அநீதி ஏற்படும் பொழுது அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அதை எதிர்த்து போராடும் பல மனிதர்கள் இருக்கின்றனர் அப்படி போராடும் அனைவரும் தலைவர்கள் ஆவதில்லை. சில தலைவர்கள் உருவாகிறார்கள் அந்த தலைவர்கள் வழியில் அவர்களின் கொள்கையின் வழியில் பயணிப்பவர்களை மட்டும் தான் பார்த்து பழகி இருந்தது இந்த உலகம் இவர் பிறப்பிற்கு முன்பு வரை, பல தலைவர்களின் கருத்துக்கள் பல உண்மையுள்ள தொண்டர்களை உருவாக்கும் ஆனால் இவரின் கருத்துக்கள் மட்டும் தான் இன்று வரை பல உண்மையுள்ள தலைவர்களை உருவாக்கியுள்ளது ஏனென்றால் " மார்க்சியம் வல்லமை வாய்ந்தது அது உண்மையானது" இவரின் கருத்துக்களையும் கோட்பாடுகளையும் புரிந்துகொள்ளவேண்டும் என்று என்னும் பொழுதே அங்கு ஒரு மார்க்ஸ் பிறக்கின்றான் அக்கோட்பாடுகளை அவன் மார்க்ஸாக எண்ணி தான் படிக்கிறான் மார்க்ஸாகவே வாழ்கின்றான் ஒரு நூற்றாண்டு கடந்த பின்பும் அம்மனிதனின் எழுத்திற்கு இருக்கும் புரட்சி இவ்வுலகில் வேறு எதற்கும் இல்லை.