Jump to ratings and reviews
Rate this book

நாகதேவி

Rate this book
நாகதேவி எட்ட பஞ்சணையில் உட்கார்ந்திருந்த போதும், கட்டிலை விட்டிறங்கி நின்று நாகர்கள் கட்டளையை விளக்கியபோதும் அவள் உடலிலிருந்து எழுந்த சுகந்தம் உபேந்திரனை ஓரளவு ஈர்த்ததென்றால், அவள் அவனருகில் வந்ததும் அந்தப் பரிமளம் அவன் உணர்ச்சிகளைப் பெரிதும் அள்ளவே செய்தது. அவள் அவன் குழலைப் பிடித்திழுத்துக் குனிய வைத்த போதே அவள் மார்புக்கெதிரே மிக அருகே அவன் முகம் இருந்த காரணத்தால் லேசாகக் கச்சை இடங்கொடுத்துத் தெரிந்த அவள் மார்பு விளிம்புகளும் இடையே ஓடிய குறுகிய பாதையும் அவன் கண்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியதல்லாமல், அருகாமையின் காரணமாகப் பெருகிவிட்ட பரிமள சுகந்தத்தின் முழு வேகம் அவன் சுவாசத்தின் மூலம் இதயத்திலும் சென்று உறைந்து அவனை நிதானமிழக்

264 pages, Kindle Edition

Published October 4, 2022

27 people are currently reading
174 people want to read

About the author

Sandilyan

76 books390 followers
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
17 (22%)
4 stars
23 (31%)
3 stars
19 (25%)
2 stars
9 (12%)
1 star
6 (8%)
Displaying 1 - 6 of 6 reviews
2,121 reviews1,108 followers
August 14, 2018
சோழ மன்னன் ராஜேந்திர சோழனின் திறமையையும் நாட்டை ஆளும் முறையையும் சொல்லும் மற்றொரு புதினமாக நாகதேவி அமைந்திருக்கிறது.

சோழ அரசன் தன் எல்லைக்குட்பட்ட நாகப்பட்டினத்தில் புத்த விஹாரத்தை சாவக மன்னருக்காக எழுப்ப சம்மதித்ததையடுத்து அதைத் தங்களின் விரோத செயலுக்கு கூடாரமாக்க சுத்ததத்தர் என்ற துறவு மூலம் பல திட்டங்கள் நடந்தேறுகிறது.

நாகபட்டினத்தின் படைதலைவரான நாகர் இனத்தைச் சேர்ந்த உபேந்திரனை தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க சாவகர் நாட்டில் இருந்து அவன் இனத்தைச் சேர்ந்த தலைவியாக நாகதேவி வந்து சேர்கிறாள்.

தன் அழகால் உபேந்திரனை வளைத்து தன் பேச்சை கேட்க வைக்கப் பலவகையிலும் நாகதேவி முயன்றாலும் ஊரில் இருக்கும் மருதியின் மீதே அவனின் பார்வையும் இதயமும் செல்கிறது.

தன்னைப் போலவே இருக்கும் மருதியின் இடத்தில் தான் அமர்ந்தாலும் உபேந்திரன் தன்னை நாகதேவியாகக் கண்டறிவதால் அவனைக் கடத்தியே செல்ல வேண்டிய சூழலில் மருதியை தன் பகடையாக உபயோகிக்கிறாள் நாகதேவி.

புத்த துறவியாகத் தன்னைத் தமிழ்நாட்டில் அடையாளப்படுத்திக் கொள்ளும் சுத்ததத்தர் தனக்குப் பிறந்த இரட்டை குழந்தையில் ஒன்றை சாவக நாட்டிலும் மற்றொன்றை நாகப்பட்டினத்திற்கு எடுத்து வந்து அனாதையாக விட்டதும் அக்குழந்தைகள் தான் நாகதேவி மற்றும் மருதி என்பதை சோழ அரசனின் அதிகாரியான இந்தளதேவர் கண்டறிந்ததால் சூழ்ச்சிபுரிய வந்த அனைவரையும் நாடுகடத்திவிட்டுக் கடமை தவறிய வீரனான உபேந்திரனுக்கு மேலும் பல பொறுப்புகள் கொடுக்கிறார் மன்னன் ராஜேந்திர சோழர்.

தன் நாட்டின் ஒரு பகுதியான நாகப்பட்டினத்தைப் பிடிக்க நினைத்த சாவக மன்னனின் மீது போர் தொடக்கும் ஆயத்த பணிகளை உபேந்திரனுக்குக் கொடுத்த பொறுப்புகள் மூலம் இனிதே தொடங்கி வைக்கிறார் சோழ மன்னன்.
Profile Image for Balaji Srinivasan.
147 reviews10 followers
August 12, 2018
வழக்கமான சாண்டில்யன் நாவல். ஒரு நாயகன். இரு நாயகிகள். சற்றே விறுவிறுப்பாக பக்கங்கள் உருளுகின்றன.

ஆரம்பத்தில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்ப்பார்ப்புடன் நகரும் அத்தியாயங்கள் போக போக சற்றே தொய்வுடன் நகர்கிறது. ஒரு முறை படிக்கலாம்.
Profile Image for Ragav.
11 reviews
May 1, 2020
Nagadevi by sandilyan (Tamil)

I Bought this book on 21st Jan 2018, and after nearly 2 years I picked it up at last

I Picked this up from the Chennai book fair, only time I’ve been there, I chose it for two reasons first I wanted to start reading sandilyan but before starting with his bigger works like kadal pura and yavana rani I wanted a light read. That brings me to the second reason, when I read the summary, I knew this book covers something about the construction of Naagai ‘Soodamani Viharam’ (Ponniyin selvan fans can relate). So, I got intrigued and bought this.

Okay coming to the review, the book did not divulge much historical information, even the author says in the preface that, barring one character who makes appearance in the last few chapters everyone else is fictious. Plot revolves around Upendran a chieftain and the customs officer of the nagapattinam port, he is entrusted with many key responsibilities including overseeing imports/exports by Rajendra chozhan upendran is a key figure. Ellan is his trusted bodyguard. Then there is a Buddhist monk ‘suthadattar’ who is a key figure diplomatically and also the one who oversees the construction of buddhist soodamani viharam (built by chozha empire as a kind gesture and on request by srivijayan empire) , then we have Nagadevi , the titular character , A mystic foreign woman , mesmerizing beauty, and who has come to Nagai with a plot to takeover nagai for the Vijaya empire. Then Maruthi, a local girl from the port town who also happens to be a lookalike of Nagadevi.

What follows is series of happenings over 4 days in waters of nagapattinam, its tale of impersonation, where the characters deceit, betray, fall in love and over smart each other.
The genre is historical fiction and overall the sub plot can be described by one word – a triangular love story( I later found out this is sandilyans favourite narrative style). Unlike Kalki (whose books I cherish and have read multiple times), sandilyan doesn’t shy away in use of words, especially in detailing the romantic encounters. There are also some twists towards the end but nothing grand. The biggest strength of the book is also the language and narration - as one could visualize the sceneries and the locations described in the book without much effort.

It is very easy read, I would recommend this book to any tamil historical fiction fan and those who’d like to start with some light works of sandilyan, I’ll be reading his other works soon in this year.

I rate this book 3 of 5.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Dharshini.
70 reviews2 followers
September 10, 2023
இக்கதை 🐯 இராஜேந்திர சோழன் 🐯 காலத்தில் நடக்கும் கதை.
சோழர்களின் படைத்தலைவனான உபேந்திரன் நாகைப்பட்டினத்தின் தலைவன் , நாகர் வம்சத்தைச் சேர்ந்தவன். அவனை தன் வசப்படுத்தி நாகை சூடாமணி விகாரத்தில் ஒரு மர்மத்தை சோழ தேசத்திற்கு எதிராக சதி செய்ய நினைக்கிறாள் சாகவகத்தில் இருந்து வந்திருக்கும் நாகதேவி. அவனை அடிமைப்படுத்த நாக இலச்சினையை பயன்படுத்துகிறாள். அவனை மோக வலையில் சிக்கி வக்க முயல்கிறாள் . அவளின் இத்தகைய குணத்தை எதிர்பாராத உபேந்திரன் அதிர்ச்சி அடைந்து அவளைப் போல இருக்கும் மருதியிடம் கோவம் கொள்கிறான். மருதியை வைத்து உபேந்திரனை கப்பலுக்கு கடத்துகிறாள் நாகதேவி , பின்பு அவனுக்கு மூன்று நாட்கள் கெடு விதிக்கிறாள். மருதியை வைத்து நாகதேவி ஆடும் சதிராட்டம் என்ன ? உபேந்திரனின் திட்டம் என்ன ? எதிர்பாராத இந்தளதேவரின் வருகையால் என்ன மாற்றம் நடந்தது. இராஜேந்திர சோழனின் தீர்மானம் என்ன என்பதே இக்கதை...
👭🏻 இராஜேந்திர சோழன் காலத்தில் நடக்கும் கதை என்றாலும் அவர் கதையில் கடைசியில் வருகிறார்‌. சில பகுதியில் வந்தாலும் அவரின் அறிவுக்கூர்மை வியக்க வைக்கிறது.
👭🏻 எந்த ஒரு மர்மத்தையும் கண்டறிவான் என்று சோழ தேசத்தின் அரசனால் புகழ் பெற்ற இந்தளதேவரின் வருகை புத்த பிஷுவான சுத்ததத்தரை அச்சுறுத்துகிறது எதற்காக அவர் பயம் கொள்ள வேண்டும்?
👭🏻 உபேந்திரன் நாகதேவிக்கு மருதியை கொண்டு விரிக்கும் வலை என்ன ? நாகதேவியை தடுக்கும் அதிகாரம் கொண்டவர் யார்? 🤧
👭🏻நாகதேவியால் மருதிக்கு நடக்கவிருந்த ஆபத்தை அவளின் வழியைப் பின்பற்றி முறியடிக்கும் காட்சி அபாரம் 🥳
👭🏻 இராஜேந்திர சோழனின் திட்டமும் எதிர்பாராத திருப்பம் !!! 🐯 புலி எப்போதும் பதுங்கி தான் பாயும் 🐯
👭🏻 நாகதேவி அறிவும் அழகும் கொண்ட மாயதேவி தான் . தன் அழகைக் கொண்டு உபேந்திரனை அடைய நினைத்து பின்பு அவன்மேல் காதல் கொள்கிறாள். அந்த காதல் நிறைவேறாத போது அவளின் உணர்வை அழகாக எழுதியுள்ளார் சாண்டில்யன். அதேபோல் யார் நாகதேவி யார் மருதி என்று நாம் கண்டுபிடிக்க முடியாத படி எழுதியுள்ளார்.
👭🏻 எப்போதும் தன் தலைவனுக்கு துணையாக இருக்கும் எல்லனும் சுத்தவீரன் தான் 😃
காதல் , வர்ணனை விரும்பும் வாசகர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம் 📚
Profile Image for Aargee.
163 reviews1 follower
August 30, 2024
Once again a fantastic novel by சாண்டில்யன் Sir based on சோழர் , நாகர் & பரதவர்
Profile Image for Kumaran Vellaisamy.
37 reviews38 followers
January 24, 2015
கதை எதுவாயிருந்தாலும் அதில் காதல் இல்லாமல் இருக்காது என்பது இல்லாமல், இரண்டு பெண்களிடம் நாயகன் சிக்கிக் கொள்வான் என்பது மெல்ல மெல்ல உறுதியாகிறது சாண்டில்யனைப் பொருத்தவரை
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.