Jump to ratings and reviews
Rate this book

The Collected Stories

Rate this book
4 volumes

1400 pages, Hardcover

First published January 1, 1978

10 people are currently reading
163 people want to read

About the author

Anton Chekhov

5,900 books9,775 followers
Antón Chéjov (Spanish)

Dramas, such as The Seagull (1896, revised 1898), and including "A Dreary Story" (1889) of Russian writer Anton Pavlovich Chekhov, also Chekov, concern the inability of humans to communicate.

Born ( Антон Павлович Чехов ) in the small southern seaport of Taganrog, the son of a grocer. His grandfather, a serf, bought his own freedom and that of his three sons in 1841. He also taught to read. A cloth merchant fathered Yevgenia Morozova, his mother.

"When I think back on my childhood," Chekhov recalled, "it all seems quite gloomy to me." Tyranny of his father, religious fanaticism, and long nights in the store, open from five in the morning till midnight, shadowed his early years. He attended a school for Greek boys in Taganrog from 1867 to 1868 and then Taganrog grammar school. Bankruptcy of his father compelled the family to move to Moscow. At the age of 16 years in 1876, independent Chekhov for some time alone in his native town supported through private tutoring.

In 1879, Chekhov left grammar school and entered the university medical school at Moscow. In the school, he began to publish hundreds of short comics to support his mother, sisters and brothers. Nicholas Leikin published him at this period and owned Oskolki (splinters), the journal of Saint Petersburg. His subjected silly social situations, marital problems, and farcical encounters among husbands, wives, mistresses, and lust; even after his marriage, Chekhov, the shy author, knew not much of whims of young women.

Nenunzhaya pobeda , first novel of Chekhov, set in 1882 in Hungary, parodied the novels of the popular Mór Jókai. People also mocked ideological optimism of Jókai as a politician.

Chekhov graduated in 1884 and practiced medicine. He worked from 1885 in Peterburskaia gazeta.

In 1886, Chekhov met H.S. Suvorin, who invited him, a regular contributor, to work for Novoe vremya, the daily paper of Saint Petersburg. He gained a wide fame before 1886. He authored The Shooting Party , his second full-length novel, later translated into English. Agatha Christie used its characters and atmosphere in later her mystery novel The Murder of Roger Ackroyd . First book of Chekhov in 1886 succeeded, and he gradually committed full time. The refusal of the author to join the ranks of social critics arose the wrath of liberal and radical intelligentsia, who criticized him for dealing with serious social and moral questions but avoiding giving answers. Such leaders as Leo Tolstoy and Nikolai Leskov, however, defended him. "I'm not a liberal, or a conservative, or a gradualist, or a monk, or an indifferentist. I should like to be a free artist and that's all..." Chekhov said in 1888.

The failure of The Wood Demon , play in 1889, and problems with novel made Chekhov to withdraw from literature for a period. In 1890, he traveled across Siberia to Sakhalin, remote prison island. He conducted a detailed census of ten thousand convicts and settlers, condemned to live on that harsh island. Chekhov expected to use the results of his research for his doctoral dissertation. Hard conditions on the island probably also weakened his own physical condition. From this journey came his famous travel book.

Chekhov practiced medicine until 1892. During these years, Chechov developed his concept of the dispassionate, non-judgmental author. He outlined his program in a letter to his brother Aleksandr: "1. Absence of lengthy verbiage of political-social-economic nature; 2. total objectivity; 3. truthful descriptions of persons and objects; 4. extreme brevity; 5. audacity and originality; flee the stereotype; 6. compassion." Because he objected that the paper conducted against [a:Alfred Dreyfu

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
103 (43%)
4 stars
86 (36%)
3 stars
33 (14%)
2 stars
9 (3%)
1 star
4 (1%)
Displaying 1 - 20 of 20 reviews
Profile Image for MJV.
92 reviews39 followers
October 30, 2020
சென்ற வருடம் 'செகாவின் மீது பனி பெய்கிறது' என்ற எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் புத்தகம் வாசித்த தருணத்திலிருந்து, செகாவின் கதைகளை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி இருந்தது. அவருடைய நாய்க்கார சீமாட்டி கதையைப் படித்து முடித்த பின்னர் இன்னும் ஈர்க்கப்பட்டு இந்தப் புத்தகத்தை சென்ற வருடம் மதுரை புத்தக கண்காட்சியில் வாங்கி வைத்திருந்தேன். இப்போது அதை வசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டேன். செகாவின் எழுத்துக்கள் எப்போதும் சமூக நிலைகளில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று வகைப்படுத்தப்பட்டவர்களுக்கு நிகழும் மறைவான உரையாடல்களையே மையப்படுத்தி உள்ளதை உணர்ந்தேன்.

மேலும் அவரது கதைகளில் எப்போதும் சமூகம், மருத்துவம், மதம், மனிதர்களில் அன்றைய நிலை, ரஷ்யாவின் இரட்டை வாழ்க்கை முறைகள் என்று இவற்றை பற்றிய தர்க்கங்கள் இடம் பெற்றிருக்கும். சில பாத்திரங்கள் காதலைப் புரிந்து கொள்ள சிரமமப்படுவார்கள். சிலக் கதைகளில் பகடி செய்து நகைச்சுவை ததும்ப செய்திருப்பார். அதிலும் குறிப்பாக பச்சோந்தி போன்ற கதையில் வரும் காவலரையும் அந்த நாயையும் நிச்சயம் வாசித்தவர்கள் மறக்கவே முடியாது. தமிழில் இதே போன்று ஒரு கதை உள்ளது, ஆசிரியரும் கதை பெயரும் மறந்து விட்டது.

44 வயதே இந்த உலகில் வாழ்ந்த செகாவின் உலகம் நாடகங்களால் நிரம்பியிருந்ததாம். டால்ஸ்டாய், கார்க்கி, தஸ்தயேவ்ஸ்கி, புஷ்கின் போன்ற மிகப்பெரும் ஆளுமைகளுக்கு மத்தியில் தனக்கென ஒரு பாணியை வகுத்து
கொண்டு அன்றைய ரஷ்யாவை கதைகளாக்கியுள்ளார். கேள்விகள் கேட்பதும், தர்க்கங்கள் நிகழ்த்துவதும், மதத்தை கேள்வி கேட்பதும், மருத்துவத்தைக் கேள்வி கேட்பதும், துன்பத்தில் உழல்பவர்களுக்காய் பரிந்து பேசுவதும், அவர்களை துன்பத்தில் ஆழ்த்துபவர்களை எதிர்த்து கேள்வி கேட்பதுமாய் அவரது இந்த புத்தகத்தின் கதைகள் நகர்கின்றன.

பச்சோந்தி, வான்கா, தத்துக்கிளி, ஆறாவது வார்டு, மாடவீடு ஓவியரின் கதை, இயோனிச், நாய்க்கார சீமாட்டி, மணமகள் ஆகிய கதைகளும், குறுநாவல்களும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

பச்சோந்தி கதையின் சாராம்சம் அதிகாரத்தை எதிர்த்து பகடி செய்து கேள்வி கேட்கும் வடிவத்தில் ஒரு கதை. இன்று வரை இப்படிப்பட்ட நிலைமை எப்போதும் இருந்து தான் வருகிறது. ஆனால் 1800களின் இறுதிகளில் இப்படி ஒரு கதையை எழுதிப் பதிப்பித்தது என்பது, முதலைகள் நிறைந்த ஏரியின் நடுவே கம்பியின் துணையோடு நடப்பதாய் மட்டுமே பார்க்க முடிகிறது. அவ்வளவு பச்சோந்தித்தனத்தை அந்த காவலரின் பேச்சில் பார்க்கலாம். அதில் வரும் நாயும் கூட புரிந்து சிரித்திருக்குமோ என்னவோ?

அடுத்த கதையான வான்காவில், 9 வயது பெயரன் தன் தாத்தாவிற்கு எழுதும் கடிதத்தைப் பற்றியதான கதை. புதைமிதி தொழிற்சாலையில் வேலை செய்யும் வான்காவின் இளவயது வாழ்க்கை பசியையும், வலியையும், அவமானத்தையும் தவிர எதையும் அனுபவித்த தடங்கள் இல்லை. அவனுக்கான ஒரே ஆறுதல் அவனது தாத்தாவும், அவரின் நாயும், அவர்களது நினைவுகள் மட்டும் தான் இப்படி மோசமாக சென்று கொண்டிருந்த அந்த வாழ்க்கையின் திசை திசை திருப்ப அவனுக்கு கிடைத்த ஆயுதம், கடிதம்.

எப்படியோ, அங்கிருந்தவர்களிடம் கடிதம் என்ற ஒன்றை எழுதி தாத்தாவிற்கு எப்படி சேர்ப்பது என்ற பெருந்திட்டம் ஒன்றை தீட்டி விட்ட வான்கா, அந்தக் கடிதம் முழுவதும் மகிழ்ச்சி, துன்பம் என்ற இரு துருவங்களையும் மாறி மாறி தீண்டி வந்திருப்பான். இந்தக் கதையை வாசிக்கும் பொழுது, வான்காவின் இதயத்துடிப்பும், அவனது ஆற்றாமையும் கண் முன்னே வந்து போவதை தவிர்க்கவே முடியாது.

"காகிகத்தை நான்காய் மடித்தான், ஒரு கபேக் கொடுத்து அதற்கு முந்தைய தினம் அவன் வாங்கி வைத்திருந்த உறையினுள் அதைப் போட்டு மூடினான்... பிறகு சற்று சிந்தனை செய்து விட்டு, பேனாவால் மசியைத் தொட்டு எழுதினான்: "தாத்தா" - தலையைச் சொறிந்து கொண்டு மீண்டும் சிந்தித்து விட்டு எழுதினான்: 'கன்ஸ்தன்தீன்மக்காரிச், கிராமம்". அந்தக் கடிதம் கிடைத்திருக்குமா வான்காவின் தாத்தா வந்தாரா? இவை அனைத்தும் நாமே கற்பனை செய்ய வேண்டிதான் இருக்கிறது கதையின் முடிவு. கற்பனை கூட இல்லை முழுதும் தெரிந்தே விடுகிறது.

தத்துக்கிளி கதையில் வரும் ஓல்கா இவானவ்னா, அவளின் கணவர், ஓல்காவினுடைய நண்பர்களில் ஒருவராய் மாறிப் பின்னர் காதலனாக மாறும் ரியாபவ்ஸ்கி என்று முக்கோணமாக இருத்தி செல்லும் இந்தக் கதை. எப்போதும் தன்னை கலைஞர்கள் சூழ்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்ற ஓல்கா, அவளது மருத்துவக் கணவர் தீமவ் மற்றும்ரியாபவ்ஸ்கியின் பாத்திரப்படைப்புகளின் அசாத்திய நிலையும், ஒவ்வொரு இக்கட்டான நிலையிலும் எப்படியான மாற்றம் கொண்டு வாழ்க்கையைத் திசை திருப்பிக் கொள்கிறார்கள் என்பதையும் விரிவாக விளக்கும் கதை...

ரியாபவ்ஸ்கியிடம் ஒரு தரம் அவள் தன் கணவரைப் பற்றிக் கூறினாள்:
"இம்மனிதரின் பெருந்தன்மை என்னை வதைக்கிறது".

"இந்த வாக்கியம் அவளுக்குப் பரம திருப்தி அளிக்கிறது, ரியாபவ்ஸ்கியுடன் தனக்குள் உறவின் இரகசியத்தை அறிந்த கலைஞர்களால் யாரையும் சந்திக்கும் தோறும் அவள் தனது கணவரைப் குறிப்பிட்டுப் பலமாய்க் கையை ஆட்டியவாறு சொல்வாள்: "இம்மனிதரின் பெருந்தன்மை என்னை வதைக்கிறது".

செகாவின் கதைகளில் ஆறாவது வார்டு என்ற கதையே, அதிகமாக கவனிக்கப்பட்ட கதையாக இருப்பது ஏனென்று இக்கதையைப் படித்தப் பிறகு புரிந்து கொண்டேன். மனநலம் பிறழ் நிலையில் இருக்கும் 5 பேர்களைக் கொண்ட அல்லது அவர்களை தப்பிக்க விடாமல் அடைத்து வைக்க ஒரு காவலாளி, அந்த மருத்துவமனைக்கு முடியாத எல்லா வசதிகளையும் கொண்ட அந்த ஆறாவது வார்டு கதையின் நாயகர்கள் இவர்கள் தான்.

"காஞ்சொறியின் நமைச்சலும் அஞ்சாமல் நடக்க முடியுமாயின், தனிக்கட்டுக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில், என்னுடன் வாருங்கள், உள்ளே சென்று எட்டிப் பார்ப்போம். கதவைத் திறந்து கொண்டு நடையினுள் அடியெடுத்து வைக்கிறோம். சுவரோரத்திலும் கணப்பு. அடுப்படியிலும் மருத்துவமனைக் குப்பைக் கூளங்கள் மலையைக் குவிந்து கிடக்கின்றன. மெத்தைகளும், பழைய அங்கிகளும், உள்ளுடுப்புகளும், பட்டைக் கோடு போட்ட நீலச் சட்டைகளும், தேய்ந்து போன பூட்சுகளுமான வேண்டாத கந்தலும் கூளமும் நாற்றமெடுக்கும் குவியலாய்க் குவிந்திருக்கின்றன".
....
"இந்தக் குவியலின் உச்சியில் காவற்காரன் நிகித்தா படுத்திருக்கிறான். வயது முதிர்ந்த படையாள் அவன், கோட்டுக்கைகளில் பூசணம் பிடித்த பட்டைச் சின்னங்கள் தெரிகின்றன, பற்களுக்கிடையே எப்போதும் ஒரு புகைக்குழாய் வைத்திருந்தான். அடர்ந்து தழைத்திருக்கும் அவன் புருவங்களும், குடியால் சுரந்து விட்ட கடுகடுப்பான அவனது முகத்துக்கு காவல் நாயின் சாயல் அளிக்கின்றன. சிவந்த மூக்குடன் மெலிந்து முறுக்கேறிய சிற்றுருவினனாய் இருக்கிறான். அவனுடைய தோற்றம் காண்போர் கலங்கும் படியானது, அவன் முட்டிகள் தடித்துப் பருத்தவை.

மனதில் மாசின்றி நம்பகமானோராய், கண்ணை மூடிக் கொண்டு தம் கடனைச் செய்து முடிப்போராய், மந்த புத்தியினராய் இருந்து, ஒழுங்குதான் உலகிலேயே யாவற்றுக்கும் தலையாயதெனக் கொண்டு, ஒழுங்கைக் காக்க, அடியும் உதையும் போல எதுவும் உதவுவதில்லை என்பதாய் நினைக்கிறார்களே, அத்தகையோரில் இந்த நிகித்தாவும் ஒரு���ன். முகம்,மார்பு, முதுகு என்ற பேதமின்றி எங்கும் அடித்து நொறுக்குகிறான் இவன், ஒழுங்கை நிலைநாட்ட வேறு எந்த வழியும் இல்லை என்று திடமாய் நம்புகிறான்".

இப்படியான நிகித்தா தான் அந்த 5 பேர்களைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மனிதன். கோரத்தின் முகத்தைச் சித்தரித்த விதத்திலேயே, அந்த ம்ருத்துவமனை வாசிகளின் அன்றாட வாழ்க்கை என்னவென்று நம்மால் ஓரளவுக்கு யூகிக்க முடியும். உளவியல் குளறுபடிகள் வாழ்வின் தன்மையை எப்படி மாற்றும்?, எவ்வளவு எளிதில் வாழ்வின் இயக்கத்தை, உணர்வுகளின் நேர்கோட்டு பாதைகளை புரட்டிப் போடும் என்பதை விளக்கும் கதை. இந்த கதைக்கான களம், மருத்துவர் ஆந்திரேய் எபீமிச் மத போதகராகாமல் மருத்தவப்படிப்பு படித்தததால் நிர்மாணிக்கப்படுகிறது.

இந்தக் கதையின் இறுதி மூன்று பக்கங்களை, 2 அல்லது 3 முறை மீண்டும் மீண்டும் படித்தேன். இந்தக் கதையினை இதுவரை வாசிக்காதவர்களுக்காக அதை விவரிக்கப் போவதில்லை. சில சமயங்களில் உலக ஞானம், மதம், மருத்துவம், தத்துவம் இப்படி எவ்வளவு துறைகள் அறிந்திருந்தால் என்ன? இந்த உலகில் தீமை என்பதற்கும், உண்மை என்பதற்குமான வித்தியாசத்தை சில நேரங்களில் சில மனிதர்களால் மட்டுமே புரிந்து கொள்ள இயலும் போல.

ஒரு புறம் மருத்துவராகிய செகாவ், மருந்தும் மாத்திரைத் தூளையும் கொண்டு வியாதிகளை சரி செய்தால் மக்கள் மதத்தையும், தத்துவ ஞானத்தையும் விட்டொழித்து விடுவார்கள் என்று கவலை கொள்கிறார். மறுபுறம், நோயை அகற்றத் துடிப்பவர்கள் நோயின் காரணத்தையும் அகற்ற சிறிதேனும் முயலுங்கள் என்ற தர்க்கத்தை மாடவீடு ஓவியரின் கதை என்ற சிறுகதையில் முன்வைக்கிறார்.

"மருத்துவத்தை நீங்கள் எதிர்க்கிறீர்கள்".

"ஆம், இயற்கை நிகழ்வாகிய நோய் குறித்து ஆராய்ந்தறிந்து கொள்ள மட்டுமே மருத்துவம் வேண்டுமே ஒழிய நோயைக் குணப்படுத்துவதற்காக அல்ல. சிகிச்சை தேவையாய் இருந்தால், நோயின் காரணங்களுக்கான சிகிச்சையாய் இருக்கட்டும். அது நோய்க்கான சிகிச்சையாய் இருக்க வேண்டாம். பிரதான காரணமாய் இருக்கும் உடல் உழைப்பை அகற்றுங்கள், பிறகு நோய்களுக்கு இடமில்லாமல் போய்விடும். குணப்படுத்த நினைக்கும் விஞ்ஞானத்தை நான் அங்கீகரிக்கவில்லை".

அவரே மருத்துவராக இருந்ததாலோ என்னவோ அவரது கதைகள் முழுவதும் பல்வேறு குணங்களையும், தர்க்கங்களையும், காதலையும் கொண்ட மருத்துவர்கள் நடமாடுகிறார்கள். புரட்சியை விதைக்கும் எண்ணங்களை கொண்ட எளிமையான பெண்களும், சிக்கலான எண்ணக்குவியல்கள் கொண்டு களமாடும் பெண்களும் அவர் கதைகளில் பார்க்க முடிகிறது. இப்படி பல படிமங்களை நகர்த்திப் பார்க்கப் பார்க்க பல மாதிரி வேறுபட்ட பாத்திரங்களை செகாவ் படைத்திருக்கிறார். ரஷ்யாவின் எழுத்தாளர்களுக்கு உரித்தான இன்னொரு விஷயம், அவர்களின் நகரங்களை வர்ணிக்கும் போக்கில் இருக்கும் நுணுக்கங்கள். அதற்கு செகாவும் விதிவிலக்கல்ல.

நாய்க்கார சீமாட்டியின் யால்தாவும், மற்ற கதைகளில் வரும் எஸ்.நகரும், பீட்டர்ஸ்பர்கும், மாஸ்கோவும் அவர்களது பண்ணைகளும் எப்போதும் கண் முன்னே நிழல் ஆடிய படியே இருக்கின்றன.

இன்னும், இன்னும் எழுத வேண்டும் என்ற ஆவல் எழுந்தாலும், கடைசி மூன்று கதைகளைப் பற்றி வேண்டுமென்றே இந்த பதிவில் எழுதாமல் விடுகிறேன். தனித்தனியே பின்னர் எழுதலாம் என்ற நினைப்பில் நாய்க்கரைச் சீமாட்டியையும், மணமகளையும், இயோனிச் பற்றியும் எழுதவில்லை.

ரஷ்யப் படைப்புக்களை முதன் முறை படிக்கும் போது மிக அதிகமான பொறுமை வேண்டியிருக்கும். சில கதைகளை மீள் வாசிப்பு செய்து புரிந்து கொண்டேன். செகாவின் கதைகளைப் படித்துப்பாருங்கள்...
Profile Image for Vignesh Asokan.
22 reviews5 followers
November 25, 2020
படித்து முடித்த பின்பும், திரும்பவும் எடுத்து படிக்கத் தூண்டும். அந்தளவிற்கு கதாபாத்திரங்களும் விவரங்களும் சிறப்பாக இருக்கிறது.
தமிழ் மொழிபெயர்ப்பும்​ கச்சிதம்.
"ஆறாவது வார்டு" (குறுநாவல்) - ஆழமான விவரங்கள் நம்மை பதற வைக்கிறது.
Profile Image for Aithne.
201 reviews37 followers
March 14, 2019
Po moim pierwszym spotkaniu z Czechowem mogę powiedzieć tylko jedno: geniusz. Muszę sięgnąć wreszcie po wszystkie te siostry i wiśniowe sady.
14 reviews1 follower
April 25, 2021
Kendime bir yüzük yaptırsaydım, üstüne "Hiçbir şey geçmez" diye yazdırırdım. Bence hiçbir şey iz bırakmadan geçmiyor, en ufak bir adımımızın bile bugün için de, yarın için de önemi vardır. (sy. 199)
Profile Image for Shahana Dostaliyeva.
42 reviews16 followers
December 11, 2018
Anton Çexovu gündəlik həyatın mənasız görünən şeylərinin dərininə enərək, yüksək səviyyədə dramatik əsərlər yaratması ilə təsvir edirlər. Çexov rus realist teatrının ən qabaqcıl təmsilçilərindən biridir. Həqiqətən də elədir!

İlk dəfə idi ki, onun hekayələrini oxuyurdum. Və hər hekayəsində həyatın gündəlik yaşantılarından və əslində qloballaşmayan, amma qlobal səviyyəli problemlərini göz qabağına ən sadə və anlaşıla bilinən səviyyədə əks etdirərək, təsvir etməsinə heyran qaldım. Bəzi məqamlarda subnaminal mesajlar verərək, əslində var olan inancları və sorğulanmadan qəbul edilən məsələləri bir daha nəzərdən keçirməyə və həyata qarşı daha real olmağa, realist baxmağa və insana verilən şansı maksimum dərəcədə düzgün yaşamağa çağırarmışcasına düzmüşdü sətirləri. Hekayələrin ardıcıllığı və verdiyi mesajların düzgün sıralanmasına da heyran qaldım.

Sevdiyim və sevərək oxuduğum kitablar arasında öz yerini tapdı!
Profile Image for Moulidharan.
96 reviews19 followers
July 7, 2023
அந்தோன் செகோவ்-வை பற்றி செவி வழி பல நாட்கள் பல செய்திகள் கேட்டதிலிருந்தே அவருடைய கதைகளை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது . எஸ் ரா வின் அந்தோன் செகோவ் பற்றிய உரை எனக்குள் இருந்த ஆர்வத்தை மேலும் தூண்டி அவரின் இந்த புத்தகத்தை கையில் எடுக்க செய்தது . அவரை போல நானும் ஒரு இலக்கிய ஆர்வம் கொண்ட ஒரு மருத்துவன் என்பதாலோ என்னவோ அவரின் புகைப்படத்தை நான் அடிக்கடி பார்த்து ரசிப்பதுண்டு . இப்பொழுது அவரின் கதைகளை வாசித்த பின் இன்னும் அதிகமாக அவர் என்னை கவர்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் . எப்படி ஒரு மனிதன் 19 ஆம் நூற்றாண்டில் இப்படி ஒரு கண்ணோட்டத்தில் இந்த உலகத்தை பார்த்திருக்கிறான் என்பதே பெரும் வியப்பு .

இந்த தொகுப்பில் அவரின் முதல் கதையான " பச்சோந்தி " மற்றும் அவரின் கடைசி கதையான " மணமகள் " இடம் பெற்றாலும் , என்னை மிகவும் ஆழமாய் பாதித்தது அவருடைய " ஆறாவது வார்டு " எனும் குறுநாவல் தான் . அந்த கதை மருத்துவம் தொடர்பானது என்பதால் மட்டுமல்ல , அந்த கதையில் வரும் கதாபாத்திரங்களின் எண்ண ஓட்டங்களும் , ஆழ்மனதின் உணர்வுகளும் மிகவும் நுட்பமானவை . எனவே அந்த ஒரு கதையை மட்டுமே இந்த மதிப்புரையில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .

" ஆறாவது வார்டு "
ரஷ்யா வின் மூலையில் எங்கோ ஓர் கிராமத்தில் இருக்கும் ஒரு அரசு மருத்துவமனையின் ஒரு வார்டு தான் இந்த ஆறாவது வார்டு . இந்த வார்டில் சில நிரந்தர நோயாளிகளும் , பணியாளர்களும் காலம் காலமாக வசித்து வருகின்றனர் . அதில் ஒரு சில நோயாளிகளுக்கு வெளியே சென்று வர அனுமதி உண்டு . அந்த கால கட்டத்தில் அரசால் கைவிடப்பட்ட அல்லது கண்டுகொள்ளப்படாத ஒரு மருத்துவமனையாக திகழ்ந்தாலும் , அதற்கென ஒரு பொறுப்பு மருத்துவரை தவறாமல் அரசு நியமிக்கிறது . அவர்தான்
அந்த்ரே எபிமிச் . அவர் தனது பணியை தொடர்ந்து வர ஒரு நோயாளியுடன் மட்டும் மிக நெருக்கமாகிவிடுகிறார் , அவர்தான் திமித்ரிச் .நான் தான் அதிகம் படித்து இந்த உலகில் உள்ள அனைத்தையும் சிறந்த முறையில் புரிந்து வைத்துள்ளேன் என்ற மமதையில் இருந்த டாக்டருக்கு , திமித்ரிச்-உடன் பேசி பழகியவுடன் , நாம் அறிந்திருந்தது இவ்வளவுதானா , நாம் எதார்த்தம் என்று நினைத்தது யாவும் ஒரு மாயையா? என்ற பெரும் கேள்வி எழுகிறது . அதன் பின் அவர்களின் சந்திப்பு குறைகிறது , டாக்டர் எப்பொழுதும் ஏதோ ஒரு ச���ந்தனையில் மூழ்கிப்போய் , உடல்நலத்தை பேணாமல் , மருத்துவமனைக்கும் சரிவர செல்லாமல் இருக்க , அவருடைய நன்பர்களுக்கும் , உடன் பணி புரிவோருக்கும் அவருக்கு ஏதோ மனநல பாதிப்பு என்று யூகிக்க தொடங்குகின்றனர் . இறுதியில் அவரை ஏமாற்றி அவரையும் அந்த ஆறாவது வார்டிலே பூட்டி வைக்கின்றனர் . ஆனால் , அதற்கு அவர் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் அந்த வாழ்க்கையை வாழ தொடங்குகிறார் . அந்த ஆறாவது வார்டில் அவரது வாழ்க்கையின் முடிவுதான் அந்த கதையின் முடிவு . இந்த கதையை கூர்ந்து நோக்கினால் நமக்குள் பல தர்க்கங்களை உருவாக்கும் .

அந்தோன் செகோவ் -வின் எழுத்து மனித மனதின் ஆழத்தில் ஒலிக்கும் ஒலிக்கு ஒரு மொழி கொடுத்து நம்மிடம் உரையாட வைக்கிறது . அவரின் கதைகளில் மிக குறைவான கதை மாந்தர்களே உலாவினாலும் , ஒவ்வொருவரும் நம் மனதில் ஆழமாக பதிந்து விடுபவர்கள் . நாய்க்கார சீமாட்டியாக வரும் பெண் , டாக்டர் எபிமிச் , மன நோயாளி திமித்ரிச் , மணமகளாக வரும் நாதியா என இன்னும் பலர் .தன் கதைகளில் உரையாடல்களை குறைத்துக்கொண்டு , தன் கதை மாந்தர்களின் எண்ண ஓட்டங்களையும் . ஆழ்மனதின் மௌனத்தையும் தன் எழுத்தின் வழி வெளிக்கொண்டு வர பெரும்பாடுபட்டுள்ளார் . ஒரு இலக்கியம் அறிந்த மருத்துவனாக ஒரு மனிதனின் துன்பத்தை அவர் பார்க்கும் கண்ணோட்டம் முற்றிலும் மாறுபட்டது . மேலும், வாழ்க்கையை அவை செல்லும் போக்கில் செல்ல விட்டும் , சில நேரங்களில் அதன் போக்கை மாற்றியும் எப்படி அந்த வாழ்க்கையை வாழ்வது என்பது இவருடைய கதைகள் மூலம் வெளிச்சம் ஆகும் . மனிதன் தான் வாழ்வதற்காக அடிமை போல வேலை செய்யும்பொழுது அவனுக்கு அறிவியலிலும் , மருத்துவத்திலும் புரட்சிகள் ஏற்பட்டு என்ன கிடைத்துவிட போகிறது என்ற அவருடைய கேள்வி இன்றைக்கும் நம் புருவங்களை சற்று உயரச்செய்கிறது. காதலை வயதை கடந்து , காலத்தை கடந்து , விதிமுறைகளை கடந்து , வேற்றுமைகளை கடந்து பயணிக்க கூடியது என்பதை சற்று உரக்க சொல்லும் கதைகளே "நாய்க்கார சீமாட்டி மற்றும் மணமகள் " . மொழி பெயர்ப்பு இன்னும் சற்று சிறப்பாக செய்திருக்கலாம் என்பது என் கருத்து . கதைகள் நிகழும் காலமும் , களமும் நம்மிடம் இருந்து சற்று விலகியுள்ளதால் தொடக்கத்தில் கதைகளோடு ஒன்றி செல்வது சற்று கடினமாக இருக்கலாம் .உலக இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம் . " இந்த வாழ்க்கை இன்னமும் தெளிவற்றதாகவே , விளங்காத விந்தையாகவே இருப்பினும் ,அவளை அது வா வா என்று அழைத்தது , முன்னோக்கி அழைத்து சென்றது " அது போல தான் இந்த இலக்கியமும் .


----இர.மௌலிதரன் .
07-07-2023
12 reviews
September 24, 2020
**Warning: this text may contain spoilers** Ward No.6 - Anton Chekhov🖤

Happened to read this story on a lunatic asylum, a patient(Ivan) and the doctor/director of this asylum(Andrei).

Just started and went along with it like a normal story, but nearing the end, the story turned itself to a mirror showing realities that we face even today.

Andrei, the doctor seems to ignore evils happening around, he believes in philosophies where one should develop the habit of ignorance towards negativity, evil or sufferings happening around.

Ivan, on the other hand, lived throughout his life in that asylum under these evil things happening around and facing sufferings.

The conversations between these two questions most of the inner ignorance here.

At one point, when Andrei, the doctor himself turned into a patient will be admitted to the asylum, where he'll just then realise the sufferings faced by the patients inside and how bad was he ignoring all those things happening before his eyes.

We all some how or the other developed this habit of Andrei within ourselves. To overcome, everyone should face the Ivan's outside without ignorance.

"Staying ignorant(neutral) when a fire is raging is standing with the ones who lit it"
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Yadhu Nandhan.
258 reviews
March 9, 2021
சாதாரண கதைகளாக இவை இல்லை வாழ்வையே பல இடங்களில் கேள்வி கேட்கிறார். எல்லா கதைகளிலும் ஏதேனும் ஒரு கதாபாத்திரம் வாழ்கையால் சலிப்படைகிறது, அது எனக்கு என்ன சொல்கிறதெனில் சலிப்பான வாழ்வை மேற்கொள்ளாது அதில் ஒரு அர்த்தத்தை தேட சொல்கிறது.
இந்தக் கதைகளில் எல்லாம் அதில் நிகழும் தர்க்கங்களையே கதையின் முக்கிய அங்கமாய் பார்க்கிறேன், அவை கொண்டிருக்கும் ஞானம் அலாதியானது.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களே என்னை செக்கோவை படிக்கத் தூண்டினார்.
Profile Image for Şeyma Reyhan Gözen.
Author 2 books10 followers
August 4, 2020
Çehov dan hikayeler okumak gerçekten ilginç bir deneyim. Oyunlarını okumaktan daha keyifli olduğu kesin. Dile ait unsurların kullanımı çok başarılı. Rus Edebiyatı hatta Dünya Edebiyatına katkısı tartışmasız bir üstadı okumak çok keyifliydi.
Ruhun Şad Olsun.
Profile Image for Veysel.
104 reviews2 followers
October 15, 2019
Anton Çehov – Ahmak
Öğretmenin arkasından bakarken, bu dünyadan bakarken, bu dünyada güçlü olmanın ne kadar kolay olduğunu düşünüyordum
Profile Image for Nisan.
2 reviews
October 7, 2021
Anton Çehov'un seçme hikayelerinden oluşuyor.
Bazı hikayelerinin daha uzun ve güzel versiyonunu farklı bir kitaptan okumuştum.
Sevdiğim bir yazar olduğundan dolayı aynı yazıları tekrar okumak hoşuma gitti ama kısaltılmış ve basitleştirilmiş olmaları hoşuma gitmedi.
Okuduğum yayınevi: Bilge Kültür Sanat Yayınevi
Profile Image for Hacı Demir .
74 reviews6 followers
February 2, 2023
Kitabın Adı: ANTON ÇEHOV’DAN HİKAYELER
Kitabın Yazarı: ANTON ÇEHOV
Tür: Hikayeler

Rus yazar Anton Çehov'un VİŞNE HAHÇESİ ve ALTINCI KOĞUŞ kitaplarından sonra okuduğum 3. kitabı. Çehov ve hikayeleri okumak gerçekten ilginç bir deneyim. Hikayelerinin çoğu etkileyici ve kaliteli. Yazarın hayatına baktığımızda dünya edebiyatında kısa öykü türünde en büyük yazar olarak gösterilmesini fazlasıyla hakediyor.
Profile Image for Michael Steger.
100 reviews10 followers
April 8, 2012
These are excellent translations, in a beautiful edition.

I just finished the final story in the collection, and, based on these stories, I am prepared to say that Chekhov surely was one of the greatest psychologists who ever lived.
Profile Image for Darren.
4 reviews9 followers
August 18, 2012
A great collection....something to dip into at random....good stories and masterful characterisation.
Displaying 1 - 20 of 20 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.