இமையம் (Imayam, nom de plume of Ve. Annamalai), என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித்து சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
He is also the recipient of the Agni Aksra Award, the Tamil Nadu Progressive Writers Association Award, the N.L.C. Award, and the Thamizh Thendral Thiru.V.Ka. Award, among others, and has been honored by the governments of Kerala, TamilNadu and India.
இது நான் வாசிக்கும் இமையத்தின் ஐந்தாவுது புத்தகம் - ஆறுமுகம்.
கதை எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிகிறது. இதே போல் தான் ஆறுமுகத்திற்கும் அவன் சந்திக்கும் மனிதர்களுக்கும், சிலருக்கு இன்னும் தொடரும் ஆறுமுகத்தை போல. உழைப்பு சுரண்டல், பாலியல் வன்முறைகள் என நாவல் விரிகிறது.
அவர்கள் வீட்டு சிம்னி விளக்கின் முன் அவர்களுடனே அமர்ந்திருப்பது போல, அவர்களுடன் ரிக்ஷாவில் பயணம் செய்வது போல, அவர்களுடனே கூலி வேலைக்கு, சமையல் வேலைக்குச் செல்வதை போல அந்த சூழலுடன் நாமும் பயணிப்போம்.
இமையத்தின் எழுத்துலகமே அப்படித்தான். நான் இமயத்தை தொடர்ந்து வாசிப்பதற்கான காரணம் அவரின் எழுத்து நடையும் கூட ( 'எங் கதெ' நாவல் )
அந்த வட்டார மக்களின் பேச்சு வழக்கிலே நாவல் நகர்கிறது. சிரமமின்றி கதாபாத்திரங்களின் மனதில் நுழைந்து அவர்களின் எண்ணங்களை அழகாக கொண்டு வருகிறார். இந்த உயிர்களை அவர் அறிந்ததால்தான் இது சாத்தியம் என்று நினைக்கிறேன்.
இமையத்தின் "செல்லாத பணம்"மும் இதே போல் தான் அனுபவத்தின் முழுமையினாலே அப்படி ஒரு நாவலை எழுத முடியும்.
ஆறுமுகத்தை பத்தி பேசணும் என்றால் அவனை சுற்றியுள்ள எல்லாமே தான் அவன். ஆறுமுகம் நாவல் முழுக்க விரைவு இருக்கிறது மனுஷங்களோட வாழ்வு, எளிய விளிம்பு நிலை வாழ்வு. செத்த தூக்கி பொட அல்ல வேணும் என்கிற வாழ்வு. விபச்சாரம் சார்ந்த பின்னி கெண்ட நாவல்கள் இப்படி தான் என்று வெளிச்சம் போட்டு காட்டும். இங்க வெறும் அசை பட்டு இங்க வரல. அன்றாட பிழைப்பு எப்படி எல்லாம் சீப்பாத்து இருக்கு. அதை எப்படி கூட இந்த ஒரு வாழ்வியலை சொல்லிட முடியும் என்று ஆறுமுகம் வாயிலாக இமயம் காண்பித்துள்ளார். தனபாக்கியம், தாத்தா, சின்ன பொண்ணு வசந்தா, ராமன் குப்புசாமி, பாக்கியம், ஜிப்மர் மருத்துவமனை, பாண்டிச்சேரி மேச்சேரி அப்படியே அந்த வாழ்க்கையோடு ஒன்றி ஒரு வலியை தருகிறது. இமயத்தோட எந்த பக்கமே சோட போகாது. மூன்று நாவல்கள் வாசித்து உள்ளேன் மூன்றுமே மிக மிக அற்புதமான காவியங்கள் என்று தான் சொல்ல வேண்டும். கண்ணீர், சாதி அடக்குமுறை, உறவுகள் தரும் வலி. அம்மண்ணில் உள்ள வலிகளை, அம்மண்ணின் மொழியிலேயே நம்மை கலங்க செய்கிறது.
தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளரும் சிறுவன் ஆறுமுகம் எதிர்பாரா நேரத்தில் எதிர்கொள்ளும் சம்பவத்தால் அவன் வாழ்வு இப்படி திசை மாறுகிறது என்பதே இந்த நாவல்.
இளம்வயதிலேயே தனது கணவனை இழந்த தனபாக்கியம், தன்னுடைய ஒரே மகனின் எதிர்காலம் மற்றும் படிப்பினை கருத்தில் கொண்டு தன் கிராமத்தை விட்டு பாண்டிச்சேரியில் இடம்பெயர்கிறாள். அங்கு தன் தாய் ஒரு ஆங்கிலேய ஒருவனுடன் படுத்திருப்பதை கண்ட ஆறுமுகம் அதனை ஜீரணிக்க முடியாமல் வீட்டை விட்டு ஓடி விடுகிறான். அங்கு இருந்து ஆறுமுகம் சமுதாயத்தின் இன்னொரு முகத்தை பார்க்க ஆரம்பிக்கிறான். அதன் பிறகு அவன் அடுத்தடுத்த சந்தித்த மனிதர்கள், அவர்களால் அவள் வாழ்வில் கண்ட தாக்கங்கள், இறுதியில் அவன் தனபாக்கியத்தை சந்தித்தானா என்பதே நாவல்.
வாழ்க்கை என்றால் என்ன என்று ஆறுமுகம் செக்குமேட்டிலும் அங்கு தான் சந்திக்கும் வசந்தா, சின்னப்பொண்ணு, அபிதா, பாக்கியம் மற்றும் லட்சுமி போன்ற பெண்களின் வாயிலாக தெரிந்துக் கொள்கிறான். எப்போதும் இமையம் அய்யா அவர்களின் கதைகளில் உள்ளது போல் இதிலும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை பதிவு செய்துள்ளார். இந்நாவலில் பாண்டிச்சேரி செக்குமேட்டில் வாழும் பாலியல் தொழில் செய்யும் பெண்களின் வாழ்வு முறை பொருளாதாரம், அன்றாட அவலங்களை ஆழமாக பதிவு செய்துள்ளார். நாவலில் வரும் ஒவ்வொரு மாந்தர்களின் வலியை வாசிப்பின் வழியே நாமும் உணர்ந்து கொள்ள முடிவது தான் இந்த நாவலில் வெற்றி.