Jump to ratings and reviews
Rate this book

Karuvachi Kaaviyam

Rate this book
Karuvaachi Kaviyam

334 pages

631 people are currently reading
7390 people want to read

About the author

Vairamuthu

55 books674 followers
Vairamuthu was born to Ramaswamythevar and Angammal of Mettur in a middle-class family. When he was four, the village gave way to Vaigai Dam and the family moved to Vadugapatti village, a farming community in Theni near Periyakulam.

The ambience of the village is said to have inspired him to write poems. According to him, Tamil and Rationalist movements of the sixties stimulated his poetic zeal. The speeches of Periyar & Anna, the writings of Karunanidhi and the works of eminent poets like Bharathi, Bharathidasan and Kannadasan and the life in the countryside shaped the young poet's thinking. At the age of fourteen, he was inspired by Thiruvalluvar's Thirukkural to write a Venba compilation of poetry, strictly adhering to the Yappu grammar rules of Tamil poetry.

He joined Pachaiyappa's college in Chennai where he was acclaimed as the best speaker and poet. While in his second year of B. A. and barely nineteen years of age, Vairamuthu published his maiden anthology Vaigarai Megangal. It was prescribed for study in Women's Christian College. Thus, he achieved the distinction of a student poet whose work was taken into the curriculum while he was still a student.

His second work, Thiruththi Yezhudhiya Theerpugal, in pudhu kavidhai (free verse) form was published in 1979. He made his film debut in the succeeding year when he set lyrics for Bharathiraja's Nizhalgal.

source : http://en.wikipedia.org/wiki/Vairamuthu

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
966 (45%)
4 stars
697 (32%)
3 stars
273 (12%)
2 stars
98 (4%)
1 star
103 (4%)
Displaying 1 - 30 of 133 reviews
Profile Image for Subhashini Sivasubramanian.
Author 5 books188 followers
January 9, 2024
இந்த நூல் எழுதவே பட்டிருக்கக்கூடாது.
A sexist shit glorifying the exploitation of women.

ஆணாதிக்கத்திற்கு வலிக்காமல் தடவிக்கொடுக்கும் ஓர் ‘பெண்ணிய’ பேரிலக்கியம். ‘இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு, நாயா பேயா அலைஞ்சு திரிஞ்சு சுத்தி இருக்கும் ஆண்களுக்கு எல்லாம் ஆக்கிக்கொட்டி மாண்டு போனால், நீ பெண்ணுள் பெரும்பத்தினி.. துறவிகளும் உன்னிடம் வந்து ஆசி பெறுவர்’. இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே பெண்களை ஏய்த்துப் பிழைப்பதைக் கொண்டாடிக் கதை சொல்லுமோ இந்தத் தமிழ்ச்சமூகம்!

Edit:
(27.01.2022)
இந்த நூலை நான் படித்து கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகிறது. கல்லூரி காலத்தில் இதைப் படித்த போது பகுத்தறிவு பெண்ணியம் என்பதில் எல்லாம் அவ்வளவு தெளிவில்லாத காலகட்டம். ஆங்கில நூல்களும் பெரிதாக படிக்கத் தொடங்காத காலம். தமிழில் எதைக் கொடுத்தாலும் படிப்பேன் என்ற மனநிலையில் இருந்த காலத்திலேயே இந்த நூலை முடித்ததும், ‘அடச்சை! நூலா இது!’ என்றிருந்தது.

கதையில் பெண்ணடிமைத்தனம் மட்டுமே சிக்கல் இல்லை. கதை முடிவில்லாமல் போய்க்கொண்டே இருந்தது. கள்ளிக்காட்டு இதிகாசத்தை எங்கே முடிக்க வேண்டும் என்ற தெளிவிருந்தவருக்கு இந்தக் கதையை எங்கே முடிப்பது என்று தெரியவில்லை. அப்படி இப்படி கதையை முடித்துவிட்டார். இது இதிகாசம் இல்லை, இழுகாசம் என்று தோன்றியது.
இனிமேல் வைமுவின் எந்த நூலும் படிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருந்தேன்.

கல்லூரி தமிழ் மன்றக் கூட்டத்தில் வேறொருவர் இந்த நூலைப் புகழ்ந்து தள்ளிய போது, அன்றைய இறுதியாண்டு மாணவர் ஒருவர், ‘அது ஒரு அழுவாச்சி காவியம். அதுல விமர்சனம் பண்ண என்ன இருக்கு’ என்று பதிலடி தந்தார். இந்த நூலைப் பற்றிய எனக்கிருக்கும் ஒரே நன்னினைவு அவர் இந்த நூலுக்குக் கொடுத்த பட்டப்பெயர் மட்டும் தான்.

இவ்வளவு காலம் கழித்து இந்த நூலுக்கு விமர்சனம் எழுத ஒரே காரணம், இந்த நூலை இப்போது என்னைப் படிக்கச் சொல்லி பலர் பரிந்துரைத்த வண்ணம் இருப்பது தான். இதில் சில ஆண்கள், ‘இது தமிழ்ப்பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்’ என்று சொல்லி வேறு பரிந்துரைக்கின்றனர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விளக்கம் சொல்ல என்னால் இயலாத காரணத்தால் இந்த விமர்சனத்தை எழுதியிருக்கிறேன்.
Profile Image for Shyam Sundar.
112 reviews39 followers
May 7, 2014
திரைப்படங்களிலும் நாடகத்திலும் நாயகனுக்கோ அல்லது நாயகிக்கோ மட்டும் எப்படி இவ்வளவு சோகம் என்று நான் நினைத்தது உண்டு. அது சினிமாவில் மட்டுமே சத்தியம் என்று நினைததுவுண்டு. ஆனால் இந்த கருவாச்சி காவியம் என் எண்ணத்தை மாற்றிவிட்டது.

எதை சோகங்கள், எதனை வலிகள். படிக்கும் பொழுதே எனக்கு கண்களில் கண்ணீர். காவியங்கள் என்பது இதிகாசங்களில் உள்ள ஒன்று என்று நினைத்திருந்த என் எண்ணங்களை இந்த கருவாச்சி காவியம் முற்றிலும் மாற்றிவிட்டது.

கருவாச்சியின் கணவன், திருமணமான ஆறே நாட்களில் அவளை விலக்கி வைக்க வேண்டி கூட்டியிருக்கிற பஞ்சாயத்துக் கூட்டத்தில் தொடங்குகிறது கதை. விலக்கி வைக்கப்பட்ட அவள், அவனால் கர்ப்பமாகி, குழந்தையைப் பெற்றெடுத்து கஷ்டப்பட்டு முன்னேறி...மன்னிக்கவும், இந்த அதிசயம் மட்டும் இந்தக் கதையில் நிகழவில்லை. விலக்கி வைக்கப்பட்ட அவள், அவனால் கர்ப்பமாகி, குழந்தையைப் பெற்றெடுத்து வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் அடிபட்டு, கடைசியில் தான் பிறந்த மண்ணின் மக்களுக்கு, உயிர் வாழ உதவுகிறாள் என்பதுதான் கதை. அனுபவம் ஒரு பெண்ணை(மனிதனை) எப்படி எல்லாம் பக்குவப்படுத்துகிறது என்பதை அழகாகச் சொல்கிறார் வைரமுத்து.

ஊர்ப்புறங்களில் நடக்கும் சடங்குகள், அம்மக்களின் நம்பிக்கைகள், அவர்களின் காதல், வைராக்கியம், பழிவாங்கும் உணர்வு, நேசம், இயலாமை, வக்கிரம், உக்கிரம், அறியாமை, வீட்டு வைத்தியம் என்று பல செய்திகளை மிக லாவகமாகச் சொல்ல முடிகிறது வைரமுத்துவால்.

கருவாச்சி, கட்டையன், சடையத்தேவர், பெரிய மூக்கி, கொண்ணவாயன், அழகு சிங்கம், சுப்பஞ்செட்டியார், பவளம், கனகம், பூலித்தேவன் என்று பாத்திரங்களை நம் மனதிலேயே அடுக்கி வைத்துவிட்டார் ஆசிரியர். இவர்களுக்கிடையேயான உணர்வுகள் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அழகு மட்டுமில்லை, அதில் உண்மையும் இருக்கிறது. ஒவ்வொரு கதபாத்திரத்துக்கும் ஒரு சிறப்பம்சம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கிராமங்களில் வழக்கத்திலிருக்கும் பல பழைய விஷயங்களை, புதிதாகச் சொல்கிறார் கவிஞர். கருக்கலைப்பு பற்றி வருகிற ஒரு பகுதி... கொஞ்ச நேரம் என்னை உறைய வைத்துவிட்டது. இப்படித்தானே என் பாட்டியோ, முப்பாட்டியோ செய்திருப்பாள் என்று நினைக்கும்போது, மனதைப் பிசைகிறது. முன்னுரையில் கவிஞர் நன்றி கூறும்போது சொல்லும் சில வார்த்தைகள் 'தனியொருத்தியாய் அவள் எப்படி பிள்ளை பெற்றாள் என்று மண்டியிட்டுக் காட்டினாளே அந்த மாதரசி - எனக்கு அழுகையே வந்து விட்டது'. கருவாச்சி தனியே பிள்ளை பெறும்போது, எனக்கும் இதே உணர்ச்சி மேலிட்டது. உண்மையிலேயே அழுதுவிட்டேன். மனிதன் உணர்ச்சிகளின் கலவைதானே?

எல்லாரையும் அழிச்சிட்டு ஒரு ஆள் மட்டும் பொழைக்கிறதா செயிக்கிறது ??
எல்லாரையும் பொழைக்க விட்டுட்டு தானும் பொழைக்கிறது தான் செயிக்கிறது !! (y)
Profile Image for Avanthika.
145 reviews854 followers
September 25, 2017
கிராமமோ நகரமோ, தன்னை காப்பாற்றிக்கொள்ள தன்னம்பிக்கை போதும் என்று கருவாச்சி மூலம் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறார் வைரமுத்து. ஒற்றை ஆளாக தன்னந்தனியே பிள்ளை பெற்ற பகுதி _/\_
Profile Image for Arun Radhakrishnan.
68 reviews18 followers
August 8, 2013
முடிவு பழைய தமிழ் திரைப்படைத்தை நினைவு படுத்தினாலும், மன்னிப்பு தாங்க முடியாத தண்டனை என்பதையும் வாழ்ந்து காட்டுவது போன்ற பழிவாங்குதல் கிடையாது என்பதயும் மீண்டும் உணர்த்துகிறது.

மனதை கனமாக்கும் நல்ல படைப்பு.



மனம் கவர்ந்த வரிகள்

எல்லாக் கடவுளுக்கும் பிள்ளை இருக்கோ இல்லையோ...
எல்லாப் பிள்ளைக்கும் கடவுள் இருக்கு... ஆத்தா ரூபத்துல

ஒரு மனுசன் கஞ்சப்பயலா இருக்கிறதுனால பணக்காரனாகிறனா?
பணத்த காப்பாத்த கஞ்சப்பயலாகிறானா?

தகரம் கொண்டுபுடிச்சு பெரியமூக்கிய;
சாஸ்திரம் கொண்டுபுடிச்சு கோழிக்குஞ்ச.

வாயக் கட்னவ புள்ள வளப்பா;
வயித்தக் கட்னவ புருசன் வளப்பா.

பொருளு வித்துப் பொழைக்கலாம்;
புத்திய வித்துப் பொழைக்கலாம்
நேர்மையா வித்துப் பொழைக்கக் கூடாது.

எல்லாரையும் அழிச்சிட்டு ஒரு ஆளு மட்டும் பொழைக்கிறதா செயிக்கிறது?
எல்லாரையும் பொழைக்கவிட்டுத் தானும் பொழைக் கிறதுதானே செயிக்கிறது!
Profile Image for வெங்கட் பீமசேனன்.
86 reviews1 follower
September 19, 2025
இந்த நூலின் தலைப்பிலேயே “காவியம்” எனும் சொல் இடம்பெற்றிருப்பது மிகுந்த பொருத்தமுடைய��ாகும். உண்மையிலேயே கருவாச்சியின் வாழ்க்கை ஒரு காவியத்தின் பரப்பை எடுத்துரைக்கிறது. பிறப்பிலிருந்து முதுமை வரை அவளது ஒவ்வொரு நிலையிலும் நமக்கு ஆழமான படிப்பினைகள் தந்து செல்கிறது.

கருவாச்சி என்ற பாத்திரம் தனது வாழ்நாளில் சுமந்திருக்கும் துன்பம், துயரம், சோதனைகள் எல்லாம் கூடினாலும், அவற்றை தாங்கும் வலிமை அவளிடம் உண்டு. அவள் ஒருபோதும் பிறருக்கு துன்பம் விளைவிப்பதில்லை, மாறாக நன்மையே செய்ய எண்ணும் உயர்ந்த உள்ளமுடையவள். அந்த உயர்ந்த பண்பே அவளின் சிறப்பும், காவியத் தன்மையும் ஆகிறது.

கருவாச்சியின் தாய் பெரியமூக்கி இந்த கதையின் நெஞ்சை உருக்கும் ஆளுமை. தாய் என்பதன் அர்த்தம் என்ன, தாயின் பாசம் எவ்வளவு தியாகமிகுதியானது என்பதை வாசகர் தெளிவாக உணரச் செய்கிறாள். மகளைப் பாதுகாக்கும் அவளது பாசம், ஆற்றல், அர்ப்பணிப்பு நம்மை ஆழமாக உலுக்கும்.

கருவாச்சியையும் துறவியையும் சுற்றிய உரையாடல்கள் சிறப்பானவை. கருவாச்சியை நோக்கி வாசகர் மனதில் எழும் கேள்விகளை, ஆசிரியர் துறவியின் வாயிலாகவே கேட்கிறார். இது படைப்பின் ஆழத்தையும், வாசகனை ஈர்க்கும் வல்லமையையும் காட்டுகிறது.

அதேவேளை, கொன்னவாயன் எனும் கதாபாத்திரம் கிராமத்து வாழ்க்கையின் இயல்பை மிக எளிமையாக வெளிப்படுத்துகிறது. அவனது காதல் தருணங்களும், வாழ்வின் எளிமையும், நமக்கு அங்குள்ள சூழலை நேரில் காணும் உணர்வைத் தருகின்றன.

கட்டையன் மற்றும் அவனது தந்தையின் குணவடிவமைப்பு அத்தனை நுணுக்கமாகவும், அத்தனை கோபத்தைத் தூண்டும் வகையிலும் இருக்கிறது. அந்த பாத்திரங்களை வாசிக்கும் போதே வெறுப்பும் கோபமும் நம்முள் எழுகின்றன.

இதிலேயே மிகவும் கேவலமானதும் அதே நேரத்தில் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட பாத்திரம் பேயம்மாள். அவளது வாழ்க்கை, ஒரு பெண் எவ்வாறு வாழக்கூடாது என்பதற்கான உயிர்ப்பட்ட சான்றாகவே அமைகிறது.

இந்த நூலின் முழுத் தன்மை, ஒரு கிராமத்தின் வாழ்வோவியத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. மண்ணின் மணம், மக்களின் பழக்கம், துன்பங்களும் சிரிப்புகளும் எல்லாம் கலந்து, வாசகனை அந்த உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறது.

“கள்ளிக்காட்டு இதிகாசம்” வாசித்த பின்பு அது எவ்வாறு நம்மை நாட்கள் தோறும் உலுக்கியதோ, அதேபோலவே “கருவாச்சி காவியம்” கூட நம் உள்ளத்தில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.

இது வெறும் புதினம் அல்ல; ஒரு காவியச் சாட்சியம்.
Profile Image for Rana  reads.
8 reviews
September 22, 2016
முடிஞ்சு போச்சு.

சில நாளா என் ஓய்வு நேரத்துல பங்கெடுத்து என் நாளுல ஒன்னாகி போன கருவாச்சி காவியம் கடைசி பக்கம் வந்தாச்சு. இந்தா இந்தான்னு கடைசி வார்த்தையும் மனசில பதிஞ்சு போச்சு.

வெள்ளிதிரையில மண் வாசன மணந்துருக்கு பாரதிராசா காலத்துல. வெள்ள காகிதத்துல அதே வாசம் அடிச்சிருக்கு கருவாச்சி காவியத்துல.

"ஏன்டா இத்தன நாளு சும்மா தான கெடந்த, நா சந்தையில இறங்கி பல நாள் ஆச்சு, பல வீட்டு அலமாரியில என் வாழ்க்க பழசாகி போச்சு. எந்த ஊரு திருவிழாக்கு போச்சு உன் புத்தி ஊர விட்டு ஓடி போன காலு காசு கரஞ்சு போனதும் வீட்ட தேடி வார மாறி உன் புத்தி மழுங்கி போனதும் என்ன தேடி வாரியா நீ...!!" கருவாச்சி கேக்க.

ஏ..!! ஆத்தா, நிறுத்து உன் பாட்ட. கொஞ்ச நாளா புத்தகம் வாசிக்க புத்தியில்லாம போச்சு. எம் பொழப்பே சிரிப்பா சிரிக்க, நா எங்க உம் பொழப்ப படிக்க. களைப்பா போன என் மனசு உன்ன தேடி இளைப்பாற வந்திருக்கு வழிய விடுன்னு பெரட்ட ஆரம்பிச்சிட்டன் அவ வரலாற.

நா பக்கத்த வேகமா பெரட்டுறத விட பக்கத்துக்கு பக்கம் அவ வாழ்க்கய கள்ளிகாட்டு புழுதி மணல பெரட்டோ பெரட்டோன்னு பெரட்டிடான் ஆண்டவன். கருவாச்சின்னு நெறத்துக்கு ஏத்தாப்போல பேரு வச்சதுக்கு. பொழப்புகேத்தாபோல பேரு வெச்சிருகலாம் அழுகாச்சின்னு. எப்புடி தான் தாக்குபுடிச்சுதோ இந்த வெள்ள காயிதம் கண்ணீர சிந்தாம.

தரிசா இருந்த நிலத்துல மொளச்ச கருவேல மரமா போனான் கட்டையன் அவ வாழ்க்கையில. ஒண்ணுக்கும் ஒதவாது கருவேல மரம். ஆனா காஞ்ச முள்ளால கால தச்சிடும் மேல வெளஞ்ச நிலத்த பொட்டையாக்கிடும், வேற எந்த சீவ ராசியயும் வாழ வளர விடாது. அதபோல தான் அவன் கருவாச்சியயும் அவள ஒட்டுனவகளயும் பாடா படுதிட்டு தீக்கு இறையாக போற வயசுல புத்தி தெளிஞ்சான்.

தாய மதிக்காத புள்ள நாசமாதான் போகும்ன்னு சொல்லிட்டான் அழகுசிங்கம். வேசி வீட்டுக்கு போனப்பவே பொட்டாயாகி போனான் மவன். அதனால தான் ஆத்தாளும் அடையாளம் காணாம பண்ணிட்டான் ஆண்டவன். கொல குத்தம் பண்ணாலும், நீ அவளயே கொல்ல துணிஞ்சாலும், தடம் மாறி போனாலும் அதெல்லாம் இடம் இல்லாம போகுமடா தாய் பாசம் முன்ன.

மழ அடிச்சாலும் அளவா அடிக்கனும். அதுக்கேத்த வாய்கால வெட்டனும் இல்லனா பயிருல தண்ணி தேங்கி அது அழுகிபோயிரும். அதே தான், திம்சோட பாசத்துல திகட்ட திகட்ட மெய் மறந்து போனக சடையப்பரும் கட்டையனும். சொக்கி போனக ரெண்டு பேரும், பதாளத்துல தள்ளி மண்ணள்ளி மூடிட்டா பேயம்மா. கருவாச்சி புண்ணியத்துல சாவு தள்ளி போச்சு அவனுக்கு.

நா செயிக்குறனோ இல்லயோ, தோக்கமாட்டன்னு சொன்னா கருவாச்சி. சொல்ல செயலாக்கி காட்டிட்டால.

முடிவ நாம தான் எடுத்துக்கனும். அவ செயிச்சாலா இல்லயானு. ஆனா, அவ தோக்கலாயா.

கருவாச்சிய விமர்சனம் பண்ண எனக்கு அவள உருவாக்கின வைரமுத்த விமர்சனம் பண்ண தகுதி இல்ல.

இனி நான் ஆயிரம் புத்தகம் புரட்டலாம். அதெல்லாம் இந்த கள்ளி காட்டு இளவரசிக்கு ஈடாகுமா தெரியல.
3 reviews
June 29, 2021
~ வாழ்க்கையில எத்தனை சோகம் வந்தாலும், காலம் ஏறி மிதிச்சாலும் மனம் தளராம வாழ்த்து காட்டிட்டா

~ எத்தனை தூரம், எத்தனை துயரம், எத்தனை பயணம் முள்ளக்காட்டு பாதை‌யி‌ல ஒத்தையா நடந்தே வாழ்ந்தாய்யா கருவாச்சி

~ ஏசுனவன் ஏறி மிதிச்சவன் எல்லாரயும் விட உசந்து நிக்கிறா

~ பாக்காத துன்பமில்ல. உறவு இழந்து, பிள்ளைகள இழந்து, உடமைகள இழந்து

" செய்க்காட்டியும் பரவால்ல, தோக்க மாட்டன்னு" வாழ்ந்தவ

~ அவ செ‌ய்ச்சது அவள ஏறி மிதிச்சவங்கள மட்டும் இல்ல படிக்கிறவங்க மனசயும் சேர்த்துத்தான்.


~ கருவாச்சி ஒரு இரும்பு மனுஷியே ♥️♥️♥️
Profile Image for Tharsi Karan.
50 reviews7 followers
May 3, 2020
வாழ்வின் வலிகள் ஒருவரை எப்பிடியெல்லாம் செம்மைப்படுத்தும் என்பது தான் கதை, எதிலுமே வெற்றியோ மகிழ்சியோ இல்லாத ஒருத்தியின் வாழ்ககையில் ஏதாவது நல்லது நடக்குமென்ற அவாவில் கடைசிவரைக்கும் வாசிச்சு கொண்டு போக அவள் இதுவரைக்கும் வாழ்ந்ததே அவளுக்கு மிகப்பெரிய வெற்றி தான்டா எண்டு கதையை முடிச்சிடுவார். மிகச்சிறந்த வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த கதை, கதைக்களம்.
Profile Image for H P.
29 reviews
April 21, 2021
Exploit a woman, make her life miserable, take away everything she has. She will always come back to you. Sure. *slow claps* 🤦‍♀

Two stars only for Konnavayan's story.
Profile Image for Prabhu R..
Author 3 books34 followers
February 15, 2013
Very nice portrait of the life in the Tamil Nadu village and the characters were well portrayed. The author brings the life of the people in front of the eyes of the reader where you could imagine the surroundings, the appearance of the characters. Overall a nice read!
Profile Image for Sathishkumar Manogaran.
4 reviews1 follower
February 17, 2015
ஒரு வழியா முடிச்சாச்சு இந்த புத்தகத்தை. இறுதி முடிவு இன்னும் கொஞ்சம் நல்லா இருந்து இருக்கலாம்னு தொனுச்சி, ஆனா இந்த முடிவும் ரொம்ப அருமை. ஒரு முழு நீள கிராமியப் படைப்பு. அவசியம் படித்து பழக வேண்டிய நடை.
Profile Image for Prasanna Kumar.
52 reviews8 followers
July 2, 2020
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.


தன்னம்பிக்கை உடையவரே எல்லாம் உடையவர். தன்னம்பிக்கை இருந்தால் தன்னை எந்த சூழலிலும் காப்பாற்ற முடியும் என்பதை கருவாச்சி மூலமாக வைரமுத்து அவர்கள் வடித்த காவியம். பல இடங்களில் மனதை வலிக்க செய்த காவியம். குறிப்பாக கருவாச்சி பிரசவ நேரம் கண்கள் கலங்க வைத்த ஒன்று.
Profile Image for Priya Kumar.
19 reviews4 followers
September 21, 2021
The first book that made me cry. I lived as the character while reading some pages. I felt heavy hearted for the entire story but a very positive feel at the end. Life lessons from a single woman's life
14 reviews
August 17, 2021
கருவாச்சி காவியம்- அபத்தம்.
இத படிக்க ஆரம்பிச்சப்ப ஒரு நல்ல கதை தேர்ந்து எடுத்த உணர்வு தந்த கருவாச்சி காவியம், வாசித்து செல்ல செல்ல ஒரு மோசமான கதையை தேர்வு செஞ்ச உணர்வ தந்துறுச்சு.
பல அபத்தமான நிகழ்வுகள் இருந்ததால நல்லா எழுதிருந்த சில விசயங்களை கூட ரசிக்க முடியாம பண்ணிருச்சு.
இந்த புத்தகத்தின் எழுத்து நடை எனக்கு சுத்தமா புடிக்கல.வரிகளை எல்லாம் வாசிக்கும்போது மூளைக்குள்ள வைரமுத்து குரல் தான் ஓடுது . நாவலை நான் ஒன்றி வாசிக்க முடியல.என்ன ரொம்ப தொந்தரவு பண்ணிறுச்சு வைரமுத்து குரல். பல வரிகள் ryming ஆவே வர்றதுனாள ஒரு கதை வாசிக்கிற உணர்வு அங்க அங்க போய்ருது.
சாமியார் வர்ற வரை நல்ல கதாப்பாத்திரமாக போற கருவாச்சி கதாப்பாத்திரம், சாமியாரிடம் உரையாடும் போது தன் இயல்பு இழந்து ஒரு மகா ஞானியாக ஆகிருது.
அதுவும் இல்லாம இந்த கதாபாத்திரம் அழுகுதே தவிர எந்த இடத்துலயும் கோவ படவே இல்ல.ஒரு மனிதருக்கு உண்டான எந்த இயல்பும் இல்லாம ஒரு மகா ஞானி போலவே தான் வடிவமைக்க பட்ருக்கு .இது ரொம்பவே அபத்தம்.
நாவலின் முடிவு என்னை எந்த விதத்திலேயும் பாதிக்கல. பயங்கரமா கோப படத்தான் வச்சுது. அப்படி கோப பட்டதை வேணும்னா நான் என் பாதிப்புல சேத்துக்களாம்.
தன் பிள்ளை மாதிரி வளர்த்த புலித்தேவன கட்டையன் கொண்டப்ப கூட கட்டயன் மேல அதிகமாக கோவ படாம காளியாத்தா மேல குத்தம் சொல்றா கருவாச்சி.அபத்தம்.
கருவாச்சி சாமியார் கிட்ட சொல்றா, "என் வழிக்கு வராத மகன கொல்ல எலி மருந்து வச்சிருந்தா நான் தோத்து போயிருப்பேன்". ஏன் வழிக்கு வராத மகன எலி மருந்து வச்சு கொள்ள தான் வேண்டுமா .இந்த அடிசுளாம் திருத்த முடியாதா!. என்ன வைரமுத்து இதெல்லாம்.
கொண்ணவாயன்னு சொல்ற ஒரு நல்ல கதாப்பாத்திரத்தை இன்னும் நல்லாவே விரிவா எழுதிருக்களாம் , தேவை இல்லாத சில விசயங்களுக்கு பதிலா. இந்த நூல்ல ஒரு நல்ல கதாப்பாத்திரமாக என் மனசுல நின்னது கொண்ணவாயன் தவிர யாரும் இல்ல.
இவளோ கொரை சொல்றான்.இதுல நல்லதே இல்லயானு கேட்டா இருக்கு. கருவாச்சி கொழந்த பெக்குற அத்தியாயம் மட்டும் தான். நல்ல உணர்ச்சி கரமா எழுதிருக்காரு.
நூல படிச்சு முடிக்கவும் பல பழைய படங்கள் பாத்த உணர்வு தான் இருக்கே தவற. வேற ஒன்னும் இல்ல.
இத காவியம்னு சொல்றாரு . ஆனா ஒரு கதயா கூட மனசுல தங்க மாட்டேங்குது .
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Riya.
27 reviews
October 31, 2025
Karuvachi Kaaviyam is a deeply moving novel that explores the life of Karuvachi, a woman facing societal pressure and personal struggles in a rural Tamil setting.

Vairamuthu’s writing is vivid and immersive, bringing the village, its people, and their customs to life.

The story highlights themes of gender, social norms, resilience, and dignity, showing how one woman navigates challenges with courage and determination.

What makes the book memorable is its empathetic portrayal of human struggles, making Karuvachi’s journey both relatable and inspiring.
Profile Image for Arun A.
59 reviews10 followers
December 28, 2018
கள்ளிக்காட்டு இதிகாசம் ஒரு திரைப்படமினா, கருவாச்சி காவியம் ஒரு ஆவணப்படம். கள்ளிக்காட்டு இதிகாசத்தில பெரியதேவரு வெள்ளத்தில தண்ணிக்குள்ள முங்கி, அவரு வீட்டு நிலக்கட்டையை எடுக்கும்போது படிக்கிறவங்களுக்கு எப்படி மூச்சு முட்டுமோ, அதே மாதிரி இதில கருவாச்சி கடைசில வியாதிவந்த கட்டையனை தூக்கும் போதும் மூச்சு முட்டும் (கட்டையோனோட வியாதியால் வந்த வாடை).

ஒரு படிப்பறிவில்லாத கருவாச்சி, தகப்பனையும், தாயையும் எழந்து, போதாக்குறைக்கு பழிவாங்குறதா நினைச்சு அவளை கட்டிக்கிட்டு, வயித்தில பிள்ளையோட தீத்துவிட்ட பழைய புருஷன் கட்டையானால் படுற கஷ்டம், இதுவே பாதி புத்தத்தை நனைச்சிடுச்சி.

ஒத்தபிள்ளையா பிறந்தாலும் முத்து பிள்ளையா பிறந்து, அவன் பங்குக்கு அவனும் முடிஞ்சவரை கருவாச்சியை கஷ்டப்படுத்தி, மீதி பக்கத்தில இருக்கிற கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் கிழிச்சிடுறான். அடிமேல் அடிவாங்கி, அம்புட்டையும் இழந்தாலும் தான் புறந்த பொறப்புக்கு எதாவது அர்த்தமில்லாமலா போயிரும்னு, கடைசி வரைக்கும் நம்பிக்கையோட நம்மள வழியனுப்பிவிட்டு போறா கருவாச்சி.

மொத்தமா நடந்த எல்லாத்துக்கும் ஒரே ஒரு ஆளு, ஜெயில் ராசும், அவனோட சபல புத்தியும் தான் காரணமா இருக்கேனு புத்தகம் படிக்கும்போதே மறந்திடும். அதில பெரிய குழப்பமும் வேற இருக்கு. சடையத்தேவரோட சொந்த மச்சினன் பொண்டாட்டி தான் பெரிய மூக்கி. ஜெயில் ராசு, பெரிய மூக்கியோட அண்ணன் மகன். இங்க சடையதேவரோட மகளை ஜெயில் ராசு நாசம் பண்ணிதான் மொத்த கதையே. அதில கொடுமை என்னனா ஜெயில் ராசுக்கு சடையதேவரு மக தங்கச்சி முறை. ஆனா கதையிலேயே தப்பா தான் சொல்லிருப்பாங்க. அதாவது அந்த பொண்ணு ஜெயில் ராசுவை மாமானு கூப்பிடுற முறையா சொல்லிருப்பாங்க. போகட்டும் பரவாயில்லை.

கடைசில ஊருக்கே பஞ்சம் (1876-ல வந்த தாது பஞ்சம்) வரப்ப, ஒண்ட உருப்படியா வீடே இல்லையினாலும் , குடிக்க ஒழுங்கா ஒரு வாய் சோறு இல்லைனாலும், கிடைக்கிறத வச்சு ஊருக்கே உதவுறப்பதான் கருவாச்சி காவியமாகிறா!
Profile Image for VINOTHKUMAR K.
50 reviews
November 10, 2023
One of the worst book I ever read. What ever little respect I had for Vairamuthu is thrown to dustbin after completing this book. I don't know what exact message he tried to convey through this book. The titular character faces nothing but tragedy after tragedy, not even one happy moment she will have. I seriously doubt anyone's life will be that pathetic in real life. He made Karuvachi to graciously accept her husband after all the things he has done to her. It looks like the author is trying to convey a wrong message to the society that women should ultimately sacrifice everything and simply forgive all the ill deeds of men???? For godsake, who the hell is that saint who came in the penultimate chapter and what purpose of that chapter at all. Will never read any of his books again.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Sampath Kumar.
86 reviews33 followers
August 13, 2016
நூல்களுள் சில மட்டுமே மொழிபெயர்த்தால் தன் சுவையை இழக்கும்.
அப்படிப்பட்ட நூல்கலினுள் கருவாச்சி காவியமும் ஒன்று.
கவரிமான் பரம்பரையில் பிறந்த காவியம் இது. வட்டார வழக்கே இதன் சொத்து. அதை இழந்தால் உயிர் இழக்கும்.

வரலாற்று அரசர்களையும் , வாழாத பாத்திரங்களையும் கண்டு பிரமித்து ஆடி வந்த நம்மை, ஊறிப்போன உண்மை நிலையால் உட்கார வைத்துள்ளார் வைரமுத்து.

தனிக்காட்டுப் பூவா இருக்கியேனு ஊர் சொல்ல, தரணிக்கே ராணின்னு வாழறா கருவாச்சி..

எதிர்மறையாக ஒன்றே ஒன்று மட்டும் தோன்றுகிறது.
தெள்ளிய நீர் போல் போய்க்கொண்டிருந்த புத்தகத்தின் ஓட்டம் இறுதியில் சிறிது கலங்கலாகிறது. தேவையில்லாத கம்மாய்களுக்குள் பாய்கிறதோ என்ற ஒரு எண்ணம்.
Profile Image for Krishna Srinivasan.
18 reviews3 followers
January 14, 2014
This is average rated book who want to read the village oriented story. Also the climax become cinematic and not realistic. Also I am not sure what is the period for this story. It explains one lady how she is suffered through her life and still not hatred anyone. The final message was good. I am not very much satisfied with the writing style of Viramuthu. May be many would like this type.
Profile Image for Ramya S.
10 reviews32 followers
February 11, 2016
The events in the story reveals how far we have come from the simple life a villager in a matter of 50 to 60 years. The city life is not even remotely equivalent to the hardships faced by these characters in a village. Amazing to think how our ancestors' lifestyle was. Though I'm not finished with this book yet.
Profile Image for Vimala Ellappan.
2 reviews24 followers
May 28, 2018
கதை நன்றாகதான் உள்ளது. ஆனால் இவையெல்லாம் பாரதிராஜா படங்களிலேயே பார்த்துவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு. அடுத்ததாக இதுதான் இப்படித்தான் இருக்கும் என்று எளிதில் யூகிக்க முடிகிறது. வட்டார மொழியில் எழுதியிருக்கிறார். அதன் காரணமாக சில நேரங்களில் தொடர்ச்சியாக படிக்க முடியாமல் சலிப்பு அடைய வைக்கிறது.
Profile Image for Prasanna Venkataraman.
65 reviews
July 30, 2012
This is the first book which i read. This book is heavily loaded with information about rural living style and people there. Vairamuthu s words will touch your heart...
Profile Image for Naga Raja.
11 reviews48 followers
November 13, 2014
The book which leaves you a heavy heart as you complete it. The powerful lines of Vairamuthu makes you cry at certain points.

A astounding village story.
Profile Image for Sreeraj Raju.
13 reviews
December 16, 2025
📖- കരുവാച്ചി കാവ്യം
✒️- വൈരമുത്തു
📃- 320
💷- 399
Genre- നോവൽ
Publisher- ഡിസി ബുക്സ്

സമൂഹത്തിൽ തുല്യതക്കു വേണ്ടി പോരാടുന്ന സ്ത്രീകളെ ഫെമിനിസ്റ്റ് എന്നു പുച്ഛിച്ചു ആക്ഷേപിക്കുന്നവർ ഈ നോവൽ തീർച്ചയായും വായിച്ചിരിക്കണം.ഫെമിനിസം എന്തിനു വേണ്ടി എന്ന് വായനക്കൊടുവിൽ സ്വയം മനസ്സിലാക്കും മറ്റുള്ളവർ പകർന്നു തരുന്നതിലും ശക്തി സ്വയം മനസ്സിലാക്കുന്നതിലാണ്. സ്ത്രീ സമത്വം,സ്ത്രീ സുരക്ഷ എന്നിങ്ങനെയുള്ള പദങ്ങൾ സദാചാര സമൂഹത്തിന്റെ ഗർഭപാത്രത്തിൽ ജന്മമെടുത്താലും പൂർണ വളർച്ചയെത്തും മുൻപ് നിർബന്ധിത ഗർഭച്ഛിദ്രം നടത്തിയിരുന്ന ആണധികാര ലോകത്തിൽ പൊരുതി ജീവിച്ച ഒരു പെണ്ണിന്റെ കഥ പറയുകയാണ് കരുവാച്ചി കാവ്യത്തിലൂടെ എഴുത്തുകാരൻ.മണ്ണും, വിണ്ണും, പെണ്ണും തന്റെ അധികാര പരിധിയിൽ കയ്യടക്കി വെച്ച് അനുഭവിച്ചിരുന്ന ആണുങ്ങളുടെ ലോകത്ത് ജയിക്കുമോ എന്നറിയില്ല പക്ഷേ തോൽക്കില്ല എന്നു പറഞ്ഞു പ്രതിസന്ധികളോട് മല്ലിട്ടു നിശബ്ദ പോരാട്ടം നടത്തിയ *കരുവാച്ചി* ഞാൻ വായിച്ച നോവലുകളിൽ വച്ച് ഏറ്റവും ശക്തമായ ഒരു സ്ത്രീ കഥാപാത്രം ആണ്.

ഇന്ത്യക്ക് സ്വാതന്ത്ര്യം ലഭിക്കുന്നതിനു മുൻപുള്ള കാലഘട്ടത്തിൽ തമിഴ്നാട്ടിലെ ഒരു ഉൾഗ്രാമമായ സൊക്കത്തേവൻപ്പട്ടി എന്ന സാങ്കല്പിക ഭൂമികയിൽ നടക്കുന്ന കഥയാണ് കരുവാച്ചി കാവിയം.വൈരമുത്തുവിന്റെ തൂലിക വൈഭവം,മൂലഭാഷയായ തമിഴിന്റെ തനിമ എന്നിവ ഒട്ടും ചോരാതെ കഥയുടെ ആത്മാവിനെ മലയാളഭാഷയിലേക്ക് പരകായപ്രവേശം ചെയ്തിരിക്കുകയാണോ എന്ന് തോന്നും വിധമുള്ള എസ്. വെങ്കിടാചലത്തിന്റെ വിവർത്തനം പുസ്തകത്തിന്റെ താളുകൾ മറിഞ്ഞു പോയത് അറിയിച്ചതേയില്ല. വായനക്കിടയിൽ നമ്മൾ പോലുമറിയാതെ തന്നെ നമ്മൾ സൊക്കത്തേവൻപ്പട്ടി ഗ്രാമത്തിലെ താമസക്കാരായി മാറും. കരുവാച്ചിയുടെ അതിജീവനത്തിന് കൂടെ നിന്ന് അമൃതം പകരും.കരുവാച്ചി കാവ്യം എന്ന പേര് ഈ നോവലിന് എത്ര മാത്രം അനുയോജ്യമാണെന്ന് കരുവാച്ചിയുടെ ജീവിതം നമ്മളെ ബോധ്യപ്പെടുത്തും.അവളുടെ ജനനം മുതൽ വളർന്നു വന്ന ജീവിതത്തിന്റെ ഓരോ ഘട്ടങ്ങളും സമൂഹത്തിനുള്ള സന്ദേശമായിരുന്നു. ജീവിതത്തിൽ എന്തൊക്കെ പ്രതിസന്ധികൾ വന്നാലും സ്വയം തോൽവി സമ്മതിക്കാത്തിടത്തോളം ആർക്കും നമ്മെ ജയിക്കാനാവില്ലെന്ന സന്ദേശം.

കരുവാച്ചി തന്റെ ജീവിതത്തിൽ അനുഭവിച്ച അവഗണന, അപമാനം, ഒറ്റപ്പെടുത്തൽ എല്ലാം അവളുടെ അതിജീവനത്തിനു വേണ്ടിയുള്ള ഊർജ്ജമാക്കിയപ്പോൾ അടിച്ചമർത്താൻ ശ്രമിച്ചവരൊക്കെ അവളുടെ ആത്മധൈര്യത്തിന്റെ തീയിൽ ഈയാം പാറ്റകളെ പോലെ വെന്തു വീണു.പാരമ്പര്യമായി പരസ്പരം വൈരം നിലനിന്നിരുന്ന രണ്ട് കുടുംബങ്ങൾ തമ്മിൽ ഇഴചേർത്തു ദൃഢമാക്കുവാനുള്ള ഒരു ചങ്ങലക്കണ്ണി മാത്രമായായിരുന്നു കരുവാച്ചി.എന്നാൽ കാലങ്ങളായി തങ്ങളുടെ ഉള്ളിൽ ഉരുണ്ടു കൂടിയ പകയുടെ കാർമേഘങ്ങളെ കട്ടയനും അവന്റെ പിതാവും പ്രളയമായി കരുവാച്ചിക്കുമേൽ പെയ്യിക്കുകയായിരുന്നു. ഗ്രാമപഞ്ചായത്ത് മുഖ്യന്റെ മുൻപിൽ യാതൊരു ദാക്ഷിണ്യവുമില്ലാതെ വിവാഹബന്ധം വേർപെടുത്തി അവളെ ഉപേക്ഷിക്കുമ്പോൾ പ്രതികാരം നിറവേറ്റിയ സംതൃപ്തിയായിരുന്നു കട്ടയന്റെ മുഖത്ത്.തുടർന്നുള്ള അവളുടെ ജീവിക്കാനുള്ള പോരാട്ടങ്ങളെ എതിർത്തു കൊണ്ടും സമൂഹത്തിനെ മൊത്തത്തിൽ അവൾക്ക് എതിരാക്കിയും അവൻ പ്രതികാര നടപടികൾ തുടർന്നു.

കരുവാച്ചിയുടെ അമ്മ പെരിയ മൂക്കിയുടെ കാഴ്ചപ്പാടിൽ തന്റെ മകൾ ഒരു നിഷ്കളങ്കയാണ്, തന്റെ മരണശേഷം മകൾക്ക് ഒറ്റക്ക് പൊരുതി ജീവിക്കുവാനുള്ള ത്രാണി ഇല്ലായെന്ന് ഓർത്തവർ സങ്കടപ്പെടുന്നു.എന്നാൽ അവരുടെ യാദൃശ്ചികമരണവും തുടർന്നുള്ള ഒറ്റപ്പെടലും കരുവാച്ചി എന്ന മനോബലമുള്ള സ്ത്രീയിലേക്കുള്ള മാറ്റത്തിന്റെ ആദ്യ ചവിട്ടുപടിയായിരുന്നു. " ശരീരം വേദനിക്കുന്നതു വരെ പണിയെടുക്കണം. പാടുപ്പെട്ട ശരീരം പവനാണ്. അല്ലാത്തത് മരണമാണ്. ഒരു ജോലി മാത്രം ചെയ്യുന്നത് കൊണ്ട് കാര്യമൊന്നുമില്ല. എല്ലാ ജോലിയും പഠിക്കണം. തവള മാതിരി യാവണം. വെള്ളത്തിലും കരയിലും ജീവിക്കാൻ കഴിയണം. സഹോദര ബന്ധമാണെങ്കിലും കുറച്ചു മാറി നിന്നു കൊണ്ട് ബന്ധം പുലർത്തണം നമ്മൾ പറയാറില്ലേ പഴകിയാൽ പിച്ചളയും നാറും എന്ന്" കരുവാച്ചി എന്ന കഥാപാത്രത്തിന് മറ്റൊരു മാനം രൂപപ്പെടുകയാണ് ഈ സന്ദർഭത്തിൽ.

കട്ടയന്റെ കുഞ്ഞിന് ജന്മം കൊടുത്തു വളർത്തി വലുതാക്കി ഒടുവിൽ അച്ഛന്റെ പാരമ്പര്യം കാണിച്ച് അവൻ പോയപ്പോഴും അവൾ തോല്‌വി സമ്മതിക്കാൻ തയ്യാറായില്ല. നിരന്തരം ദ്രോഹിച്ചവൻ തന്നെ കാണണമെന്ന് ആവശ്യപ്പെട്ടപ്പോൾ വെറുപ്പോ വിദ്വേഷമോ അല്ല മറിച്ച് അലിവിന്റെ കരങ്ങളുമായി കുഷ്ഠരോഗിയായ കട്ടയനെ " കൂടെ വാ കല്ലു പിഴിഞ്ഞിട്ടാണെങ്കിലും നിനക്കു ഞാൻ കഞ്ഞി തരും " എന്നു പറയുന്നിടത്ത് ആയുധങ്ങൾ ഉപയോഗിക്കാതെ ഒരു തരി ചോര ചിന്താതെ കരുവാച്ചി തന്റെ ജീവിത യുദ്ധം ജയിച്ചു കാണിക്കുന്നു. ഈ നോവലിന്റെ എടുത്തു പറയേണ്ട പ്രത്യേകത ഒരു ഗ്രാമത്തിലെ പച്ചയായ മനുഷ്യ ജീവിതം തനതായി ആവിഷ്ക്കരിച്ചിരിക്കുന്നു എന്നതാണ്. ഒരു ജനതയുടെ സംസ്കാരം, മണ്ണിന്റെ മണം,നിലനില്പിനു വേണ്ടിയുള്ള അവരുടെ പോരാട്ടം,എല്ലാം ഇഴുകിച്ചേർന്ന കാവ്യമാണിത്.

ചിലമീലിക
Profile Image for Dean.
39 reviews1 follower
April 22, 2022
இந்தப் புத்தகத்தை படித்து முடிக்கும் போது ஒரு பாரதிராஜா படம் பார்த்தது போலவிருந்தது.

வேறு பலவித எண்ணங்களும் மனதில். இந்தப் புத்தகம் மூலம் வைரமுத்து சொல்ல வருவதென்ன? பெண்ணியம் பற்றி சொல்ல வருகிறாரா? இல்லை பெண் என்பவள் எதையும் தாங்கும் இதயம் என்பதா?

அவர் எந்த நோக்கத்தில் இதை எழுதினாரோ தெரியவில்லை. ஆனால், இதை ஒரு சிறந்த நூலென நான் கூறமாட்டேன். காலத்துக்கொவ்வாத ஒரு கிராமிய இலக்கிய நூலிது.

மனிதர்களின் துன்பங்கள் மூலம் தான் நல்ல கதையை அமைக்கலாம் என்ற இலக்கியக் கருத்துண்டு. அது உண்மைதான். உலகின் அதிசிறந்த படைப்புக்கள் துன்பத்தில் விளைந்தவையே. அதற்காக இப்படியா? கருவாச்சிக்கு இவ்வளவு துன்பமா? மீண்டெழ எவ்வளவு போராடினாலும் சமுதாயம் அவளை அடித்து அடக்குகிறதே!

பகையாயிருந்த குடும்பங்கள் ஒன்று சேர ஒரு சாரார் வருகின்றனர் பெண் கேட்டு. பெரியமூக்கி மனம் நெகிழ்ந்து மகள் கருவாச்சியை சடையத்தேவரின் மகன் கட்டையனுக்கு கட்டி வைக்கிறாள். தொடங்குகிறது கருவாச்சியின் வாழ்க்கையில் குரூரம்!

தாலி ஏறிய கணத்திலிருந்து கருவாச்சி உடலிலும் மனதிலும் படும் துன்பங்கள். அப்பப்பா! ஆனாலும் வாழ்ந்து காட்டுவேன் என வைராக்கியத்துடன் வாழ்வை நகர்த்துகிறாள். எத்தனை இடர்கள். எத்தனை தோல்விகள். எத்தனை ஏமாற்றங்கள். இதை எவ்வாறு தாங்குகிறாள் என்ற கரிசனம் வாசிப்பவர்க்கு.

உறவில் இன்பம் காண்கிறாள் கருவாச்சி. தன் மகவான அழகுசிங்கம். ஆத்தாவுக்கு நேர்ந்து விட்ட கிடா என சில அழகிய உறவுகள் உண்டு. பெரியமூக்கி எனும் தாயுடனான உறவும் மிக அழகே!

சில காட்சிகளும் வைரமுத்துவின் எழுத்திற்கேற்ப அருமையானது. கருவாச்சி தன்னைத் தானே பிரசவம் பார்த்த காட்சி நெகிழவைக்கும். ஆட்டுக் கிடா கதை கதறவைக்கும். அவை சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.

மனதைக் கவரும் தரமான
கதாபாத்திர வடிவமைப்பாக வருபவளோ 'திம்சு' எனும் பேயம்மா தான். சிறந்ததொரு கதாபாத்திரம் அது. ஆனால் அதற்கு பாராட்டவேண்டியது வைரமுத்துவை அல்ல. பாரதிராஜாவை! ஏனென படித்தறியுங்கள்.

வைரமுத்துவுக்கென்ற தனித்துவ எழுத்துப் பாணியுண்டு. அது ஆங்காங்கே தென்படும். அது வைரமுத்து ரசிகர்களை மகிழ்விக்கும்.

பெண்ணியத்தின் வரையறையை எவ்வளவு காலம் தான் ஆண்கள் மட்டும் முன்மொழிவார்கள்? அதிலும் கதையின் முடிவு?! மனதிற்கொவ்வாத முடிவது. இந்தத் நூலின் மூலம் என்ன சொல்ல வருகிறார் என எனக்குச் சரியாகத் தெரியவில்லை. அதென்னவென நான் விளங்கிக்கொண்டதும் சமூகத்திற்கு உகந்ததல்ல.

வைரமுத்துவின் அதீத ரசிகரெனில் வாசியுங்கள். நல்லது படிக்கவேண்டுமென நினைத்தால் இந்நூலைக் கடந்து போய்விடுங்கள்.
Profile Image for Sharanya.
81 reviews14 followers
August 14, 2023
Okay. So where do I start . I am not usually the one to add disclaimer. Still, this one definitely needs disclaimer for Trigger Warnings: "cruelty, sexual assault and other violent acts as the descriptions of certain scenes are  raw , intense and gut wrenching". There are also objectifying descriptions and I couldn't comprehend if it's intentionally written to showcase the reality women faced during that era or not. Even as a frequent Tamil speaker the words are set in a slang that is quite difficult to interpret. I wouldn't have completed it had I not switched to a audiobook. The author is well known for his proficiency with the words and the language and it's ingenious .The plot is set at  at a time where farming and related professions are the only source of income for the people. As the the title says the story surrounds the lead named Karuvachi and her life after marriage. There are plethora of short stories or introductions of many other fellow characters which one might feel weary of. I on the other hand liked it, as every story has something to offer as it provides insight on rituals, practices, on how basic daily life activities are done before technological advancements. But in the end it all circles back and connects to Karuvachi. The growth of her character from being a naive girl to a brave independent woman is fascinating. Her story shows how circumstances and struggles changes and molds a person. My favourite thing about her is that she accepts anything and everything that is thrown at her and the way she consoles herself and moves forward. Overall, this novel is on a whole other level with its exquisite writing style. I definitely recommend this novel for all the Tamil readers out there.
Displaying 1 - 30 of 133 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.