வாழ்க்கை என்றால் என்னவென்று அறியாத இருபது வயதில் கைப்பெண்ணான ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்!தன் வாழ்நாளின் அரை பாகத்தை தன் குடும்பத்திற்காக மட்டுமே செலவு செய்தவள்! தனிமையில் வாழும் பெண்களுக்கு எதிராக நிகழும் சமுதாய அவலங்கள் மற்றும் சிறு வயதிலிருந்து அவள் சந்தித்த அவமானங்கள்!இவற்றையெல்லாம் களைத்தெறிந்து தன் கூட்டிலிருந்து வெளிவந்து சாதிக்க நினைக்கும் ஒரு முப்பத்தி இரண்டு வயது பெண்ணின் போராட்டம் நிறைந்த வாழ்க்கையைப் பற்றிய கதை தான் இந்த ‘மணிகர்ணிகா’.
அவளது அந்த போராட்டத்தில் 'காதலிற்கு வயது ஒரு தடையல்ல' என்பதை உணர்ந்து நாற்பத்தைந்து வயதான ஆடவனின் காதலை அவள் ஏற்று கொண்டாளா இல்லையா என்பதே மீதி கதை.