Jump to ratings and reviews
Rate this book

ராஜ முத்திரை #2

ராஜமுத்திரை - இரண்டாம் பாகம்

Rate this book
வானிலிருந்து விண்மீன்கள் வீசிய லேசான ஒளியிலும் பளபளத்துக் கண்ணைப் பறித்த, விலைமதிப்பற்ற வைரங்கள் பதித்த, பாண்டிய ராஜமுத்திரை மோதிரத்தைக் கையில் வாங்கியதும் கலவரத்துக்குட்பட்டதன்றி, “நீ யார் தம்பி?” என்று அச்சக் குரலும் கொடுத்த மலைமகளை முறுவல் விரிந்த முகத்துடன் நோக்கிய வாலிபன். “அண்ணி! நான் யாராயிருந்தாலென்ன? தற்சமயம் இந்த அண்ணனுக்குத் தம்பி! உங்களுக்குக் கொழுந்தன். மற்றதைப்பற்றி இப்பொழுதென்ன? நான் சொல்கிறபடி செய்யுங்கள்,” என்று கூறினான்.
அவன் அத்தனை திட்டமாகச் சொன்ன பேச்சைக் காதில் வாங்க மறுத்த மலைமகள் பெண் சுபாவத்தைக் காட்டத் தொடங்கி, “அப்படியில்லை தம்பி! நீ வந்த நாளாக உன் பெயரைச் சொல்லவில்லை. கேட்டதற்கு, 'தம்பி' என்று அழையுங்கள் அது

612 pages, Kindle Edition

Published November 8, 2022

20 people are currently reading
187 people want to read

About the author

Sandilyan

76 books390 followers
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
65 (46%)
4 stars
57 (41%)
3 stars
15 (10%)
2 stars
2 (1%)
1 star
0 (0%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Antony Jerline.
27 reviews
July 18, 2023
ராஜமுத்திரை | ஆம் பாகத்தைவிட || ஆம் பாகம் மிக விருவிருப்பாக இருந்தன. கதாப்பாத்திரங்களின் உவமைப் பேச்சு, ராஜிய விவகாரங்கள், மன்னர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, போர் முறைத்திட்டங்கள், ஆலோசனைகள், மன்னர்களின் தந்திரங்கள், புத்திக்கூர்மை, போர் முறை, போரின் வெற்றி, அறம் மற்றும் தர்மத்தை நிலைநிறுத்துதல் என்று அதீத கருத்துக்களைக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.
Profile Image for Sridhar Babu.
207 reviews6 followers
November 23, 2022
ஆசிரியர் : சாண்டில்யன்

கதாபாத்திரங்கள்: ஜடாவர்மன் வீரபாண்டியன், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், இந்திரபானு, வீரரவி உதயமார்த்தாண்ட வர்மா, பரதபட்டன், சிங்கணன், ராமவர்மன், சாத்தன்,கூத்தன், இளநங்கை, முத்துக்குமரி, குறிஞ்சி,

கதையின் வரலாற்றுப்பகுதிகள்: கொற்கை, பொதிகை மலை, கொட்டுந்தளம், கோட்டாற்றுக்கரை ((தற்போதைய கொட்டாரக்கரா)),பரலி மாநகர் ((தற்போதைய திருவிதாங்கூர்)).

புதினத்தின் மொத்த பக்கங்கள்: 1195 பக்கங்கள் ((முதல் தொகுதி 620 பக்கங்கள்; இரண்டாவது 575 பக்கங்கள்.

கதை:
ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மதுரை அரியணையில் ஏறிய பதின்மூன்றாவது நூற்றாண்டின் இடைப்பகுதியில் பாண்டியநாடு பலமற்றுக்கிடக்கிறது. அதை பொலிவுறச்செய்து பெரும் வல்லரசாக்க கனவுகண்ட சுந்தரபாண்டியன், படைதிரட்டவும், பாண்டியநாட்டுப்பொருளாதாரம் மேம்படவும் அடிப்படை ஆதாரமாக இருக்கும், பாண்டிய நாட்டின் முத்து பெருமளவில் கொற்கையின் முத்தங்காடியிலிருந்து களவு போவதை அறிந்து அந்த களவை கண்டுபிடிக்க மாறுவேடத்தில் தன் தம்பி வீரபாண்டியனையும், தன் மகள் முத்துக்குமரியையும் அனுப்புகிறான் மன்னன் .

முத்துக்குமரியுடன் கொற்கை வந்து அங்கு ஆராய்ந்த வீரபாண்டியன் அங்கே நடைபெறும் முத்துக்களவு வெறும் களவல்ல என்பதையும் பாண்டியநாட்டை எழ விடாமல் சேரமன்னராகிய வீரரவி உதயமார்த்தாண்டனால் நடத்தப்படும் அரசியல் களவு என்பதையும் நன்கு உணர்கிறான் . இந்த களவு ஆராய்ச்சியின்போது கொற்கையின் கோட்டை காவலன் மகளான இளநங்கையிடம் காதல் கொள்கிறான் வீரபாண்டியன்.

கொற்கையில் மறைந்து முத்துக்களவுக்கு பொறுப்பாளியுமான சேரமன்னன் வீரரவி உதயமார்த்தாண்ட வர்மாவிடமிருந்து இளநங்கையை காப்பாற்றுகிறான் வீரபாண்டியன். கொற்கையை கைப்பற்ற சேரமன்னன் செய்த முயற்சியையும் முறியடிக்கிறான் பாண்டிய இளவல்.

இளநங்கையையும், பாண்டிய இளவரசி முத்துக்குமரியையும் இந்திரபானு என்ற வாலிபனுடன் பொதியமலை பீடபூமியான கொட்டுந்தளத்தின் படைத்தலைவனுக்கு ஓலை கொடுத்து அனுப்பி வைக்கிறான் வீரபாண்டியன்.

கொற்கையில் தனது திட்டம் பலிக்காமல் போகவே முன்னதாகவே விரைந்து கொட்டுந்தளத்தை கைப்பற்றிய சேராமன்னன் அங்கே இளநங்கையையும், முத்துக்குமரியையும் சிறை செய்கிறான். இந்திரபானு தனது சாமர்த்தியத்தால் இருவரையும் தப்ப வைத்து பொதியமலை பள்ளத்தாக்கிலிருக்கும் காட்டுக்கோட்டைக்கு அழைத்துச்சென்றுவிடுகிறான். அங்கே அவர்களை பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் சந்திக்கிறான். பாண்டிய இளவரசி முத்துக்குமரிக்கும் இந்திரபானுவுக்கும் காட்டுக்கோட்டையில் காதல் மலார்கிறது.

சுந்தரபாண்டியன் மேற்பார்வையில் காட்டுக்கோட்டை பலமாகப்பாதுகாக்கப்பட்டும் அங்கே சேரமன்னனின் ரகசிய ஒற்றனாயிருக்கும் போசளநாட்டு தாண்டநாயகன் சிங்கணன் காட்டுக்கள்வர் உதவி கொண்டு பாண்டியநாட்டு இளவரசி முத்துக்குமரியை கடத்திச்செல்கிறான். அவள் சேரநாட்டு அரண்மனையில் பரலி மாநகரில் சிறைவைக்கப்படுகிறாள். அவளை பின் தொடர்ந்து செல்லும் இந்திரபானு, சேரநாட்டு அரண்மனையில் குருநாதரான பரதபட்டனின் உதவியோடு தன் முகத்தை விகாரமாக மாற்றிக்கொண்டு முத்துக்குமரியை தப்புவிக்க முயல்கிறான்.

பலவந்தமாக தூக்கி செல்லப்பட்டு சேர மன்னன் வீரரவியால் சிறை வைக்கப்பட்ட முத்துக்குமரி, பாண்டியர் படை திரட்டிவிட்டால் அவர்கள் முதலில் சேரநாட்டைத்தான் தாக்குவார்கள் என்ற நினைப்புடன் போசளர் மற்றும் சிங்களர் துணையோடு, படை திரட்டலையே தடுக்கவேண்டி சேரமன்னனால் களவாடப்பட்ட கொற்கையின் விலை மதிப்பற்ற முத்துக்கள்...இந்த இரண்டு பொக்கிஷங்களையும் மீட்டு வரவும், மீண்டும் சேரநாடு தலைதூக்காமல் இருப்பதற்காகவும் பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனும், இளவல் வீரபாண்டியனும் மிகச்சிறிய படையுடன் இருகூறாக பிரிந்து, முதலில் சேரநாட்டு எல்லையில் உள்ள கோட்டாற்று கோட்டையை கைப்பற்றுகிறார்கள்.

பின்னர் மிகுந்த அறிவுக்கூர்மை கொண்ட போர்திறனுடன் படை நடத்தி சேரன் தலைநகரான பரலி ((திருவிதாங்கோடு))க்குள் புகுந்து பலம் பொருந்தி சேரர் படையை நிர்மூலமாக்குகிறார்கள். போரில் சேரமன்னன் வீரரவி உதயமார்த்தாண்ட வர்மா வீரமரணம் அடைகிறான். கொற்கையின் முத்துக்கள் மீட்கப்படுகின்றன. முத்துக்குமரி-இந்திரபானு திருமணம் நடைபெறுகிறது. இந்திரபானு பாண்டியர் பிரதிநிதியாக சேரர் தலைநகரை ஆள்கிறான்.

வெற்றி வீரனாக கொற்கை திரும்புகிறான் வீரபாண்டியன்.

என் கருத்து:-
சாண்டில்யன் அவர்களின் சரித்திர நாவல்களுக்கும், மற்ற நாவலாசிரியர்களான கல்கி, பாலகுமாரன், விக்கிரமன், அகிலன் ஆகியோர்களின் சரித்திர நாவல்களுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.

மற்ற சரித்திர ஆசிரியர்கள் அவர்கள் கதைகளில் அவர்கள் விவரிக்கும் மன்னர்களின் அன்றைய ஆட்சிமுறை, எழுப்பிய கோவில்கள், அப்போது இருந்த சமய முறைகள், சமூக நிலைகள்,இராஜ்ஜிய விஸ்தரிப்புகள், அந்த மன்னர்களின் முக்கியமான கல்வெட்டுக்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட பெரும் வரலாற்றை புனைவுகளோடு கொடுப்பதுண்டு.

சாண்டில்யன் அவர்கள் வரலாற்றில் ஒரு சிறிய முடிச்சை மட்டும் எடுத்துக்கொண்டு,அதை ஒரு க்ரைம் நாவல் போல் விறுவிறுப்புடன் முதலில் இருந்து கடைசிவரை கொண்டு செல்வதில் வல்லவர்.இந்த புதினத்திலும் கொற்கையின் முத்துக்களவு என்பதை வைத்துக்கொண்டு பாண்டிய-சேர மன்னர்களுக்கிடையே நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க போர்கள்,அதில் மேற்கொள்ளப்பட்ட போர்த்தந்திரங்கள், வேவு பார்த்தல் ஆகிய நிகழ்வுகளை தனக்கே உரிய பாணியில் கொடுத்துள்ளார். இடையிடையே தனது முத்திரையான காதல் வர்ணனைகளையும் ((சில இடங்களில் வரம்பு மீறினாலும்))கலந்து கொடுத்துள்ளார் .

ஆசிரியரின் பிற நாவல்களான கடல் புறா, யவன ராணி, ராஜ பேரிகை, ராஜ திலகம் ஆகியவற்றின் உயரங்களை தொடாவிட்டாலும், படிப்பவர்களின் மனதில் முத்திரை பதிக்கிறது இந்தப்புதினம்.

எனது மதிப்பீடு : 3//5..!!!
Profile Image for Aargee.
163 reviews1 follower
February 12, 2024
Awesome means...

More than awesome!! After கடல் புறா, யவன ராணி, this is another masterpiece of the great சாண்டில்யன். Now I'm going after another novel of திரு சாண்டில்யன் once again.
Profile Image for Arun.
153 reviews
December 25, 2021
இரண்டாம் பாகத்தில் கதையின் போக்கே சற்று விசித்திரமாக இருந்தது. முக்கிய கதாப்பாத்திரமான வ���ரபாண்டியன், இளநங்கை ஆகியோரை முக்கால்வாசி கதையில் காணோம்.

இப்பாகத்தில் இந்திரபானு, முத்துக்குமரி, வீரரவி ஆகியோரும் புது பாத்திரமான குருநாதரும் தான் கதையை நகர்த்தினர்.

வேவு பார்த்தல், சிறை வைத்தல், சேர நாட்டின் பரலி மாநகர், மன ஆட்டங்கள் என்று பக்கங்கள் மெதுவாகவே நகர்ந்தன.

பாண்டியரின் போர் முறைகள் படிப்பதற்கு ருசிகரமாக இருந்தன.

கடைசி ஐம்பது பக்கங்கள் சுவாரஸ்யமாக சென்றன. சாண்டில்யனின் ஆராய்ச்சிகளுக்கு நிச்சயமாக பாராட்டுக்கள்.
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.