது. இன்றைக்கிருக்கும் அதே வீண் பழிச்சொற்கள் அவரைக் காங்கிரஸிலிருந்து வெளியேற வைக்கிறது.

படித்த புத்தகங்கள், பார்த்த அனுபவங்கள் கம்யூனிசத்தின் மேல் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. மணலூர், திருவாரூர் என்று சுற்றியுள்ள ஊர்களில் தொழிலாளர்களின் பிரச்சனைக்காகப் போராடுகிறார். அதன் பயனாக தொழிற்சங்கங்கள் பிறக்கின்றன. விவசாயிக்காக கிஸான் கமிட்டி ஆரம்பிக்கிறார். அரசியல் போராட்டங்கள், செயல்பாடுகள், உடன் பிறந்தவர்கள் தரும் துன்பங்கள், பட்டாமணியம் படுத்தும் பாடு, தோழி குஞ்சம்மாவின் உதவி, சிறைவாசம், ஜெயிலில் பெண் கைதிகளுக்கான போராட்டம் என்று சுவையாக விரிகிறது.

பொதுவாக வாழ்க்கை வரலாற்று நூல்கள் போரடிக்க வைக்கும் பாணியில் இருக்கும். ஆனால் மணி சரிதம் ஆக்ஷன் திரைப்படம் போல நகர்கிறது. ராஜம்கிருஷ்ணனின் எழுத்து வன்மையா, மணியின் வாழ்வே அப்படித் தான் இருந்ததா என்றால் இரண்டுக்கும் 'ஆமாம்' தான். தவற விடக் கூடாத நூல். திசைகள் தளத்தில் இலவசமாகப் படிக்கலாம். இணைப்பு: http://thisaigal.in/Home/BookPages/29...
Displaying 1 of 1 review